ஊட்டி;''கடந்த, 2008ல், ஜெயலலிதா வகித்த முதல்வர் பதவியை தட்டிப்பறிக்க, சதி திட்டம் தீட்டியவர் தினகரன்,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.நீலகிரி மாவட்டம், ஊட்டியில், நேற்று நடந்த எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:என்னையும், முதல்வரையும், தினகரன், துரோகிகள் எனக் கூறி வருகிறார். அவர் தான், என்னை அரசியலில் அறிமுகப்படுத்தியதாக கூறுகிறார். நான், 20 ஆண்டுகளுக்கு முன்பே, கட்சியில் இணைந்து, கிளை செயலர் பதவி துவங்கி, படிப்படியாக முன்னேறினேன். ஜெயலலிதாவால், மூன்று முறை முதல்வர் பதவி வகித்தேன்.நான் கட்சிக்கு வந்த போது, எனக்கு வயது, 19; தினகரன் எல்.கே.ஜி., மாணவர். 2008ல், தினகரனை, ஜெயலலிதா ஒதுக்கி வைத்து, கட்சி விவகாரத்தில் தலையிடக் கூடாது என, கூறினார். காரணம், அப்போதே அவர், முதல்வர் பதவியை பெற சதி திட்டம் தீட்டினார்.எம்.ஜி.ஆர்., வாரிசு அரசியலை ஊக்குவிக்கவில்லை. அவரது சகோதரர், அ.தி.மு.க.,வை வளர்க்க அரும்பாடு பட்ட போதிலும், அவருக்கு கட்சிப் பதவியை, எம்.ஜி.ஆர்., வழங்கவில்லை. அதே போன்றுதான், ஜெயலலிதாவும், குடும்ப அரசியலை அனுமதிக்கவில்லை.அந்த அடிப்படையில், எந்தவொரு குடும்பமும், அ.தி.மு.க.,வை கைப்பற்ற முடியாது; கட்சியை கைப்பற்ற துடிப்போருக்கு தலையாட்டிகளாக செயல்படுவோரை, இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவோம்.ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில், சற்று அசந்தோம்; அவர்கள் வெற்றி பெற்றார்கள். இனி, அதுபோன்ற நிலை வராது; விழிப்புடன் இருப்போம். சதி திட்டம், சில நேரங்களில் மட்டுமே வெல்லும்; நிரந்தரமாக வெல்லாது. இவ்வாறு, பன்னீர்செல்வம் பேசினார்.குட்டி கதை சொல்லி 'குட்டு'துணை முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., அரசை குறை சொல்பவர்களுக்காக கூறிய குட்டிக்கதை:ஒரு வீட்டுக்கு, புதுமண தம்பதிகள் குடியேறினர். அப்பெண், தினசரி காலை, தனது வீட்டின் ஜன்னல் வழியாக பார்க்கும்போது, எதிர் வீட்டில் இருக்கும் பெண், துணி உலர்த்துவதை பார்ப்பார். 'அந்த பெண் துணியை சரியாக துவைப்பதில்லை; அழுக்கு போவதே இல்லை' என, கணவரிடம் தினசரி கூறுவதை, புதுமணப்பெண் வழக்கமாகவே கொண்டிருந்தார்.ஒரு நாள், அந்த பெண், 'இன்றைக்கு தான், எதிர் வீட்டு பெண் துணியை நன்றாக துவைத்துள்ளார்; அவர் உலர்த்தும் துணிகள், 'பளிச்' என தெரிகிறது' என்றார்.அந்த பெண்ணின் கணவர்,''இத்தனை நாளாக அழுக்குப் படிந்திருந்த நம் வீட்டு ஜன்னல் கண்ணாடியை, இன்று தான் சுத்தம் செய்தேன்,'' என, மிக இயல்பாக கூறினார்.ஆக, அழுக்குப்படிந்த கருப்புக் கண்ணாடியை அணிந்துக் கொண்டு, அ.தி.மு.க., ஆட்சியை பார்ப்பவர்கள் குறை சொல்ல தான் செய்வார்கள்.இவ்வாறு, பன்னீர்செல்வம் கூறினார்.'அம்மா ஏமாளி!'பன்னீர்செல்வம் பேசுகையில், ''தினகரன், கோடி, கோடியாக பணம், சொத்துகளை சம்பாதித்து வைத்துள்ளார்; அதில் நாங்கள் பங்கு கேட்கவில்லை. குடும்ப அரசியல் கூடாது என்று தான் கூறி வருகிறோம். ஜெயலலிதாவுக்கு, துரோகம் விளைவிக்க முயன்றதால் தான், தினகரன் குடும்பத்தைச் சேர்ந்த, 16 பேரை, ஜெயலலிதா கட்சியின் அடிமட்ட உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி வைத்திருந்தார். அதில், சிறையில் இருக்கும் சசிகலா மட்டும், மன்னிப்புக் கடிதம் கொடுத்ததால், கட்சியில், ஜெயலலிதா சேர்த்து கொண்டார்,'' என்றார். தொண்டர்கள் இடைமறித்து, 'அம்மா ஏமாந்து விட்டார்; அவரை கட்சியில் சேர்த்திருக்கக் கூடாது' என, கூச்சலிட்டனர். அதை கேட்ட பன்னீர்செல்வம், ''ஆம், அம்மா ஏமாளி; என்ன செய்ய?'' என தொண்டர்களின் குமுறலை ஆமோதித்தார்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Sunday, December 31, 2017
ஜெ., மரணம்: ராகுலிடம் விசாரணை!
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாஇருந்த போது, அவரை சந்திக்க வந்த, அரசியல் தலைவர்களையும், விசாரணைக்கு அழைக்க, விசாரணை கமிஷன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெ., முதல்வராக இருந்த போது உடல்நிலை பாதிக்கப்பட்டுசென்னைஅப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு இறந்தார். அவர் மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் விசாரிக்க கமிஷன் அமைக்கப்பட்டது.நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன், பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகிறது.
அடுத்த கட்டமாக ஜெ., உடன் இருந்தவர்கள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ.,வை சந்தித்ததாக கூறப்படும் பிரமுகர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.ஜெ., அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது தமிழக முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் என, அரசியல் வேறுபாடின்றி பலரும் அவரை சந்திக்க வந்து சென்றனர்.
அவர்களில் எத்தனை பேர் ஜெ.,வை சந்தித்தனர் என்பது தெரியவில்லை. காங்கிரஸ் துணை தலைவராக இருந்த ராகுல், அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து ஜெ., உடல் நலம் விசாரித்தார். அதேபோல் அப்போதைய மத்திய அமைச்சரும், தற்போதைய துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவும் வந்து சென்றார். அவர்கள் ஜெ.,வை சந்தித்ததாகவும் நலம் பெற்று விரைவில் திரும்புவார் என்றும் வெளியில் கூறினர்.
எனவே இதுபோன்ற பேட்டி அளித்தவர்கள் ஜெ.,வை சந்திக்க வந்த பிரமுகர்கள் என அனைவரையும், அழைத்து விசாரிக்க வேண்டும் என, ஆறுமுகசாமி கமிஷனுக்கு, பலரும் கடிதம் அனுப்பி உள்ளனர். அதன் அடிப்படையில் ராகுல் உள்ளிட்டவர்களிடம் விசாரிப்பது குறித்து கமிஷன் ஆலோசித்துவருகிறது.

அமித் ஷா சமரசத்தால் திருப்பம் நிதின் படேல் திடீர் மனமாற்றம்.
ஆமதாபாத்:குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான அமைச்சரவையில், நிதித்துறை ஒதுக்காததால், அதிருப்தியில் பதவி ஏற்றுக்கொள்வதை தாமதப்படுத்திய, துணை முதல்வர், நிதின் படேலை, பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா நேற்று சமாதானப்படுத்தினார்.
இதையடுத்து, தனக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களை, நிதின் படேல், நேற்று ஏற்றுக் கொண்டார்.குஜராத்தில், சமீபத்தில் நடந்த தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை அடுத்து, விஜய் ரூபானி, மீண்டும் முதல்வரானார். துணை முதல்வராக, மீண்டும் பொறுப்பேற்ற, நிதின் படேலுக்கு, கடந்த முறை ஒதுக்கப்பட்ட நிதித்துறை, நகர்ப்புற மேம்பாடு ஆகிய துறைகள் ஒதுக்கபடவில்லை.
இதனால், கடும் அதிருப்தி அடைந்த நிதின் படேல், தனக்கு ஒதுக்கப்பட்டஇலாகாக்களை ஏற்றுக் கொள்ளாததோடு, மூன்று நாளில் தீர்வு காணப் படாவிட்டால், பதவியை ராஜினாமா செய்வதாக மிரட்டல் விடுத்தார்.இந்நிலையில், பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா, குஜராத் துணை முதல்வர், நிதின் படேலுடன் நேற்று தொலைபேசியில் பேசினார். விரைவில், நிதின் படேலின் தகுதிக்கு ஏற்ப, துறைகள் வழங்கப்படும் என, அமித் ஷா உறுதியளித்தார்.
இதையடுத்து, தனக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக் களை, நிதின் படேல் நேற்று ஏற்றுக் கொள்ள சம்மதம்தெரிவித்தார்.இதுகுறித்து, நிதின் படேல் கூறியதாவது:அமித் ஷா, என்னுடன் தொலைபேசி யில் பேசினார். விரைவில், என் தகுதிக்கு ஏற்ற துறைகள் ஒதுக்கப்படும் என்றும், அதுவரை, தற்போது ஒதுக்கப்பட்ட இலாகாக்களை வகிக்கும் படியும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, எனக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களை ஏற்றுக் கொள்கிறேன். இந்த பிரச்னை, இலாகாக்கள் தொடர்பானது அல்ல; மாறாக, சுயமரியாதை தொடர்பானது.இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, நேற்று நடந்த நிகழ்ச்சியில், தனக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களை, நிதின் படேல் ஏற்றுக் கொண்டார். இதற்கிடையே, நேற்று இரவு, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு, நிதின் படேலுக்கு, கூடுதலாக நிதித்துறையும் ஒதுக்கப்பட்டது.
'டிபாசிட்' போனதால் அதிரடி தி.மு.க.,வில் 140 பேர் பதவி பறிப்பு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 'டிபாசிட்' பறிபோனதால், தேர்தல் பணியாற்றாமல், 'டிமிக்கி' கொடுத்த, 140 நிர்வாகிகளின் பதவிகளை, தி.மு.க., தலைமை பறித்துள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார்.தி.மு.க., வேட்பாளர், மருதுகணேஷ், 'டிபாசிட்' இழந்தார்.இதனால், அதிர்ச்சி அடைந்த தி.மு.க., தலைமை, தேர்தல் தோல்வி குறித்து விசாரிக்க, சட்டசபை கொறடா, சக்கரபாணி தலைமையில், மூன்று பேர் குழுவை நியமித்தது.
இக்குழு, ஆர்.கே.நகர் தொகுதியில் அடங்கிய சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், ஆர்.கே.நகர் கிழக்கு, மேற்கு பகுதி நிர்வாகிகள், 14 வட்ட நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியது.அதில், பெரும்பாலான நிர்வாகிகள், சரியாக தேர்தல் பணியாற்றாமல், 'டிமிக்கி' கொடுத்து, தினகரனுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்தது தெரியவந்தது.
மாவட்ட முக்கிய நிர்வாகியின் செயல்பாடுகள் மீதும், பகுதி, வட்ட நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனர்.இதுகுறித்த விரிவானஅறிக்கையை, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினிடம்,
விசாரணைக்குழு நேற்று சமர்ப்பித்தது. இதை அடுத்து, முதல்கட்டமாக, ஆர்.கே.நகர் தொகுதியில் அடங்கிய, 14 வட்டங்களின் நிர்வாகங்களும் கலைக்கப்பட்டு உள்ளதாக, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
இதனால், ஒரு வட்டத் திற்கு வட்ட செயலர், துணை செயலர், பொருளாளர், பகுதி பிரதிநிதிகள் என, மொத்தம், 1௦ பேர் வீதம், 14 வட்டங்களின், 14௦ நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
இவர்களை தொடர்ந்து, மாவட்ட, பகுதி நிர்வாகி களின் பதவி பறிப்புகளும், அதிரடியாக தொடரும் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்ளாட்சிமறுவரையறை:அவகாசம் தர கோரிக்கை
மாநில தேர்தல் கமிஷன் தலைவருக்கு, தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள கடிதம்:உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தற்போது, அவசர அவசரமாக, வார்டுகளின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டு, சில மாவட்டங்களில், குளறுபடியான பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.பட்டியல் தயாரிப்பு பணிகள் குறித்து மற்ற அரசியல் கட்சிகளிடம் ஆலோசிக்காமல், தன்னிச்சையாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இதில், ஆட்சேபனை இருந்தால், டிச., 2ல், கருத்து தெரிவிக்க வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது. அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக, வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. இது, தி.மு.க., ஓட்டு வங்கியை அழிக்கும் முயற்சி. எனவே, மறுவரையறை பட்டியல் குளறுபடி தொடர்பாக, அரசியல் கட்சிகளும், பொது மக்களும் கருத்துகளை தெரிவிக்க, கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தலைவர் வாழ்க... (ஹிஹி)
1)Jackie chan -னும் நல்லா நடிப்பாரு.
2)அவருக்கும் நிறைய ரசிகர்கள் இருக்காங்க.
3)அவரும் தமிழன் கிடையாது.
2)அவருக்கும் நிறைய ரசிகர்கள் இருக்காங்க.
3)அவரும் தமிழன் கிடையாது.
இது போதாதா தமிழர்களை ஆள.... கன்னடனுக்கு வாய்ப்பு கொடுத்தாச்சு, மலையாளிக்கு வாய்ப்பு கொடுத்தாச்சு.. இப்ப ஒரு ஜப்பான் காரருக்கும் வாய்ப்பு கொடுப்போம்.
நாம கடைசி வரை அடிமையாவே இருப்போம்.
நாம கடைசி வரை அடிமையாவே இருப்போம்.
சாக்கி சான் அய்யா.. எங்கள வந்து ஆளுங்கய்யா... வோட்டுக்கு 10000 போதுன்யா...
வந்து kung fu அரசியல் பன்னுங்கய்யா....
வந்து kung fu அரசியல் பன்னுங்கய்யா....
பாம்பன் சுவாமிகள் என்று அன்பர்களால் அழைக்கப்படும் ஸ்ரீமத் குமரகுருதாசரின் அறிவுரைகள்.
1. தண்ணீரில் மூழ்குபவன் மூச்சுக் காற்றுக்காக எவ்வளவு தவிப்பானோ, கடவுளைக் காணவும் அவ்வளவு தீவிர தவிப்பு வேண்டும்.
2. உணவுக்காக அலைவது மாத்திரம் மனிதப் பிறவியின் நோக்கம் இல்லை. இறைவனை அடைவதே மனிதனின் நிறைவான லட்சியமாக இருக்க வேண்டும்.
3. பொறாமை கூடவே கூடாது.
4. சத்தியத்தின் வழி நடப்பதும் உண்மையே பேசுவதும் தவம்.
5. சாமானியனாக இருந்தாலும், சந்நியாசியாக இருந்தாலும், புகழின் மீது இருக்கும் ஆர்வம் அலாதியானது. அது பேராசையை ஏற்படுத்தி விடும். புகழின் மீது இருக்கும் ஆவலை துளி கூட வளர விடக் கூடாது.
6. முருகனின் பக்தர்களுக்கு அமுது படைத்தல், அன்னதானம் செய்தல் போன்றவை மகத்தான புண்ணியம் சேர்க்கும்.
7. என் பொருட்டு நிந்திக்கப்படுவோரையும் முருகன் அருள் காக்கும்.
ஏக தெய்வமாக முருகனைத் தீவிரமாக பற்றிக் கொண்டவர்களை வேலும், மயிலும் காக்கும்.
ஏக தெய்வமாக முருகனைத் தீவிரமாக பற்றிக் கொண்டவர்களை வேலும், மயிலும் காக்கும்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...........
புத்தாண்டில் புதிய சிந்தனை, புதிய முயற்சி, புதிய எண்ணங்கள் பூக்கட்டும். நட்புகளுக்கும், சொந்தங்களுக்கும் தமிழ் இனத்துக்கும், உயிரோடு இணைந்த அனைத்து தமிழ் உறவுகளுக்கும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்த குறிப்புகளில் ஒன்றை தொடர்ச்சியாக பின்பற்றினாலே குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இந்த குறிப்புகளில் ஒன்றை தொடர்ச்சியாக பின்பற்றினாலே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
ஆரோக்கியமான மனித வாழ்வில் மிகவும் தேவைப்படுவது ஆரோக்கியமான
உடலும் உற்சாகமான உள்ளமும்தான். உடல் ஆரோக்கியமாக இரு ந்தாலே உள்ளம் உற்சாகமாக இருக்கும். ஆகவே நமது உடல் ஆரோ க்கியம் என்பது மிகவும் முக்கியம். இருக்கும் ஒரு வாழ்க்கையை உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்திட வேண்டும்.
இந்த காலகட்டத்தில் பலவிதமான புதிய நோய்கள் வந்துகொண்டேதா ன் இருக்கிறது. சில காய்ச்சல் உயிரை எடுக்கும் அளவிற்கு கொடூரமா க உள்ளது. அந்த மரித்திரியான நோய்களில் இருந்து விலக நினைத்தால், அதற்கு அவசியமானது நோய் எதிர்ப்புசக்தி (Immunity). நோய் எதிர்ப்பு சக்தி (Immunity)அதிகரிக்க சில நாட்டு வைத்தியங்களை பார்ப்போம்.
புதினா(Mint)வை எடுத்து சுத்தம்செய்து நிழலில் காயவைத்து இடி த்து பொடி செய்துக்கொள்ளவேண்டும். அந்தபொடியுடன் பனங்கற்க ண்டு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு ச்சக்தி அதிகரிக்கும்.
ஆப்ரிகாட் பழத்தை நன்கு கழுவி வேகவைத்து மசித்துக் கொள்ள வேண்டும். ஓட்ஸ், பால், சர்க்கரை ஆகியவைகளை ஒன்றாக கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
கொதித்து கெட்டியானவுடன் ஆறவைத்து அதனுடன் மசித்த ஆப்ரிகாட்டை சேர்த்து சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளு க்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த குறிப்புகளில் ஒரு குறிப்பை தொடர்ந்து பின்பற்றிவந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பட்டாணியை வேகவைத்து குளிரவைத்து அதோடு தக்காளி சாறு சேர்த்து சாப்பிட்டால்.
பட்டாணி(Peas)யை வேகவைத்து குளிரவைத்து அதோடு தக்காளி சாறு சேர்த்து சாப்பிட்டால்…
நம்மை எந்த நோயும் அண்டாமல் இருக்க… நமது உடலுக்கு எதிர்ப்பு சக்தி இருக்க
வேண்டும். அந்த எதிர்ப்பு சக்தி இருக்கும்போது உடல் பலம்பெற்று இருக்கிறது என்று பொருள். அந்த உடல் பலம்பெற்று விளங்கிட ஓர் எளிய வீட்டு வைத்தியம் உண்டு.
ஆம் பட்டாணி(Peas)யை ஒரு குவளை அளவு எடுத்து தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்து பின் குளிரவைத்து அத்துடன் தக்காளி சாறு (Tomato Juice) சேர்த்து சாப்பிட வேண்டும். இதேபோல் தினந்தோ றும் சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்… உடல் வலுவடை ந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும். நோய் எதிர்ப்புச் சக்தி (Immunity) அதிகரித்தால் நம்மை எந்த நோயும் அண்டாது என்பது நமது முன்னோர் வாக்கு.
பட்டாணி உங்களுக்கு ஏற்றதா என்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு சாப்பிடவும்.
சரவணபவ மந்திரத்தின் பொருள் என்ன ?
🌹🌿
::::::::::::::::::::🌹🌿🌹🌿🌹🌿🌹::::::::::::::::::::::::::
🌺 பொய்கையில் சரவணன் பிறந்தமையால் அந்த இடத்திற்கு சரவணப் பொய்கை எனப் பெயர் வந்தது.
🌺 'சரவணம்" என்றால் தர்ப்பை. 'பவ" என்றால் தோன்றுதல். தர்ப்பைக் காட்டில் முருகன் தோன்றியதால் 'சரவணபவ" என பெயர் வந்தது. இதற்கு இன்னொரு பொருளும் உண்டு.
🌠 ச - லக்ஷ்மிகடாக்ஷ்ம்
🌠 ர - சரஸ்வதி கடாக்ஷம்
🌠 வ - மோக்ஷம்
🌠 ண - சத்ருஜயம்
🌠 ப - ம்ருத்யுஜயம்
🌠 வ - நோயற்ற வாழ்வு
🌺 சரவணபவ என்பதன் பொருள் விளங்கி சரவணனை வணங்கி வாருங்கள். தீராத வினையும் தீரும். ஆறாத நோயும் ஆறும். மன நிம்மதி கிடைக்க இந்த ஆறெழுத்தை தினந்தோறும் பராயணம் செய்யலாம்.
'சரவணன் இருக்க பயம் ஏது".

Saturday, December 30, 2017
என்னுள்மையம்கொண்டபுயல் #கமல்ஹாசன் #இளையராஜா...
ஹேராம் முழுப்படத்தையும் முடித்துவிட்டு ஃபைனல் மிக்ஸிங்குக்காக ஒரிஜினல் இசையைக் கேட்டால், ‘ஒரு கோடி ரூபாய் கொடுத்தால்தான் கொடுப் பேன்’ என்றார் அறிமுக இசையமைப்பாளரான அந்த இசைமேதை. ‘வேறு வழியில்லை, ராஜாவிடம் போவோம்’ என்றேன். ‘வேறு ஒருவரிடம் போய்விட்டு வந்ததால் அவர் பண்ணுவாரா என்பது சந்தேகம்’ என்றார்கள். ‘பண்ணுவார், நான் போவேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றேன். ‘என்ன’ என்று கேட்டார் ராஜா. ‘தப்புப் பண்ணிட்டேன். இந்த மாதிரியெல்லாம் ஆகிப்போச்சு’ என்று என் குறைகளைச் சொன்னேன்.
வேறு நபராக இருந்திருந்தால், ‘செம மேட்டர் சிக்கிடுச்சு’ என்று நினைத்துக்கொண்டு, ‘எனக்குத் தெரியும்…’ என்று எதிராளியைப் பற்றிக் குறை சொல்லத் தொடங்குவார்கள். இல்லையென்றால், ‘இல்லல்ல… எனக்கு வேறு வேலைகள் இருக்கு’ என்று சொல்லித் தவிர்ப்பார்கள். ஆனால் ராஜாவோ, ‘`சரி, அதை விடுங்க. இப்ப என்ன பண்ணப்போறீங்க?’’ என்று நேராக பிரச்னைக்குள் வந்தார். ‘`பாட்டெல்லாம் ஷூட் பண்ணிட்டேன்’’ என்றேன். ‘`அப்ப அந்தப் பாட்டை யெல்லாம் திரும்ப எடுக்க எவ்வளவு செலவாகும்?’’ என்றார். ‘`அதைப்பற்றி இப்ப பேசவேணாம். நாம அந்தப் பாடல்களைப் புதுசா கம்போஸ் பண்ணி ரெக்கார்ட் பண்ணுவோம். அதைவெச்சு நான் புதுசா ஷூட் பண்ணிக்கிறேன். எவ்வளவு குறைவான பட்ஜெட்டில் இதைப் பண்ண முடியும்னு நீங்க சொல்லுங்க’’ என்றேன்.`எனக்கு என்ன கொடுப்பீங்க?’’ என்றார். ‘`என்னங்க இந்த நேரத்துல இப்படிக் கேக்குறீங்க. தப்புப் பண்ணிட்டேன்னு சொல்லிட்டுதானே வந்திருக்கேன். தண்டனைக்கு இது நேரமில்லையே’’ என்றேன். ‘`அதெல்லாம் பேசப்படாது. பாட்டைப்பூரா எடுத்தீங்கன்னா என்ன செலவாகுமோ அந்தச் செலவை எனக்குக் கொடுங்கன்னா கேக்குறேன்?’’ என்றார். ‘`என்னங்க, இப்ப பண்ண மாட்டேங்குறீங்களா, என்ன சொல்றீங்க?’’ என்றேன். ‘`மாட்டேன்னு எங்க சொன்னேன். உங்களுக்கு அந்தச் செலவே இல்லாம பண்றேன். எனக்கொரு ஐடியா வந்துடுச்சு’’ என்றார்.
‘`என்ன?’’ என்று கேட்டேன். ‘`ஏற்கெனவே எழுதிய பாடல்கள், நீங்க எடுத்த வீடியோ காட்சிகள் எதையும் மாத்த வேணாம். அப்படியே இருக்கட்டும். அந்த வரிகளுக்கும் காட்சிகளுக்கும் பொருந்துறமாதிரியான இசையை நான் கம்போஸ் பண்ணித் தர்றேன். திரும்ப ஷூட் பண்ண வேணாம். எனக்கு என்ன கொடுக்குறீங்களோ கொடுங்க. அதைப்பற்றிக் கவலையில்லை. நான் செஞ்சுகாட்டுறேன்’’ என்றார் உறுதியுடன்.
‘`என்னடா இது, கிணறுவெட்ட வேறு பூதம் கிளம்புதே, தப்பாயிடுமோ’’ என்ற பயம் எனக்கு. ஒருமாதிரி தயக்கத்துடன், `‘அது பரவாயில்லைங்க. என்னைக் காப்பாத்துறேன்னு சொல்லிட்டு மியூசிக்கை நாம கம்மிபண்ணிடக்கூடாது. எல்லாம் ஹிட் சாங்கா வரணும். நீங்க போடுறபடி போடுங்க. செலவானா பரவாயில்லை. நான் ஷூட் பண்ணிக்கிறேன்’’ என்றேன். ‘`அப்படின்னா என் மேல நம்பிக்கை இல்லைனு எடுத்துக்கலாமா’’ என்றார். ‘`ஐயய்யோ… அப்படியில்லைங்க’’ என்று அவசர அவசரமாக மறுத்தேன். ‘என்னமோ நடந்துடுச்சு. இனிமேலாவது நண்பர் சொல்வதைக் கேட்போம்’ என்று நினைத்துக்கொண்டு, ‘`நீங்க சொல்றதுமாதிரியே கம்போஸ் பண்ணுங்க’’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.
பிறகு, என்னை அழைத்துக் காட்டினார். ‘இது உண்மைதானா, மேஜிக்கா, இசையில் இப்படியெல்லாம் நிகழ்த்த முடியுமா?’பணம், உழைப்பு, நாள்கள்… என்று இந்தளவுக்கு மிச்சப்படுத்திக் கொடுத்திருக்கிறாரே’’ என்று சந்தோஷம். அவரை பதிலுக்கு சந்தோஷப்படுத்திப் பார்க்கவேண்டும் என்ற ஆசையில் ‘ஹேராம்’க்கான பின்னணி இசையை புதாபெஸ்ட் கொண்டுபோய் ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ராவை வைத்து ரீரெக்கார்டிங் செய்வது என்று முடிவு செய்தேன். புதாபெஸ்ட் அழைத்துச் செல்லும்போது அவருடன் வந்தவர்கள் அனைவருக்குமே அந்த வடிவம், தொழில்முறை அனைத்தும் புதிதாகவும் வேறாகவும் இருந்தன. ஆனால், அவர்களை ஒன்று சேர்த்தது இசை மட்டுமே. அங்கேயும் வேட்டிகட்டிக் கொண்டு, குளிருக்குக் குல்லாவெல்லாம் போட்டுக்கொண்டு வந்து நின்ற ராஜாவை, அங்குள்ளவர்கள் ‘`இவரா கம்போஸர்?’’ என்பதுபோல் பார்த்தனர்.
அவர்களின் முகத்தில், ‘`இந்தியாவுல இருந்து ஏதோ வந்திருக்காங்க. அவங்களுக்கும் பண்ணணுமே’’ என்ற சலிப்பு தெரிந்தது. ‘`இது சரியில்லை, அது சரியில்லை’’ என்றார்கள். ராஜாவை வைத்துக்கொண்டு அவர்கள் அப்படிப் பேசியது எனக்குக் கோபத்தை வரவழைத்தது. ‘`காசு கொடுத்து வந்திருக்கோம். எங்க ஆளுக்கு இது இது வேணும்னு கேட்கிறார். அதைச் செஞ்சுகொடுக்க வேண்டியது உங்க வேலை. ஏன் இவ்வளவு சலிப்பு’’ என்று அவர்களை அதட்டினேன்.
ஆனால், அவர்கள் திறமையான இசைக்கலைஞர்கள். தியேட்டரை நம்புபவர்கள். ஒருவருக்கொருவர் பேப்பர் கொடுப்பதில் ஏதோ ஒரு பிசகு நடந்திருக்கிறது என்பது தெரிந்தது. நான் அதட்டியதால் முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு சற்று இறுக்கமாகவே வேலையை ஆரம்பித்தனர். பிறகு இவர் கொடுத்த பேப்பரை அங்கிருக்கும் இசைக்கலைஞர்களின் முன் வைத்ததும் அதை அவர்கள் 10 நிமிடங்கள் கவனித்தனர். பின், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். பிறகு அங்கிருக்கும் கண்டக்டர், பேட்டனைத் தட்டி, ‘ரிகர்சல் பார்க்கலாம்’ என்று உற்சாகத்துடன்.பிறகு இவர் கொடுத்த பேப்பரை அங்கிருக்கும் இசைக்கலைஞர்களின் முன் வைத்ததும் அதை அவர்கள் 10 நிமிடங்கள் கவனித்தனர். பின், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். பிறகு அங்கிருக்கும் கண்டக்டர், பேட்டனைத் தட்டி, ‘ரிகர்சல் பார்க்கலாம்’ என்று உற்சாகத்துடன் அந்தக் குச்சியை ஆட்டியவுடன் இசைக்கலைஞர்கள் அனைவரும் அந்த இசையைப் புரிந்துகொண்டு ஒரே சமயத்தில் இசைத்தபோது எனக்குப் புல்லரித்துவிட்டது. `ராஜா என்ன பண்ணுகிறார்’ என்று திரும்பிப்பார்த்தால், அவரின் கண்களில் கண்ணீர்.
ஏனெனில், குழுவில் உள்ள எல்லோருக்கும் சொல்லிப் புரியவைத்து அந்த ஒலியை வரவழைக்க அவர் அவ்வளவு கஷ்டப்பட வேண்டும். அரைநாளாவது ஆகும். ஆனால் பத்தே நிமிடங்களில் புதாபெஸ்ட்டில் அவர்கள் அதை வாசித்ததும், ‘இது என்ன இசை’ என்று யாரோ போட்ட இசையைக் கேட்பதுபோல் நின்ற இளையராஜாவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தேன். அப்போது அதை யாரோ ஒருவர் போட்டோ எடுத்ததாகவும் நினைவு. ‘`யாரோ போட்டமாதிரி நீங்க என்னங்க இப்படி ரசிக்கிறீங்க. உங்க மியூசிக்தாங்க’’ என்றேன். அதன்பிறகு அங்கிருந்த இசைக்கலைஞர்கள் ராஜாவிடம் நடந்துகொண்ட முறையே வேறாக இருந்தது. சென்னையில் அவர் வரும்போது எப்படிச் சுவரோடு ஒட்டிக்கொண்டு நின்று வணக்கம் சொல்லி வழிவிடுவார்களோ அப்படி புதாபெஸ்டிலும் அடுத்தநாள் ரெக்கார்டிங்குக்காக வந்தவரை, ‘மேஸ்ட்ரோ, மேஸ்ட்ரோ… மேஸ்ட்ரோ’ என்று அழைத்து ஒதுங்கி வழிவிட ஆரம்பித்தனர். இப்படி ‘ஹேராம்’ படம் மூலம் ராஜா, இசையில் வேறொரு அனுபவத்தைத் தந்தார். அதனால்தான், இசையமைப்பாளர்களாக ஆசைப்படுபவர்களுக்கு `ஹேராம்’ பட இசை ஒரு மிகப்பெரிய மியூசிக்கல் சிலபஸ் என்றேன்.
ராகதேவன் இளையராஜா ....
தமிழ் சினிமா என்கிற மிகக் குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே அடக்கி விட முடியாத பெயர் - இளையராஜா. ஹாலிவுட் படங்களையும், அதையும் கடந்து, ஆப்ரிக்க, அண்டார்டிக்க படங்களையும் காப்பியடித்து, வேஷம் கட்டி ‘யுனிவர்சல் ஹீரோ’க்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் மத்தியில், நிஜமாகவே இவர் ராஜா. ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த அபூர்வ ஞானி. முதல் படம் ‘அன்னக்கிளி’ துவங்கி, ஆயிரமாவது படம் ‘தாரை தப்பட்டை’ வரை, ராகத்துக்குள் தாலாட்டை மறைத்து வைத்து தட்டுப்பாடின்றி விநியோகிக்கிற ராகதேவன்.
இளையராஜா பற்றியோ, அவர் ராகம் இயற்றி உலாவ விட்ட பாடல்களின் பெருமைகள் பற்றியோ எழுதுவதற்கு புதிதாக ஒரு வார்த்தை கூட இல்லை. புகழ்ந்து பேசுவதற்கு புதிதாகத்தான் சொற்களை உருவாக்கவேண்டும். தனக்குத் தானே மகுடம் சூடிக் கொள்கிற (தமிழ்) சினிமா உலகில், புனைவுப் பிம்பங்களின் வெளிச்சங்களை விலக்கி, யதார்த்தத்தின் நிழலில் இயங்கிக் கொண்டிருப்பவர். ‘தாரை தப்பட்டை’ என்கிற படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமானது. 1976ம் ஆண்டு, ‘அன்னக்கிளி’யில் அறிமுகமான இளையராஜாவுக்கு இது ஆயிரமாவது படம். உலகில் எந்த இசையமைப்பாளரும் சாதித்திராத சாதனை, . ஒரு படத்துக்கு ஐந்து என்று வைத்துக் கொண்டாலும் கூட, மனக்கணக்கு போட்டு பெருக்கிப் பார்த்தால்... 5 ஆயிரம் பாடல்கள். அதில், 4 ஆயிரத்துக்கும் அதிகமானவை சூப்பர் ஹிட். ஒவ்வொன்றும், மன அழுத்தம் போக்குகிற மாமருந்து. இப்போது கேட்டாலும், முழுமையாக ஆட்கொள்ளும் ஆற்றல் நிரம்பக் கொண்டவை. பாடல்கள் வசீகரிக்கின்றன; புதிய உலகிற்குக் கை பிடித்து அழைத்துச் செல்கின்றன என்றால், பின்னணி இசையும் மென் ஒத்தடம். அமைதியாக வழிந்தோடுகிற நீரோடையாக, ஆர்ப்பரித்துப் பாய்கிற பேரருவியாக, பசும் பள்ளத்தாக்குகளின் கீழிருந்து பனிப்புகையாக கிளம்பி வந்து உடல் தழுவும் ஜில் காற்றாக, அவரது பின்னணி இசையும் நம்மை வினோத பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
சிந்துபைரவி. ராஜாவின் இசை இந்தப்படத்தின் உயிர். ராஜாவன்றி, இந்தப் படமில்லை. சாஸ்திரிய சங்கீதங்களையும், நாட்டுப்புற மெட்டுகளையும் குழைத்து அவர் உருவாக்கிய ராகங்கள், சங்கீத வித்வான்களையும், விமர்சகர்களையும் மெய் மறந்து சபாஷ் போட வைத்த மாயத்தை மறக்கத்தான் முடியுமா? சொல்லால் அடிக்கிற விமர்சகர் சுப்புடுவை கூட சரண்டர் ஆக வைக்கிற வித்தை, ராஜாவின் ஆர்மோனியப் பெட்டிக்கு மட்டும்தானே தெரிந்திருந்தது? எத்தனை பெருமை இருந்து என்ன பயன்? ஆயிரம் படம் கடந்த அசாதாரண சாதனையை அங்கீகரித்து, பாராட்ட செந்தமிழ் நாட்டில் ஆளில்லையே...?
ராஜாவால் உருவாக்கப்பட்ட பிம்பங்கள் தமிழ் சினிமாவில் ஏராளம். ராஜாவின் இசைக்கு வாயசைத்து, சினிமாவை ஆட்சி செய்தவர்களின் பட்டியல் மிகப் பெரிது. பாட்டுப் பாடிய படியே பசு மாட்டில் பால் கறந்தவர், ஒரு கட்டத்தில் உச்ச நட்சத்திரத்தைக் காட்டிலும் அதிக செல்வாக்குடன் தமிழ் சினிமாவில் வலம் வந்தார். கலர், கலராக சட்டை போட்டு, லிப்ஸ்டிக் பூசி அவர் நடித்த படங்கள், உச்ச நட்சத்திரங்கள், உலக நாயகன்களுக்கு கடும் சவாலாக விளங்கின. அந்த வெற்றியின் பின்னணியில் மறைபொருளாக ராஜாவின் இசை இருந்தது. இசை மட்டுமே இருந்தது. இது போல இன்னும் பல படங்களைச் சொல்லலாம். பொம்மலாட்டத்தில் வித்தை காட்டுகிற பொம்மைகள் போல நடிகர்கள் கடந்து செல்ல... பின்னணியில் இருந்து அவர்களை முழுமையாக இயக்கியது ராஜ இசை.
பாரதிராஜா, (காலம் சென்ற) பாலச்சந்தர், மணிரத்னம், பாலா, எஸ்.பி.முத்துராமன், ஆர்.சுந்தரராஜன், பி.வாசு... என முன்னணியில் இருக்கிற / இருந்த இயக்குனர்களின் அடித்தளம், ராஜாவின் இசையால் கட்டமைக்கப்பட்டது. மறுக்கமுடியாது. நடிகர்களுக்காக, நடிகைகளுக்காக, இயக்குனர்களுக்காக படம் ஓடிய காலத்தை கட்டுடைத்து... இசைக்காகவும், பாடல்களுக்காகவும் படம் ஓடிய ஒரு புதிய பாதை ராஜாவில் எழுப்பப்பட்டது.
ராஜாவை கவுரவப்படுத்த வேண்டுமானால், அன்னக்கிளி தொட்டு சிம்பொனி, திருவாசகம்... என பல காரணம் நியாயமாகவே இருக்கிறது. ஆனாலும், ஆயிரம் படங்களை கடக்கிற அசாத்திய சாதனையை கவுரவப்படுத்தவேண்டும் என தமிழ் சினிமா பிரம்மாக்களுக்கு ஏன் தோன்ற வில்லை? எந்த ஹிந்தி பாடல்களின் ஆக்கிரமிப்புக்கு தமிழகத்தில் அழுத்தமாக முற்றுப்புள்ளி வைத்தாரோ... அந்த ஹிந்திப்பட உலகம்தான், ராஜாவை முதலில் அழைத்துப் பாராட்டியிருக்கிறது. இந்திய சினிமாவின் நிஜ உச்சநட்சத்திரம் அமிதாப் பச்சன் தனது கைப்படவே அழைப்பிதழ் தயாரித்திருக்கிறார். இந்திய திரையுலகின் பொக்கிஷம் என இளையராஜாவை குறிப்பிட்டு, அவருக்கான பாராட்டுவிழாவில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என ஒவ்வொருவராக தேடிப் பிடித்து அழைப்பிதழ் அனுப்பி வைத்திருக்கிறார்.
வீட்டுக்குள் இருக்கிற ரத்த சொந்தத்தின் விஷேசத்துக்கு, பக்கத்து வீட்டுக்காரர் அழைப்பிதழ் அனுப்பி கூப்பிடுவது போல, ராஜாவின் இசையால் உடல் வளர்த்த, ஊன் வளர்த்த தமிழ் சினிமா சகாப்தங்களுக்கு அழைப்பிதழ் அமிதாப்பிடம் இருந்து வந்து சேர்ந்தது. விழாவை முன்னின்று நடத்தக் கடமைப்பட்டவர்கள், விருந்தாளிகளாக மும்பை போய் இறங்கினார்கள். விழா மேடையில் அமிதாப் பச்சன் ராஜாவின் பெருமைகளை வியந்து போய் பாராட்டிப் பேசினார். உலக நாயகனும், உச்ச நட்சத்திரமும் ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’வில் பேசுவது போல, விமானத்தில் போகிற போதே எழுதித் தயாரித்து, மனப்பாடம் செய்ததை ஒப்பித்தார்கள்.
‘ஆயிரம் படங்கள்... அப்பப்பா! உங்கள் இசைப்பயணம் குறித்துப் பேசுங்களேன்’ என்று ராஜாவிடம் கேள்வி வைக்கப்பட்டது. ‘நான் பயணிக்கவே இல்லையே. அன்னக்கிளியில் எந்த இடத்தில் இருந்தேனோ... அதே இடத்தில்தான் இப்போதும் இருக்கிறேன். எனது இசை தேவைப்படுபவர்கள், பயணித்து வந்து என்னிடம் பெற்றுச் செல்கிறார்கள்....’ என்ற ராஜாவின் பதிலில், நிஜமாகவே உண்மை இருக்கிறது. ...எத்தகைய எளிமையான மனிதர். .இவர் வாழம் இந்த நாளில் நானும் வாழ்கின்றேன் என்ற பெருமை ஒன்றே போதும். ...இது அல்லவா நாம் செய்த பாக்கியம்? ...!
சிலரை சில்லறையை பார்த்தால் சிப்பு சிப்பாக வருகிறது.
2 படம் ஓடணும் அதுக்கு தான் வரேன் சொல்லறாரு ??
150 படம் எப்படி ஓடியது வரவேணும் ஆசை காட்டினாய் ஓடியது ??
150 படம் எப்படி ஓடியது வரவேணும் ஆசை காட்டினாய் ஓடியது ??
குசேலன் ஏன் ஓடலே , எழுதிக்கொடுத்த வசனம் பேசினேன் , என்று சொன்னதால் ஓடலே
தப்பு நடந்தா ஆன்மீகத்தை விட்டு அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன பாபா ஏன் ஓடலே
தப்பு நடந்தா ஆன்மீகத்தை விட்டு அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன பாபா ஏன் ஓடலே
அப்போ லிங்கா ??? மிக பெரிய ஹிட் இல்லையே , அதுக்கு காரணம் ???
ரஜினி ரசிகர்கள் opening கொடுத்தார்கள் 1975 to 2004
ஆனால் 2004ருக்கு பிறகு ரஜினி ரசிகர்கள் என்ற போர்வையில் சிலர் whisky பாட்டில்
opening தான் கொடுத்தார்கள் , படம் சரியில்லை என்று காலை 6 மணிமுதல் பேத்தல்
ஆனால் 2004ருக்கு பிறகு ரஜினி ரசிகர்கள் என்ற போர்வையில் சிலர் whisky பாட்டில்
opening தான் கொடுத்தார்கள் , படம் சரியில்லை என்று காலை 6 மணிமுதல் பேத்தல்
ரஜினி படம் ஓடியது என்றால் என்ன நடந்திருக்கவேண்டும் தெரியுமா ??
ஒவ்வொரு ரஜினி ரசிகனும் 2 முறை திரையரங்கில் படத்தை பார்த்தால்
படம் பார்க்கும் பெண்கள் அனைவரும் திரையரங்கில் பார்த்தால்
ஏனைய தமிழர்கள் ஒரு முறை திரையில் பார்த்தால் தான் , அந்த படம் சூப்பர் ஹிட்
இதில் எதில் குறைவு இருந்தாலும் அது ஹிட்
இதில் ரெண்டு குறைந்திருந்தால் அது பிளாப்

2000 திரையரங்கு , 5 ஷோ , 3 நாட்கள் 50 ரூபாய் டிக்கெட்
என்பது பெரிய பணமா ??, தயாரிப்பு செலவு தான்
என்பது பெரிய பணமா ??, தயாரிப்பு செலவு தான்
6 கோடி தமிழர் 50 ரூபாய் கொடுத்தால் எவ்வளவு வரும்
அது தான் பெரிய பணம்
அது தான் பெரிய பணம்
அது தான் ரஜினி பட ஹிட் என்பது , இந்த ஹிட் டை
ரசிகர்களை உசுப்பேத்தி வாங்கமுடியாது
ரசிகர்களை உசுப்பேத்தி வாங்கமுடியாது
வரேன்னு சொன்ன அதற்கும் விமர்சனம்
பதில் சொல்லவில்லை என்றால் அதற்கும் விமர்சனம்
இவர்களுக்கு பெரியார் என்றால் மூத்திர பை தான் தெரியும்
அவ்வளவு தான் அறிவு , திராவிடன் என்றால் தெர்மோகோல் தான்
தெரியும் அவ்வளவுதான் தெளிவு , தேசியம் என்றால் மட்டும்
2g விடுதலை தெரியாது ...

ரஜினிக்கு மெளனமாக இருக்க தெரியும்
உள்நோக்கம் கொண்ட கேள்விகளை தவிர்க்க தெரியும்
நீட்டிய மைக்கு எல்லாம் பதில் சொல்லும் twitter அரசியல் வாதி அல்ல
புகழ்ந்தால் போதை ஏறி அமர்ந்து துப்பும் theatre அரசியல் வாதி அல்ல
உள்நோக்கம் கொண்ட கேள்விகளை தவிர்க்க தெரியும்
நீட்டிய மைக்கு எல்லாம் பதில் சொல்லும் twitter அரசியல் வாதி அல்ல
புகழ்ந்தால் போதை ஏறி அமர்ந்து துப்பும் theatre அரசியல் வாதி அல்ல
4 வார்த்தையில் சொல்ல தெரிந்தவர்
விமர்சகர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்
யாருக்கு தேவையில்லையோ அவருக்கு கிடைப்பதுதான் தெய்வ சங்கல்பம்
யாருக்கு ஏறாதோ அவரை ஏற்றுவதுதான் கடவுள் தரும் அருள்
யாருக்கு ஏறாதோ அவரை ஏற்றுவதுதான் கடவுள் தரும் அருள்
குரைப்பதால் யாரும் அறிய படுவதில்லை
ஒருங்கிணைப்பு தான் நடக்கும் இப்போ
பலமுறை சொன்னார் , எனக்கு எல்லா கட்சியிலும் ரசிகர் இருக்கினார்
அவர்களை நான் விட விரும்பவில்லை என்று
பலமுறை சொன்னார் , எனக்கு எல்லா கட்சியிலும் ரசிகர் இருக்கினார்
அவர்களை நான் விட விரும்பவில்லை என்று
இப்போ 2 படத்திற்காக வரவில்லை ரஜினி
அதிமுக தலையை நாடுகிறது
திமுக செயல்தலையை ஏற்காது , காத்திருக்கிறது
அன்புமணி நிலை உணர்ந்து இருந்தார் 2014லில் இப்போ அப்பாவுக்கும் நிலையை
உணர்த்தி இருக்கிறார் 2016 றில்
கம்யூனிஸ்ட் நிலை மாறுவதில்லை தலையை ஒத்துக்கொள்ளும் வீசியதில்
காங்கிரஸ் 26 வருடங்களாக தலையை தேடுகிறது
பிஜேபி தமிழகத்தை பொறுத்தவரை முகத்தை தேடுகிறது , மாட்டி கொள்ள

இது தான் அணைத்து கட்சியில் இருந்தும் தொண்டர் வெளியே வந்து
ரஜினி தேடும் காவலர்களை தரும்
2004-2016 சோ இருக்க நான் எதற்கு என்றும்
1998-2004 மூப்பனார் இருக்க . சோ இருக்க நான் எதற்கு என்றும்
பொறுமை காத்த ரஜினி , இன்று தான் தமிழர் நிலையை விமர்சித்திருக்கிறார்
1998-2004 மூப்பனார் இருக்க . சோ இருக்க நான் எதற்கு என்றும்
பொறுமை காத்த ரஜினி , இன்று தான் தமிழர் நிலையை விமர்சித்திருக்கிறார்
அவமானமா இருக்கு இந்த அரசியல் கூத்து
காப்போம் நமது தொன்மையை என்று
காப்போம் நமது தொன்மையை என்று
எனவே விமர்சகர்கள் கொஞ்சம் பொறுமை காத்து அமைதியாக இருங்கள்
நலலவர்களா வரும் பொழுது சிறுமை படுத்தி
விமர்சித்தே நாத்தம் பிடித்த வாயை மூடாமல்
அவர்களே வெட்கி , சீ இந்த அற்பர்களுக்கா பதில் சொல்ல வேண்டும் என்று
ஒதுங்க செய்து , அப்பறம் , அந்த காலம் போல வருமா
காமராஜுக்கு பிறகு யாரும் ஒழுக்கம் இல்லை என்று புலம்பி
நாறடித்தது போதும்

ரஜினிக்கு கடமைகள் முடிந்தது , இனி அவர் ஏற்கும் பொறுப்பை
செம்மையாக செயல் படுத்த தடையில்லை
செம்மையாக செயல் படுத்த தடையில்லை
உங்கள் வாய் ஏற்கும் வாடகை கொடுக்காதவன் , அரசியலுக்கு வந்தால் ???என்று
பணக்கார்கள் வதந்தியை ஆணுமதிக்கமாட்டார்கள் , பூசி மொழுக பார்ப்பார்கள்
ஸ்டாலின் போல , இதை வைத்து காசு பறிக்கலாம் என்று நினைத்த சில
முட்டாள்கள் , வெளியே சொல்வேன் என்று சொன்ன பொழுது
பணக்கார்கள் வதந்தியை ஆணுமதிக்கமாட்டார்கள் , பூசி மொழுக பார்ப்பார்கள்
ஸ்டாலின் போல , இதை வைத்து காசு பறிக்கலாம் என்று நினைத்த சில
முட்டாள்கள் , வெளியே சொல்வேன் என்று சொன்ன பொழுது
போடா சொல்லு என்று விட்ட தான் அந்த கதைகள்
தமிழன் கடைசியில் நடிகனைத்தானே பிடித்தான் என்று கேவலமாக
பேசுவோர் நல்ல அரசியல்வாதிக்கு நான் ஒட்டு போட்டேன் என்று
சொல்ல சொல்லுங்கள்
பேசுவோர் நல்ல அரசியல்வாதிக்கு நான் ஒட்டு போட்டேன் என்று
சொல்ல சொல்லுங்கள்
ஒரு டாக்டர் வந்தால் உடனே , உங்களுக்கு ஏன் சார் தலையெழுத்து என்போம்
ஒரு என்ஜினீயர் வந்தால் , சொத்து இருக்கு வரிசெலுத்தாமல் இருக்க செய்கிறார் என்போம்
பாதை யாத்திரை சென்றால் , சுகர் இருக்கு அதனால் தான் நடக்கிறார் என்போம்
ஒரு என்ஜினீயர் வந்தால் , சொத்து இருக்கு வரிசெலுத்தாமல் இருக்க செய்கிறார் என்போம்
பாதை யாத்திரை சென்றால் , சுகர் இருக்கு அதனால் தான் நடக்கிறார் என்போம்
இப்படி ஒரு அறிவும் இல்லாமல் நெகடிவ் பேசி பேசி பேசி கெடுத்துவிட்டு
சாபம் வேறு கொடுப்போம்
சாபம் வேறு கொடுப்போம்
இந்த கயமைகள் கொஞ்ச நாள் அடங்கட்டும்
3 வருடங்கள் செய்ய முடியலே னா
resign செய்வேன்
தொண்டர்கள் வேண்டாம் காவலர்கள் வேண்டும்
பதவி எமக்கு வேண்டாம் நல்லவர்களை அமர்த்துவேன்
resign செய்வேன்
தொண்டர்கள் வேண்டாம் காவலர்கள் வேண்டும்
பதவி எமக்கு வேண்டாம் நல்லவர்களை அமர்த்துவேன்
இன்று இருந்து எம்மையும் விமர்சகன் ஆக்கி
(உங்கள் ஊடக புத்தியை காட்டாதீர்கள்)
எதையும் விமரிக்கமாட்டேன் எதற்காகவும்
போராடமாட்டேன் , அதற்கென்று பலர் இருக்கிறார்கள்
அவர்கள் அதை செய்தாக வேண்டும் , நீரில் விழுந்து
விட்டார்கள் , அவர்கள் நீந்த வேண்டும்
(உங்கள் ஊடக புத்தியை காட்டாதீர்கள்)
எதையும் விமரிக்கமாட்டேன் எதற்காகவும்
போராடமாட்டேன் , அதற்கென்று பலர் இருக்கிறார்கள்
அவர்கள் அதை செய்தாக வேண்டும் , நீரில் விழுந்து
விட்டார்கள் , அவர்கள் நீந்த வேண்டும்
நாம் இன்னும் விழவில்லை
இணைவோம் இணைப்போம் தெருவுக்கு
பலரை ,
இணைவோம் இணைப்போம் தெருவுக்கு
பலரை ,
அங்கீகாரம் பெற்ற மன்றம் இருக்கு
அங்கீகாரம் பெறாமல் 2.5 மடங்கு இருக்கு
அங்கீகாரம் பெறாமல் 2.5 மடங்கு இருக்கு
இணைப்போம் பிறகு காப்போம்
சிம்பிள்
டாம் திறந்து விட்டாச்சு , இனி வெள்ளாமை தான்
குப்பைகள் அடித்து செல்ல படும்
குப்பைகள் அடித்து செல்ல படும்
காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூனும் இரவில் படுக்கும்முன் ஒரு ஸ்பூனும் சாப்பிட்டால் போதும்
காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூனும் இரவில் படுக்கும்முன் ஒரு ஸ்பூனும் சாப்பிட்டால் போதும்
வளர்ந்து வரும் அதிநவீன காலச்சூழ்நிலையில் தற்போது உட்கார்ந்தே வேலை செய்வதால்,
சிறுநீரகங்களில் பிரச்சனைகள் (Kidney diseases) அதிகம் ஏற்படு கிறது. பெரும்பாலான சாப்ட்வேர் கம்பெனி (Software Company) களில் வேலை செய்வோர் சிறுநீரக பிரச்சனை (Kidney Diseases) யால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். சிறுநீரகங்களில் பிரச்ச னைகள் ஏற்படுவதற்கு முறையற்ற ஊட்டச்சத்து மற்றும் நீரேற்றம் தான்.
ஒவ்வொருவரும் சிறுநீரக கற்கள் (Kidney Stones) மற்றும் பித்த க்கற்கள் (Gallstones) இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளை தெரி ந்து வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு அவற்றின் அறிகுறிகளு ம், இந்த கற்களை கரைக்க உதவும் ஓர் அற்புத நாட்டு மருந்து (Country Medicine)குறித்தும் கொடுக்க ப்பட்டுள்ளது.
சிறுநீரக கற்கள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் (Symptoms of Kidney Stones)
* அடி முதுகுப் பகுதியில் வலி
* இயல்புக்கு மாறான சிறுநீர்
* சிறுநீரில் இரத்தம்
* குளிர் காய்ச்சல், குமட்டல், வாந்தி
* இயல்புக்கு மாறான சிறுநீர்
* சிறுநீரில் இரத்தம்
* குளிர் காய்ச்சல், குமட்டல், வாந்தி
பித்தக்கற்கள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் (Symptoms of Gallstones)
* வயிற்றின் வலதுப் பக்கத்தில் கடுமையான வலி
* குளிர் காய்ச்சல்
* கடுமையான குமட்டல் மற்றும் வாந்தி
* மார்பக எலும்பிற்கு கீழே வலி
* நெஞ்செரிச்சல்
* செரிமான பிரச்சனை
* குளிர் காய்ச்சல்
* கடுமையான குமட்டல் மற்றும் வாந்தி
* மார்பக எலும்பிற்கு கீழே வலி
* நெஞ்செரிச்சல்
* செரிமான பிரச்சனை
தேவையான பொருட்கள் (Required ingredients):
விர்ஜின் ஆலிவ் ஆயில் – 0.25 லி
எலுமிச்சை தோல் – 250 கிராம்
சர்க்கரை பவுடர் – 250 கிராம்
தேன் – 250 கிராம்
நறுக்கிய பார்ஸ்லி வேர் – 250 கிராம்
எலுமிச்சை தோல் – 250 கிராம்
சர்க்கரை பவுடர் – 250 கிராம்
தேன் – 250 கிராம்
நறுக்கிய பார்ஸ்லி வேர் – 250 கிராம்
தயாரிக்கும் முறை:
* முதலில் எலுமிச்சை (Lemon) தோலை பேக்கிங் சோடா கலந்த வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் பார்ஸ்லி வேர் சேர்த்து நன்கு அரைத்து, ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் தேன் (Honey), ஆலிவ் ஆயில் (Olive Oil) மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியில் அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாத்துப் பயன்படுத்தவும்.
உட்கொள்ளும் முறை:
இந்த கலவையை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 1 டேபிள் ஸ்பூனும், இரவில் படுக்கும் முன் ஒரு டேபிள் ஸ்பூனும் சாப்பிட வேண்டும். இப்படி தொடர்ந்து தினமும் சாப்பிட்டுவர, விரைவில் சிறுநீரக கற்கள் (Kidney Stones) மற்றும் பித்தக் கற்கள் (Gallstones) கரைவதைக் காணலாம்.
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனைப் பெற்று உட்கொள்ளவும்.
அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை – இன்றைய இளம்பெண்கள் காதல் மற்றும் திருமணம் குறித்து நினைப்பதென்ன?
அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை – இன்றைய இளம்பெண்கள் காதல் மற்றும் திருமணம் குறித்து நினைப்பதென்ன?
விரைவாகவே பெண்கள் திருமணம் செய்துகொண்ட காலம் ஒன்று இருந்தது. அதனால்
‘சீக்கிரம் திருமணம் செய்துகொள்வது, பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற தல்ல’ என்று கூறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. அடுத்து பெண்கள் வெகுகாலம் திருமணத்தை தள்ளிப்போட்டனர். அதனால் ‘ முதிர்கன்னிகளாகும் நிலையை மாற்ற சரியான வயதில் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று சொல்லும் நிலை உருவானது.
இன்றைய சூழ்நிலை தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறது. ‘கல்யாண மே வேண்டாம்’ என்று ஒருசாராரும், ‘கல்யாணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழலாம்’ என்று இன்னொரு சாராரும் சொல்லத் தொடங்கியிருக்கி றார்கள். அதனால் எதிர்காலத்தில் கல்யாணம் என்பதே காணாமல் போய்விடுமோ என்ற கவலை பெற்றோர் மத்தியில் உருவாகியிருக்கிற து.
இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் பெண்கள்தான். அதிகாலையில் எழுந்து, குளித்து, பளிச்சென்று உடை உடுத்தி, காபி போட்டு எடுத்துக்கொண்டு படு க்கை அறைக்கு போய், ‘என்னங்க எழுந்திருங்க..’ என்று கணவரை, மனைவி எழுப்பிய காட்சி யை இப்போதெல்லாம் சினிமாவில்கூட காண முடிவதில்லை. ஏன்என்றால் அப்படிப்பட்ட பெண்கள் யாரும் இன்று இல்லை. கணவரின் கைகளை பற்றிக்கொண்டு, நகத்தை கடித்தபடி ஒன்றும் அறியாத அப்பாவிபோல் நடிக்கவும் இன்று எந்த பெண்ணும் தயார் இல்லை. தங்கள் பலத்தை நிலைநிறுத்திக்கொள்ளவும், எதிர்பா ர்ப்புகளை ஈடேற்றிக்கொள்ளவும் பெண்கள் தயாராகிவிட்டார்கள். அது அவர்களது திருமணக்கொள்கையில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சமீபத்து சர்வே ஒன்றுக்காக, ‘திருமணம் (Marriage) செய்துகொள்ளாம லே ஆணும் – பெண்ணும் சேர்ந்து வாழ்வது பற்றி உங்கள் கருத்து என்ன (Living together)?’ என்ற கேள்வி இளம் பெண்களிடம் கேட்கப்பட்டது. அதில் அவர்கள் அளித்த பதில் பலரையும் சிந்திக்க வைத்திருக்கிறது.
‘திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழ்வது சரி’ என்று 27 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள். (முன்பு 4 முதல் 8 சதவீதம் பெண்களே இந்த கருத்தை கூறியிருந்தார்கள்) 65 சதவீதம் பேர், ‘அப்படிப்பட்ட வாழ்க்கை சரியானதல்ல’ என்று கூறி யிருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் ‘எதிர்கா லத்தில் அந்த மாதிரியான வாழ்க்கை முறை வந்தாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை’ என்று கூறியிருக்கிறார்கள்.
அதிக செலவுகளில் நடக்கும் ஆர்ப்பாட்ட திருமணங்களின் மீதும் பெண்களுக்கு நம்பிக்கை குறைந்துகொண்டிருக்கிறது. ‘இரண்டு இதயங்கள் இணைய த்தானே திருமணம் நடக்கிறது. அதற்குப் போய் இத்தனை லட்சங்களை ஏன் வாரி இறைக்க வேண்டும்’ என்ற கேள்வியையும் அவர்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
“ஆர்ப்பாட்டமான விழா மூலம் திருமண வாழ்க்கையில் இணைந்த பெண்கள் பலர், கூண்டுக்குள் சிக்கிய கிளிகள் போன்று திணறிக்கொண்டிருப்பது எங்களுக்கு தெரியும். பந்தத்தை விடவும் முடியாமல், தொடரவும் முடி யாமல் அவர்கள் தவித்து க்கொண்டிருப்பதை நாங்கள் அறிவோம். சில ரோ ‘அப்பாடா தப்பித்தோம்’ என்றபடி விவாகரத்து வாங்கிவிட்டு ஓடிவ ந்துவிட்ட கதையும் எங்களுக்கு தெரியும். இப்படி பலவீனமாக இருக்கும் திருமண பந்தத்திற்கு, லட்சங்களில் செலவு தேவையில்லை” என்று கூறும் பெண்கள், மத ஆச்சார சம்பிரதாயங்களோடு எளியமுறையில் திருமணம் நடந்தால் போதும் என்று கூறுகிறார்கள்.
காதலையும் இந்த தலைமுறை அவ்வளவு சீரியசாக எடுத்துக்கொள்ள வில்லை. ‘காதல் முறிந்து போனால் கை நரம்புகளை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி செய்ததெல்லாம் பழங்கதை. இப்போது அப்படி ஒரு ஆறாத சோக உணர்வு தோன்று வதுமில்லை. அதை செய்ய எங்களுக்கு நேரமும் இல்லை. காதல் தோற்றால், போகட்டுமே என்று விட்டுவிடுவோ ம்” என்று சொல்லும் கல்லூரி மாணவிகள், ‘எல்லா பெண்களுக்கும் ஒரு காதல் அனுபவம் கட்டாயம் அவசியம்’ என்றும் சொல்கிறார்கள்.
அவர்களிடம், ‘நீங்கள் காதலித்தவரை திருமணம் செய்ய, உங்கள் குடும்ப த்தார் எதிர்த்தால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டபோது, ‘பெற்றோர் சொ ல்வதைத்தான் கேட்பேன்’ என்று 41 சதவீதம் பெண்கள் சர்வேயில் பதில் கூறியிருக்கிறார்கள். 32 சதவீத பெண்கள், ‘எவ்வளவு நெருக்கடிகள் வந்தா லும் காதலித்தவரை கைவிடமா ட்டேன்.
இறுதி வரை காதலுக்காக போராடுவேன்’ என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ளவ ர்களில் பெரும்பகுதியினர், ‘திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என்று பெற்றோ ருக்கு அழுத்தம் கொடுப்பேன்’ என்று கூறியிருக்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஒருசிலர்கூட ‘தற்கொலை செய்துகொள்வேன்’ என்றெல்லாம் மிரட்டல் கருத்து தெரிவிக்கவில்லை யாம்! அதனால் பெண்கள் யதார்த்தத்தை புரியத் தொடங்கி விட்டார்கள் என்று அந்த சர்வே குறிப்பிடுகிறது.

குறிப்பு
மேலுள்ள கட்டுரைக்கும் கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் நடிகைகளின் ஒளிப்படங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் நோக்கில் பகிரப்பட்ட ஒளிப்படங்களே
Subscribe to:
Posts (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...