Tuesday, February 2, 2016

பன்றி காய்ச்சலுக்கும் மற்ற காய்ச்ச்சல்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?


பன்றி காய்ச்சல் என்றால் என்ன? இந்த காய்ச்சலுக்கும் மற்ற காய்ச்ச்சல்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? பன்றி காய் ச்சல் உயிருக்கு ஆபத் தானதா என்ற பல கேள்விகள்.  அவற் றுக்கு விடை தேடிய போது அறிந்து கொண்ட சில விபரங்கள் பகிர்தலுக் காக கீழே.
பன்றி காய்ச்சல் என்பது H1 N1 என்ற ஒருவகை இன்ஃபு ளுயென்ஸா வைரஸ் A கிருமி யினால் உருவாகக் கூடிய காய்ச்சல் ஆகும். இந்த வியாதி சமீபத்தில் முதன் முதலாக மெக்சிகோ நாட்டில் கண்டறியப் பட்டது.
பொதுவாக இந்த வகை கிருமிகள் பன்றிகளையும் பன்றிக ளுடன் நேரடி தொடர்புள்ள மனிதர்களையும் மட்டுமே தாக்கக் கூடியவை. ஆனா ல் இந்த முறை, மனிதர்கள் மூலமாகவும் மற்றவர்க ளுக்கு இந்த கிருமிகள் பரவ ஆரம்பித்திருப்பது மனித குலத்திற்கு புதிய சவாலாக அமைந்துள்ளது. 
பொதுவாக இந்த காய்ச்சல் அறிகுறிகள் மற்ற சாதார ண ஃப்ளுகாய்ச்சல் அறிகுறிகள் போன்றவைதான். கடுமை யான காய்ச்சல் (100 டிகிரிக்கு மேல்), இருமல் ம
ற்றும் தொ ண்டையில் கரகர. 
சில சிமயங்களில் மூக்கடை ப்பு, ஒழுகும் சளி போன்ற மூச்சு சம்பந்தப்பட்ட லேசா ன வியாதிகளும் கூட பன்றி காய்ச்சல் அறிகுறியாக இரு க்கலாம். 
இன்னும் சில சமயங்களில் மேற்சொன்ன அறிகுறிகளு டன் வாந்தி, பேதி தலைவ லி, தசை வலி, உடற்சோ ர்வு, குளிர் நடுக்கம், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளும் தென்பட்டிருக்கின்றன. நிம்மோனியா போன்ற கடும் காய்ச்சலும் ஏற்பட்டு சில உயி ரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
இந்த வகை அறிகுறிகள் இருந்தாலும், சாதாரண ஃப் ளு காய்ச்சலா அல்லது பன் றி காய்ச்சலா என்பதை குறிப்பிட்ட மருத்துவ பரி சோதனைகளின் மூலமே கண்டறிய முடியும். (real- time RT-PCR, viral culture, four-fold rise in swine influenza A (H1N1) virus-specific neutralizing antibodies) 
இந்த வகை காய்ச்சல் கர்ப்பிணி பெண்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும், சுகாதார மற் ற சூழ்நிலையில் வாழ்பவர் களுக்கும், வேறு ஏதேனும் பெரிய வியாதியால் பாதிக் கப்பட்டவர்களுக்கும் வய தானவர்களுக்கும் (உயிரிழ க்கும் அளவுக்கு) அதிக ஆப த்தானதாக கருதப்படுகிற து. 
இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வைத்திய முறைகள் எப்படி என்று பார்ப்போம்.
லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வர்களை சுகாதாரமான தனியறை யில் (குறைந்த பட்சம் ஏழு நாட்கள் வரை) வைத்து பராமரிக்க வேண்டும். மற்றவர்கள், நோயாளியுடனான நேர டி தொடர்புகளை (ஆறடிக்கு உள்ளே) தவிர்க்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ முக மூடி கள் உபயோகி ப்பது நல்லது. அதிகமான காய்ச்சல் இருந்தா லோ அல்லது மேற்சொ ன்ன அபாயங்களுக்கு உட் பட்டவராக இருந்தாலோ மருத்துவமனையில் சிகி ச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
மூச்சிறைப்பு, மூச்சு தடு மாற்றம், தோல் நிறமாற் றம், வாந்தி, அதிக காய் ச்சல் போன்ற அறிகுறி கள் குழந்தைகளுக்கும் மூச்சு விட முடியாமல் போவது, நெஞ்சு அல்லது வயிற்று வலி, மயக்க நிலை, குழப்ப நிலை, வாந்தி, அதிக காய்ச்சல் போன்ற அறிகுறிகள் பெரியவர்களு க்கும் வந்தால் உடனடியா க மருத்துவமனையில் சேர் க்க வேண்டும். 
மற்ற சீசன் வைரஸ் காயச் சல்களைப் போலவே இந்த காய்ச் சலுக்கும், எதிர்ப்பு சக்தி மருந்துகளை உரிய இ டைவேளை விட்டு எடுத்து க் கொள்ளவேண்டும். இங் கு தமிஃப்ளு மற்றும் ரெலேன்சா ஆகிய இரண்டு எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் பலருக்கும்( மற்ற சீசன் வைரஸ் காய்ச்சல் போலவே) மருந்துகள் இல்லா மலேயே குணமாகி யும் உள்ளன. 
(இந்த மருந்துகளை ப துக்கி வைப்பது தவறு என்று அரசு ஆணை இ ட்டிருப்பதாகவும் அர சாங்கமே அரசு மருத்து வ மனைகள் மூலம் இ ந்த மருந்துகளை விநி யோகிப்பதாகவும் அறி கிறேன்) 
இந்த வியாதிக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதம் இந்த மரு ந்து விற்பனைக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்க படுகி றது.
மேலும் இந்த வியாதி பரவி உள்ள இட ங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, வி யாதியால் பாதிக்கப்பட்டவர்களுடனா ன அருகாமையை தவிர்ப்பது, அடிக் கடி கைகளை சுத்தம் செய்வது மற்றும் கைகளை முகத்தில் வைப்பதை தவிர்ப்பது போன்றவையும் இந்த வியாதி அண் டாமல் தடுக்க உதவும்.
இந்த வியாதி பற்றி மிக ப் பெரிய பீதி அலை இப் போது உருவாகிக் கொ ண்டிருக்கிறது. உண் மை யில் இந்த வியாதி யால் பாதிக்கப்பட்டவர் களில் பலர் நன்கு குண மடைந்து விட்டனர் எ ன்ற செய்தி உரிய மு றையில் மக்களிடம் கொண்டு செல் லாததும் ஊடகங்கள் ஒரு தலைபட்சமான செய்திகளை தொ டர்ந்து வெளியிட்டுக்கொண்டிருப்பதும் கூட இந்த பீதி அ லைக்கு காரணம் என்று நினைக்கிறே ன்.
மொத்தத்தில், இது மற்ற சீசன் வை ரஸ் காயச்சல்களை போன்றே எளி தில் குணப் படுத்தக் கூடியது என்றே நி னைக்கிறேன். அதே சமயத்தில் மற்ற வைரஸ் காய்ச்ச்ச ல்களை போலவே துவக்கத்திலேயே உரியமுறையில் கவ னிக்கா விட்டால் ஏற்படும் பேராபத்து இந்தவகை வை ரஸ் காய்ச்சலிலும் உண் டு. 
முக்கியமாக இந்தியா போ ன்ற ஜனநெருக்கடி மிகுந்த அதே சமயம் சுகாதார வச தி குறைந்த ஒரு நாட்டில் இந்த வகை வைரஸ் காய் ச்சலை உடனடியாக கட்டு படுத்த வேண்டியது அர சின் கடமை ஆகும். 
அதே சமயத்தில் குறைந்த பட்ச சுகாதார பாதுகாப்புடன் (அதாவது பொது இடங்களில் சுகாதாரமற்ற உணவை தவிர் ப்பது, கண்ட இடத்தில் எச்சில் துப்புவதை தவி ர்ப்பது, அடிக்கடி கை சுத் தம் செய்வது, பொது இட த்தை கழிப்பிடமாக மாற் றுவதை தவிர்ப்பது போ ன்றவை) வாழ வேண் டியது ஒவ் வொரு தனி மனிதனின் கடமையா கும்.
இதை பற்றி இன்னும் அதிக தகவல் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...