Saturday, December 23, 2017

இதை இன்றும் திருப்பதியில் காணலாம்.

யாரேனும் ஏமாற்றி விட்டால் " கோவிந்தா கோவிந்தா " தானா ??? போட்டுடானா பட்ட" நாமம் " என்று கூறுவதைக் கேட்டிருப்போம் அல்லது நாம் கூட சில நேரங்களில் சொல்லிருப்போம். "கோவிந்தா கோவிந்தா" என்பதும் "நாமம் "என்பதும் வைணவ கடவுள் விஷ்ணுக்கு உரியது என்பதை நாம் அனைவருமே அறிந்ததே, நாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை கூற ஏன் கடவுளின் அதுவும் ஒரு குறிப்பிட்ட கடவுளின் பேரை நாம் ஏன் பயன்படுத்த வேண்டும் என்று என்றாவது யோசித்தது உண்டா?? ஏன் அவ்வாறு கூருகிறோம் அதில் உள்ள மறை பொருள் என்ன என்பதை அறிய யாரேனும் முற்பட்டது உண்டா???
நமது முன்னோர்கள் காரணம் இல்லாமல் எந்த ஒரு சொல்லையும் பயன்படுத்தியது இல்லை, அடுத்த தலைமுறைக்கு அவர்கள் சொல்ல வந்ததை ஓரிரு வார்த்தைகளில், நடைமுறை சொற்களாக, பலமொழியாக சொல்லி சென்றதில் உள்ள மறை பொருளின் மெய் பொருளை நாம் அறிவதற்கே.
பண்டைய காலத்தில் தமிழ் மன்னர்களும் மக்களும் சைவ சமயத்தையே போற்றி வளர்த்தனர். வந்தாரை வாழவைத்த பூமி அல்லவா நம் மண். அறியாத கூட்டம் (ஆரியா கூட்டம் ) வருகைக்கு பின் , சைவ சமயத்தை போலவே நமக்கும் ஒரு சமயம் வேண்டும் என்று உருவாக்கிய வைணவம் செழிப்படைய ஆரம்பித்தது. வைணவம் மெல்ல மெல்ல தனது அதிகாரத்தை செலுத்தியது. பல பெருமை வாய்ந்த சைவ கோவில்கள் வைணவம் கோவிலாக மாற்றப்பட்டது. சைவ சமயத்தினர் இடும் பட்டையை அழித்து விட்டு நாமம் போட்டனர். நம் சொத்தான சைவ கோவிலில் பட்டையை அழித்து நாமம் போட்டு இனி இது வைணவம் கோவில் என்று மாற்ற (சொல்ல) ஆரம்பித்தனர். நாம் தலைமுறை தலைமுறையாக வழிபாடு செய்த இடத்தில் நாமத்தை போட்டு நாம் அறிந்தும் அறியாதது போல மாற்றினர், இது தொடர்கதையானது. பட்டையை அழித்து நாமம் போட்டால் அது வைணவம். அந்த கோவிலுக்கும் நாமம் போட்டுடான, அதுவும் நாமமா என்று சொல்லி சொல்லி , இன்றும் நாம் ஏமாற்றப்பட்டோம் என்று சொல்வதைக் போட்டுடானா "நாமம் " என்று சொல்லி வருகிறோம்.
"அரோகரா.. அரோகரா...." என்பது முருக பெருமானை போற்றி அழைப்பது மரபு. சைவ கோவில்கள் வைணவம் கோவில்களாக மாற்றியதும், முருக பெருமானை போற்றி அழைத்த அரோகரா.. அரோகரா என்பது கோவிந்தா .. கோவிந்தா... என்று மற்றப்பட்டது. இதை இன்றும் திருப்பதியில் காணலாம். 
நண்பர்களே !! இப்பொழுது தெரிகிறதா நாம் ஏன் யாரேனும் நம்மை ஏமாற்றி விட்டால் " கோவிந்தா கோவிந்தா " வா என்றும் , போட்டுடானா பட்ட" நாமம் " என்றும் கூறுவதன் மெய் பொருள்.
வாழ்க வளமுடன் !!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...