Friday, February 5, 2016

நோய் தீர்க்கும் கருங்காலி மரம்............


குழந்தைகளுக்குப் பலவகையான பயங்கர நோய்கள் ஏற்பட்டு மரணப் பிடியில் இருக்கும் போது, நகம் - உதடு வெளிர் நிறத்தில் மாறும்போது, செவ்வாய் தோஷம் ஏற்பட்டு இருக்கின்றது என்று கூறி கழுதைப் பாலை குடிக்க வைப்பது தமிழக கிராம மக்களின் பழக்கமாகும்.
ஆன்மிக உலகம்'s photo.
பெரியவர்களுக்கு ஏற்படும் நோய்கள், மனப்பிரச்னைகள், உடல் பிரச்னைகள் போன்றவற்றிற்கு செவ்வாய் கிரகத்தின் தீய விளைவுகள்தான் காரணம் எனக் கூறி செவ்வாய் தோஷத்தை அகற்ற நவக்கிரகக் கோயிலுக்குச் சென்று அங்கு அங்காரக பகவான் எனும் செவ்வாய் கிரகத்தை வணங்கி அதன் அருகில் இருக்கின்ற கருங்காலி மரத்தைக் கட்டிப்பிடித்து செவ்வாய் தோஷத்தை நீக்கச் செய்வார்கள். இது இந்து சமுதாய மக்களிடம் காணப்படும் பழக்கமாகும்.
ஒன்பது கிரகங்களில் செவ்வாய் கிரகம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த கிரகத்தின் நல்ல கதிர் வீச்சுக்கள் மனிதனுக்கு நன்மையையும், இதன் தீய கதிர் வீச்சுக்கள் நோய்களையும் உண்டாக்குகிறது. முக்கியமாக, செவ்வாய் கிரகத்தின் பாதிப்பு தலை உச்சி முதல் கழுத்து வரையிலும், கண் கோளாறுகள், கண் அழற்சி, வீக்கம், இரத்த வாந்தி, பசியின்மை, தொழுநோய், வெண்குஷ்டம், மூலம், சர்க்கரை நோய், குடல் புழுக்கள், உடல் பலவீனம் போன்ற நோய்கள் செவ்வாய் கிரகத்துடன் தொடர்பு கொண்டவை.
தாவரங்களுக்கும், கிரகங்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. சில தாவரங்கள் குறிப்பிட்ட கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை தன் உடலில் உறிஞ்சிக் கொண்டு திளைத்து இருக்கும். அந்த தாவரங்கள் செவ்வாய் கிரகத்தின் தோஷங்களை அகற்றுகிறது. இவ்வகையில், கருங்காலி இனத்தைச் சேர்ந்த முள் மரங்கள் செவ்வாய் தோஷத்தை நீக்குவதற்கு சிறந்த மருந்து என வானவியல் சாஸ்திர நூல்களில் கூறப்பட்டு இருக்கிறது.
அதனால்தான், அம்மரங்களை செவ்வாய் கிரகக் கோவில்களில் நட்டு வளர்ப்பது வழக்கம். கிட்னி ஃபெயிலியர், ஹார்ட் ஃபெயிலியர் நோய்களுக்கு இரத்தக் கொதிப்பும், சர்க்கரை நோயும்தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. அந்த நோய்கள் செவ்வாய்க்கிரகம் மூலம் தான் ஏற்படுகிறது.
இம்மரத்தின் அடித்தண்டு, வேர்ப்பட்டை, பூக்கள், பிசின் அனைத்தையும் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
இதன் மரப்பட்டையை மன நோய், கண் நோய், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகத் தருவார்கள்.
மரத்தூள் ஜூரம், பேதி, வயிற்று நாக்குப்பூச்சி, வலி, வீக்கம், வெண்குஷ்டம், குஷ்டம், நோய் அரிப்பு, அழுகிய புண், சர்க்கரை நோய் ஆகியவற்றை குணமாக்குகின்றது.
சீமைக் காசிக்கட்டி எனும் இதன் பிசினை வெற்றிலை பாக்கில் வைத்து சிலர் சாப்பிடுவார்கள். இதனால் பற்களில் இரத்தக் கசிவு மற்றும் ஈறுகளில் உணர்வற்ற நிலையைப் போக்குகிறது. வாய்ப்புண்ணைக் குணமாக்குகிறது.
கருங்காலி மரம் மேஷம் ராசி, விருச்சிகம் ராசி, அஸ்வினி நட்சத்திரம், பரணி நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம், அனுஷம் நட்சத்திரம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், செவ்வாய்க்கிழமை அன்று பிறந்தவர்களுக்கும், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்களுக்கும் நல்ல மரமும், மருந்துமாகும். இந்தக் காலங்களில் செவ்வாய்க் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகள் அதிகளவில் வெளியேறுகின்றன. அதனால்தான் செவ்வாய்கிரகம் வலிமையாகக் காணப்படும் நாளுக்கு செவ்வாய்க்கிழமை என்றும் அழைப்பார்கள்.
மேற்கண்ட நோய்கள் நீங்க கருங்காலி மரத்தை அரை மணி நேரம் கட்டிப் பிடிக்கலாம். இல்லைஎன்றால் அதன் கட்டையை கையில் தாயத்தாக அணிந்துகொண்டாலும் நல்ல பலன் இருக்கும் எல்லா கோயில்களிலும் கும்பாபிசேகத்தின் பொது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள் அதனால் இடி மின்னலால் எந்த பாதிப்பும் அந்த கோயிலை சுற்றி வசிக்கும் நபர்களுக்கு வருவதில்லை
கருங்காலி மரம் ரொம்ப அரிதான மரம் ஒரு சில ஆலயங்களில் மேட்ட்மே இப்போது இருக்கிறது மூலிகை மருத்துவர்களின் ஆலோசனைப்படியும் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் மாந்திரீகர்கள் கருங்காலி மரத்தைப் பயன்படுத்தலாம். என்று குறிப்பிட்டிருக்கிறார்கள.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...