Saturday, December 23, 2017

குலதெய்வ வழிபாடு:

நமது முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாக வழிவழியாக வழிபாடு செய்த இடத்திற்கு , நாம் சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே, நமக்கு விவரம் தெரியாத காலத்திலே நமது பெற்றோர்களோடு சென்று நாம் அனைவருமே வழிபாடு செய்த ஒரேஇடம் அது குலதெய்வ கோவில் தான்.
தம் குலத்தில் பிறந்து தம் குலத்திற்காக அரும்பாடுபட்டு தம்மினம் காத்த தம் முன்னோர்களை வணங்கும் முறையே குலதெய்வ வழிபாடாகும். தம் வாழ்நாள் முழுவதும் தம்மினமக்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்கும் பொருட்டு தன்னுயிர் ஈந்த மாவீரர்களின் தியாகத்தை மறகாமல் நன்றி கூறி வழிபாடு செய்யும் முறையே குலதெய்வ வழிபாடு.
இக்குலதெய்வ வழிபாடுகளின் மூலம், தங்கள் குலத்திற்காக தாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளையும் , தம் முன்னோர்கள் தங்களுக்காக ஆற்றிய அரும்பெரும் கடமைகளையும் , ஈகைகளையும் வருங்கால சந்ததியினருக்கு உணர்த்தப்படுகிறது. தம்முன்னோர்கள் போலவே தாமும் தம் குலத்திற்காகவும், இனத்திற்காகவும் பாடுபட வேண்டும் என்பதை வருங்கால சந்ததியினருக்கு உணர்த்தும் பொருட்டே ஆண்டு தோறும் குலதெய்வ வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
செல்லியம்மன்,பச்சைஅம்மன்,கருப்புசாமி,முனியப்பன் , சுடலைமலை சாமி என்று ஒவ்வொருவருக்கும் ஒரு குலதெய்வம் இருக்கும். குலதெய்வங்கள் பெரும்பாலும் எல்லை சாமியாக தான் இருகின்றன.
பொங்கல் வைத்து ஆடு, சேவல் என்று நமது முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகளை படையலிட்டு வழிபடுகிறோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...