நுபுர் சர்மாவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக விமர்சித்த நிலையில், நாட்டின் 15 ஓய்வுபெற்ற நீதிபதிகள், 77 முன்னாள் அதிகாரிகள் மற்றும் 25 முன்னாள் ராணுவ அதிகாரிகள் உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் மற்றும் நீதிபதி ஜேபி பர்த்திவாலா ஆகியோரின் கருத்துக்களை கண்டித்து கடிதம் எழுதி உள்ளனர். இதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரம்புமீறி உள்ளதாகவும் அந்த கடிதத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும் நீதித்துறை வரலாற்றில் இதுபோன்ற கீழ்த்தரமான விமர்சனம் இதற்கு முன் நடந்தது இல்லை என்றும் பகிரங்கமாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Tuesday, July 5, 2022
நுபுர் சர்மா மீதான உச்ச நீதி மன்றத்தின் கருத்துக்கு எதிராக 15 முன்னாள் நீதிபதிகள் கொந்தளிப்பு..
பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா கடந்த மாதம் தொலைக்காட்சி விவாதத்தின்போது நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்து இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல இஸ்லாமிய நாடுகள் அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தன, கடந்த 2 வார காலத்திற்கும் மேலாக நுபுர் சர்மாவை கைது செய்ய வேண்டுமென நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து கூறிய ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த டெய்லர் ஒருவர் இருவரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நுபூர் ஷர்மாவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நுபுர் சர்மாவுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என நுபுர் சர்மா தரப்பில் டெல்லி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனு மீதான விசாரணை ஜூலை 1 அன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நுபூர் சர்மாவை கண்டித்தனர். அப்போது, ஜனநாயகத்தில் அனைவருக்கும் பேச்சுரிமை உள்ளது, அதற்காக ஜனநாயகத்தின் வரம்பு மீறி செயல்பட கூடாது, ஒரு தேசிய கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பவர் மத விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும், அவர் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதன் மூலம் ஏற்பட்ட விளைவு ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது.
ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளர் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா? உதய்பூரில் நடந்த படுகொலைக்கு இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களே காரணம் இது தொடர்பாக என்ன நடந்தாலும் அதற்கு நுபூர் ஷர்மா தான் பொறுப்பேற்க வேண்டும். மற்ற மதத்தினரின் நம்பிக்கைகள் மற்ற விவகாரங்களிலும் மரியாதை கொடுக்கப்படவேண்டும் என்ற நிலை இருந்து வருகிறது. ஆனால் நுபூர் ஷர்மா இந்த விஷயங்களை மீறியுள்ளார். இதற்கு அவர் ஊடகத்தின் வாயிலாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என சரமாரியாக நீதிபதிகள் கண்டித்தனர்.
இந்நிலையில் நுபுர் சர்மாவை உச்சநீதி மன்ற நீதிபதிகள் விமர்சித்தது பெரும் பேசுபொருளாக மாறியது, பாஜகவை சேர்ந்தவர்கள் உச்ச நீதி மன்றத்தின் விமர்சனத்தால் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இக்கருத்துகளை கண்டித்து நாடு முழுவதும் உள்ள 15 ஓய்வு பெற்ற நீதிபதிகள், 77 ஓய்வு பெற்ற முக்கிய முன்னாள் அதிகாரிகள், 25 முன்னாள் ராணுவ அதிகாரிகள் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளனர். ஜம்முவில் லடாக்கில் உள்ள மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிமன்றத்தால் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நீதித்துறை வரலாற்றில் இதுபோன்ற கீழ்த்தரமான விமர்சனங்களை இதுவரை யாருமே முன்வைத்தது இல்லை, இக் கருத்துக்களை கூறிய நீதிபதி சூரியகாந்த் ஓய்வு பெறும்வரை உச்சநீதிமன்ற பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும். நுபுர் சர்மா வழக்கு விசாரணையின்போது அவர் கூறிய கருத்துக்களை அவர் திரும்பப் பெற வேண்டும், இந்ந விவகாரத்தில் லட்சுமண் ரேகாவை சுப்ரீம்கோர்ட் விஞ்சி விட்டது. நீதித்துறை வரலாற்றில் இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான கருத்துக்கள் இடம் பெற்றதே இல்லை, இது மிகப்பெரிய ஜனநாயகத்தின், நீதி அமைப்பில் அழிக்க முடியாத கரும்புள்ளி ஆகும்.
இது ஜனநாயக விழுமியங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும், எனவே இதில் திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் அவதானிப்புகள் நீதித்துறை உத்தரவின் ஒரு பகுதி அல்ல, ஆனால் அவற்றின் மூலம் நீதித்துறை உரிமை மற்றும் பாரபட்சமற்ற தன்மை பாதிக்கப்படக்கூடாது.
நீதித்துறை ஒழுங்கின் ஒரு பகுதியாக இல்லாத இது போன்ற அவதானிப்புகள் நீதித்துறையின் உரிமை மற்றும் நேர்மையின் அடிப்படையில் புனித பட முடியாது. இத்தகைய மூர்க்கத்தனமான கருத்துக்கள் நீதித்துறையின் வரம்பை மீறியவையாகும். உச்சநீதிமன்றத்தின் இந்த இரண்டு நீதிபதிகளின் கருத்துக்கள் மிகவும் துரதிஷ்டவசமானது.
இது நாட்டிலும் நாட்டிற்கு வெளியிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. நுபுர் சர்மா நீதித்துறையை அணுக முயன்ற விஷயத்திற்கும், நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் எந்த தொடர்பும் இல்லை. இதுவரை இல்லாத அளவிற்கு நீதி வழங்குவதற்கான அனைத்து நியதிகளையும் நீதிபதிகள் மீறியுள்ளனர். நுபுர் சர்மாவுக்கான நீதியானது மறுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் இந்திய அரசியலமைப்பின் முகவுரை மற்றும் நீதித்துறைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இத்தகைய அணுகுமுறை எந்த பாராட்டுதலுக்கும் தகுதியற்றது. இதன் மூலம் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் புனிதத் தன்மையும் மரியாதையும் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது இவ்வாறு அதில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி க்ஷிதிஜ் வியாஸ், குஜராத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.எம்.சோனி, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஆர்.எஸ். ரத்தோர், பிரசாந்த் அகர்வால், டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.என்.திங்ரா ஆகியோர் அடங்குவர். இவர்களைத் தவிர, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளான ஆர்.எஸ் கோபாலன், எஸ் கிருஷ்ண குமார், ஓய்வுபெற்ற தூதர் நிரஞ்சன் தேசாய், முன்னாள் டிஜிபிக்கள் எஸ்பி வேத் மற்றும் பி.எல் வோஹ்ரா, லெப்டினன்ட் ஜெனரல் விகே சதுர்வேதி (ஓய்வு), ஏர் மார்ஷல் (ஓய்வு) எஸ்.பி சிங் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment