Friday, December 22, 2017

வார நாட்களுக்கான விரத வழிபாடு முறைகள் :


*திங்கட்கிழமை விரதம் சிவபெருமானுக்குரிய விரதம். இதை சோமவார விரதம் என்பார்கள். கார்த்திகை மாத சோமவாரம் சிறப்பான விரதமாகும்.
* செவ்வாயக்கிழமை விரதம் அங்காரக விரதம். செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இந்த விரதம் நல்ல பலனைத் தரும்.
* புதன்கிழமை விரதம் அனுஷ்டித்தால் கல்வி, புகழ், ஞானம், தனம் பெருகும். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.
* வியாழக்கிழமை குரு பகவானுக்குரிய நாள். இந்நாளில் விரதமிருந்தால் குருவின் அருளால் திருமணம் கைகூடும். நல்ல குழந்தைகள் பிறக்கும். சகல காரியங்களும் கைகூடும்.
* வெள்ளிக்கிழமை விரதம் சுக்ரவார விரதம். அம்பாளை பூஜை செய்து பாயசம், வடை நைவேத்யம் பண்ணலாம்.
* சனிக்கிழமை விரதம் - சனீஸ்வர பகவானைக் குறித்து இருப்பது என்றாலும் திருப்பதி வேங்கடாசலபதிக்கு உகந்த நாள். தினமும் காக்கைக்கு அன்னமிட்ட வேண்டும். கேது தசை நடப்பவர்கள் சனிக்கிழமை விரதமிருப்பது அவசியம். - இது எல்லாவற்றையும் விட ஒரு முக்கிய விரதம் இருக்கிறது. அதுதான் மௌன விரதம்.
* ஞாயிற்றுக்கிழமை - சூரிய பகவானுக்குரிய நாள். சூரிய நமஸ்காரம் செய்யலாம். ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் செய்யலாம். இதைச் சொன்னால் சூரிய நமஸ்காரம் செய்த பலன் உண்டு

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...