Friday, July 8, 2011

புயலைக்கிளப்பிய தயாநிதி மாறன் மீதான டெஹெல்கா குற்றச்சாட்டு ஆவணங்கள் !

புயலைக்கிளப்பிய  தயாநிதி மாறன் மீதான
டெஹெல்கா குற்றச்சாட்டு ஆவணங்கள் !

கெட்டிக்காரன் புளுகு எட்டு  நாளைக்கு – என்று
கிராமப்புறங்களில் சொல்வார்கள்.

சிலரை பல நாள் ஏமாற்றலாம் -
பலரை  சில நாள் ஏமாற்றலாம் -
எல்லாரையும் எப்போதுமே ஏமாற்றிக்கொண்டே
இருக்க முடியாது  – என்று ஆப்ரகாம் லிங்கன்
யாரை நினைத்து சொன்னாரோ -
நம்ம ஊர்  ஆசாமிகளுக்கு அப்படியே பொருந்துகிறது!

2 ஜி விவகாரத்தில் இரண்டு பேர் (உள்ளே) போய்
விட்டார்கள்.  மூன்றாவது ஆசாமி எப்போது போவார் -

“Hello? Who will bell this cat”
என்ற கேள்வியுடன்  – நேற்று வெளியான
இந்த வார டெஹெல்கா ஆங்கில இதழ்  
வெளியிட்டுள்ள  ஆவணங்கள்  டெல்லியில்
புயலைக் கிளப்பி உள்ளன.

2004 முதல்  2006  வரை இரண்டு ஆண்டு
காலத்திற்கு – தனக்கு மசியாத  டிஷ்னெட்/
ஏர்செல்  நிறுவனத்திற்கு 2ஜி லைசென்ஸ்
கொடுக்காமல்  இழுத்தடித்தது –  

அந்த நிறுவனத்தில், தனக்கு இணக்கமான
தலைமை ஏற்பட்டு,  சன் டிடிஎச் நிறுவனத்திற்கு
சுமார் 700  கோடி அளவிற்கு  தான் சொல்லும்
விதத்தில் கொடுக்க அவர்கள் ஒப்புக்
கொண்டவுடன்  14 தொலை தொடர்பு
மாவட்டங்களுக்கு  உடனடியாக
லைசென்ஸ்  கொடுத்தது.

(கிட்டத்தட்ட நமக்கு அறிமுகமான  
அதே பார்முலா தான் -
வருடத்திற்கு 64 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய
சன் dth  நிறுவனத்தின் 20 % பங்குகளை  வாங்க
700 கோடி ரூபாய்  கொடுக்க ஒப்புக்கொண்டார்களாம்  !)

அமைச்சர்கள்  குழுவின் பரிசீலனைக்கு
(க்ரூப்  ஆப் மினிஸ்டர்ஸ் ) இது போகாமல்
பிரதமரிடம்  (நம்ம பிரதமர்  தானே ! )
பேசி ஏற்பாடு செய்து கொண்டது.

சன் dth    நிறுவனத்திற்கு வெளிநாட்டு
முதலீடு ( FDI )  வருகின்ற  விதத்தில்,   அதிகபட்ச
வெளிநாட்டு முதலீடு  அளவை   74 %  அளவிற்கு
உயர்த்திட  சட்டவிதிகளைத் தளர்த்தியது !

- இப்படி இன்னும்  சில விஷயங்களை
பல ஆவணங்களின் துணையுடன்  வெளியிட்டுள்ளது டெஹெல்கா.

சிபி ஐ  யின்  கவனத்திற்கு  இவை  ஏற்கெனவே
எடுத்துச்செல்லப்பட்டு விட்டாலும் -  சிபி ஐ எத்தகைய
நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது மர்மமாகவே
இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது டெஹல்கா.
காங்கிரசின் செல்லப்பிள்ளை என்பதாலும்,
“அன்னை”க்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்பதாலும்
இந்த உணர்வு !

ஆனால்  இப்போது டெஹெல்கா பரபரப்பாக
ஆவணங்களை வெளியிட்டுள்ளது – இந்த விஷயத்தில்
ஒருவித நெருக்கடியை உண்டுபண்ணி இருக்கிறது.
நேற்றிரவு,  தயாநிதி   பிரதமரை  தனியே
சந்தித்து  நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தாராம் !

துணைக்கு  இவர்  வந்தால் “உள்ளே”
இருப்பவர்களுக்கு  மகிழ்ச்சியாகத்தான்  இருக்கும் அல்லவா ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...