Sunday, December 31, 2017

'டிபாசிட்' போனதால் அதிரடி தி.மு.க.,வில் 140 பேர் பதவி பறிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 'டிபாசிட்' பறிபோனதால், தேர்தல் பணியாற்றாமல், 'டிமிக்கி' கொடுத்த, 140 நிர்வாகிகளின் பதவிகளை, தி.மு.க., தலைமை பறித்துள்ளது.
 'டிபாசிட்', போனதால்,அதிரடி,தி.மு.க.,வில்,140 பேர் ,பதவி பறிப்பு

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார்.தி.மு.க., வேட்பாளர், மருதுகணேஷ், 'டிபாசிட்' இழந்தார்.இதனால், அதிர்ச்சி அடைந்த தி.மு.க., தலைமை, தேர்தல் தோல்வி குறித்து விசாரிக்க, சட்டசபை கொறடா, சக்கரபாணி தலைமையில், மூன்று பேர் குழுவை நியமித்தது.


இக்குழு, ஆர்.கே.நகர் தொகுதியில் அடங்கிய சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், ஆர்.கே.நகர் கிழக்கு, மேற்கு பகுதி நிர்வாகிகள், 14 வட்ட நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியது.அதில், பெரும்பாலான நிர்வாகிகள், சரியாக தேர்தல் பணியாற்றாமல், 'டிமிக்கி' கொடுத்து, தினகரனுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்தது தெரியவந்தது. 


மாவட்ட முக்கிய நிர்வாகியின் செயல்பாடுகள் மீதும், பகுதி, வட்ட நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனர்.இதுகுறித்த விரிவானஅறிக்கையை, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினிடம், 
விசாரணைக்குழு நேற்று சமர்ப்பித்தது. இதை அடுத்து, முதல்கட்டமாக, ஆர்.கே.நகர் தொகுதியில் அடங்கிய, 14 வட்டங்களின் நிர்வாகங்களும் கலைக்கப்பட்டு உள்ளதாக, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.


இதனால், ஒரு வட்டத் திற்கு வட்ட செயலர், துணை செயலர், பொருளாளர், பகுதி பிரதிநிதிகள் என, மொத்தம், 1௦ பேர் வீதம், 14 வட்டங்களின், 14௦ நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
இவர்களை தொடர்ந்து, மாவட்ட, பகுதி நிர்வாகி களின் பதவி பறிப்புகளும், அதிரடியாக தொடரும் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.


உள்ளாட்சிமறுவரையறை:அவகாசம் தர கோரிக்கை


மாநில தேர்தல் கமிஷன் தலைவருக்கு, தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள கடிதம்:உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தற்போது, அவசர அவசரமாக, வார்டுகளின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டு, சில மாவட்டங்களில், குளறுபடியான பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.பட்டியல் தயாரிப்பு பணிகள் குறித்து மற்ற அரசியல் கட்சிகளிடம் ஆலோசிக்காமல், தன்னிச்சையாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.


இதில், ஆட்சேபனை இருந்தால், டிச., 2ல், கருத்து தெரிவிக்க வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது. அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக, வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. இது, தி.மு.க., ஓட்டு வங்கியை அழிக்கும் முயற்சி. எனவே, மறுவரையறை பட்டியல் குளறுபடி தொடர்பாக, அரசியல் கட்சிகளும், பொது மக்களும் கருத்துகளை தெரிவிக்க, கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...