Sunday, December 31, 2017

ஜெ., மரணம்: ராகுலிடம் விசாரணை!

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாஇருந்த போது, அவரை சந்திக்க வந்த, அரசியல் தலைவர்களையும், விசாரணைக்கு அழைக்க, விசாரணை கமிஷன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெ., முதல்வராக இருந்த போது உடல்நிலை பாதிக்கப்பட்டுசென்னைஅப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு இறந்தார். அவர் மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் விசாரிக்க கமிஷன் அமைக்கப்பட்டது.நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன், பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகிறது. 

 அ.தி.மு.க, A.D.M.K,ஜெயலலிதா, Jayalalitha,காங்கிரஸ் தலைவர் ராகுல், Congress leader Rahul, அப்பல்லோ மருத்துவமனை, Apollo Hospital,விசாரணை கமிஷன்,investigation Commission,நீதிபதி ஆறுமுகசாமி,Justice Arumugasamy,  முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவ், former Governor Vidyasagar Rao, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, Vice President Venkaiah Naidu,

அடுத்த கட்டமாக ஜெ., உடன் இருந்தவர்கள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ.,வை சந்தித்ததாக கூறப்படும் பிரமுகர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.ஜெ., அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது தமிழக முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் என, அரசியல் வேறுபாடின்றி பலரும் அவரை சந்திக்க வந்து சென்றனர். 

அவர்களில் எத்தனை பேர் ஜெ.,வை சந்தித்தனர் என்பது தெரியவில்லை. காங்கிரஸ் துணை தலைவராக இருந்த ராகுல், அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து ஜெ., உடல் நலம் விசாரித்தார். அதேபோல் அப்போதைய மத்திய அமைச்சரும், தற்போதைய துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவும் வந்து சென்றார். அவர்கள் ஜெ.,வை சந்தித்ததாகவும் நலம் பெற்று விரைவில் திரும்புவார் என்றும் வெளியில் கூறினர்.

எனவே இதுபோன்ற பேட்டி அளித்தவர்கள் ஜெ.,வை சந்திக்க வந்த பிரமுகர்கள் என அனைவரையும், அழைத்து விசாரிக்க வேண்டும் என, ஆறுமுகசாமி கமிஷனுக்கு, பலரும் கடிதம் அனுப்பி உள்ளனர். அதன் அடிப்படையில் ராகுல் உள்ளிட்டவர்களிடம் விசாரிப்பது குறித்து கமிஷன் ஆலோசித்துவருகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...