Saturday, December 30, 2017

நாகரீகம் என்ற போர்வையில் நாய்களுக்கு எலும்புத்துண்டு போடாதீர்கள்.

நாகரீகம் என்ற போர்வையில் நாய்களுக்கு எலும்புத்துண்டு போடாதீர்கள் – 
இந்த வரியை நான் சொல்லவில்லை பின் யார் சொன்ன‍து என்று
யோசிக்கிறீர்களா ? அதைத் தெரிந்து கொள்ள‍ மேற்கொண்டு படியுங்கள்
நாசமா போகும் இன்றைய நாகரீக உலகில் ஆடைகுறைப்பு என்பது சர்வசாதாரண மாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் திரைப்படங்களில் ஒருசிலவற்றி ல் மட்டுமே ஒரு சில நடிகைகள் ஆடை குறைவாக உடுத்திக்கொண்டு காட்சியில் தோன்றுவார்கள். ஆனால் இன்றோ தலைகீழ்…
இந்த ஆடைகுறைப்பு குறித்த‍ தனது கருத்தினை, அறிவுரையை உலகப் புகழ் குத்து ச்சண்டை வீரர் முஹம்ம‍து அலி தனது மகளுக்கு சொன்ன அறிவுரையை கேளுங்கள் உணருங்கள் செயலாற்றுங்கள்
உலக பிரபல குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி அவர்களின் மகள் ஹானா…  தன் தந்தை முஹம்மது அலியை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்ற போது, மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது. அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் ஹானா… வெளியிட்டுள்ளார்.
நானும் என் தங்கை லைலாவும் தந்தையின் அறைக்கு சென்றோம்.  வழக்கம்போல், தந்தை கதவிற்குப்பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறு த்துவது போல் நின்றார். நாங்கள் உள்ளே சென்றவுடன், எங்களை ஆரத் தழுவி, முத்தமிட்டப் பின்பு, அவர் எங்களை உற்றுப் பார்த்தார். 
எங்களை அருகில் அமர்த்திக்கொண்டு, என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து,
முஹம்மது அலி – “ஹானா, இந்த உலகில் மி்க மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது. 
வைரங்களை எங்கு எடுப்பாய்?
ம‌கள் ஹானா – பூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதா கவும், பாதுகாக்க ப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன.
முஹம்மது அலி – முத்துக்களை எங்கு எடுப்பாய்?
ம‌கள் ஹானா – கடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் முத்துக்க ள் உள்ளன.
முஹம்மது அலி – தங்கத்தை எங்கு எடுப்பாய்?
ம‌கள் ஹானா – சுரங்கத்தினுள்ளே, அடுக்கடுக்கான பாறைகளு க்குள்ளே மறைக்க ப்பட்ட நிலையில் , அதை எடுப்பத்தற்கு நீ மிகக் கடினமாக உழைக்க வேண்டும். “
(என்னை உற்று நோக்கியவராக, “உன்னுடைய உடல் புனிதமா னது. வைரங்கள், முத்துக்களை விட நீ புனிதமானவள்.)
முஹம்மது அலி – உன் உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்”..
ம‌கள் ஹானா – ……………. (பதில் பேச வார்த்தைகள் இல்லாததால் மௌனம்)
முஹம்மது அலி- பெண்களின் உடலமைப்பு என்பது இறைவன் தந்த பொக்கிஷம். பொக்கிஷங்களை பொத்திப்பாதுகாப்பதே அறிவார்ந்தவர் செயல்.  அதைவிடுத்து பொக்கிஷம் உள்ள வீட்டை திறந்துபோட்டால்… பொறுக்கிகளால் உங்கள் பொக்கிஷம் சூறையாடத்தான்படும். பொக்கிஷமாய் போற்றி வளர்த்த தாய்தந்தைக்கு அழகு என்ற போர்வையில் அசிங்கத்தை பரிசளிக்காதீர்கள். நாகரீகம் என்ற போர்வையில் நாய்களுக்கு எலும்புத்துண்டு போடாதீர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...