Monday, July 11, 2011

திரு சிதம்பரத்திற்கு ஒரு கேள்வி?

 


பொது வாழ்வில் ஈடுபட்ட அன்றைய தலைவர்கள் காமராஜர், கக்கன் ஆகியோரை நினைத்து பார்க்கும்போது, இன்றைய பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், தங்கள் தகுதிக்கு மேல், மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கின்றனர்




ன்றைய அரசியல் தலைவர்கள், தங்களின் வாழ்க்கையை, மக்களோடு மக்களாக பகிர்ந்து வாழ்ந்தனர். அதனால்தான், அவர்களால் மக்களுக்கு தூய ஆட்சியை தர முடிந்தது. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தங்கள் சேவையை செய்தனர். அதனால், இன்று வரை மக்கள் மனதில் நிரந்தர இடம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்."தூய ஆட்சி, எளிமை யுள்ள தலைவரை முதல்வராகக் கொண்ட ஆட்சி தேவை' என, ஆதங்கப்படுகிறார் சிதம்பரம். ( நன்றி தினமலர்  )

னால் அவர், காமராஜரை போன்று சாமானியன் அல்லவே; கோடீஸ்வரர் தானே. அவர் ஆதங்கம் உண்மையாக இருப்பின், கோடீஸ்வரரான அவர், சாமானியர் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை; 

னால், "போதும்... இனி நான் மத்திய அமைச்சராக இருக்க விரும்பவில்லை' என்று கூறி, இளைய சமுதாயத்திற்கு வழி விடும் செயலை செய்து, முன் உதாரணமாக காட்சி தரலாமே!அவருக்கும் எதிர்பார்ப்புகளும், தேவைகளும் இல்லை என்று சொல்ல முடியுமா? தனக்கு ஒரு நியாயம், பிறருக்கு ஒரு நியாயம் என்ற அடிப்படையில் தானே, நாம் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...