Tuesday, December 26, 2017

சரித்திரம் ஆபாசமாக அல்லவா திரும்புகிறது ......

டிடிவி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் திராணி அற்றவர்கள் என்று குறிப்பிட "ஆண்மையற்றவர்கள்" (IMPOTENT) என்ற வார்த்தையைத் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பயன்படுத்தியது விமர்சனங்களையும் எதிர்வினைகளையும் உருவாக்கி இருக்கிறது. எனது இனிய நண்பர் திமுக கே.எஸ்.இராதாகிருஷ்ணன் "இந்த வார்த்தை சரண்சிங்கால் பயன்படுத்தப்படுள்ளது" என்ற வாட்ஸ் அப் பதிவையும் போட்டிருந்தார்.
எமர்ஜென்சிக்குப் பிறகான அரசியலில் சரண்சிங் - மொரார்ஜி மோதல் சூடானது. சௌத்ரி சரண்சிங் விவசாயிகளின் தலைவர். ஜாட் இனத்தவர் நிறைந்த பழைய உ.பி. மாநிலத்தின் செல்வாக்கு மிக்க தலைவர். குறிப்பாக மீரட் பகுதி அவரது பிடியில் இருந்தது. இந்திராகாந்தி தோல்வி அடைந்தபிறகு அவர் பிரதமராக் விரும்பினார்.
ஆனால் ஜனதா ஆட்சியின் பிதாமகரான ஜே.பி. (ஜெயப்பிரகாஷ் நாராயணன்) மொரார்ஜியைத் தேர்வு செய்தார். வேண்டாவெறுப்பாக சரண்சிங் உள்துறையை ஏற்றுக் கொண்டார். இந்திரா மீது நடவடிக்கை எடுக்காத பிரதமர் ஆண்மையற்றவர் (இந்தியில் - நபும்சக்) என்று ஒருமுறை அவர் கூறிவிட்டார். இது எங்கள் காலத்தில் பெரிய தலைப்புச் செய்தி.
சரித்திரம் திரும்பும் என்பார்கள். இப்போது குருமூர்த்தியின் முறை போலும்! பதில் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார் ஒருபடி மேலே போய் "நாங்கள் காங்கேயம் காளைகள்!' என்று சொல்லி இருக்கிறார்.
சரித்திரம் திரும்பும்போது முதல்முறை துன்பியல் நாடகமாகவும் மறுமுறை நகைச்சுவை நாடகமாகவும் இருக்கும் என்றான் ஒரு அறிஞன். பார்ப்போம், போகப் போக என்னென்ன நடக்கப் போகிறது என்று.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...