ரொம்ப நாட்களாக சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களுக்காகவே சொல்லப்பட்டுள்ள பிரத்தியேகமான பதிவு இது. நம்பிக்கையோடு இந்த ஒரு செங்கல்லை உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்தால் நிச்சயமாக உங்களால் சொந்த வீடு கட்டிவிட முடியும். அதற்கான சக்தி வாய்ந்த ஒரு செங்கல் பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முழு நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். அடுத்த ஒரு சில நாட்களில் நீங்கள் சொந்த வீடு வாங்குவது உறுதி. இந்த பரிகாரத்திற்கு எந்த ஒரு விரிசலும் இல்லாத சுத்தமான ஒரு செங்கலை கடையிலிருந்து காசு கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். அதைக் கொண்டு வந்து வீட்டில் மஞ்சள் தண்ணீரில் கழுவி அப்படியே காய வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டின் அருகிலோ கொஞ்சம் தூரத்திலோ மலை மேல் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு முருகன் கோவிலை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த செங்கல்லை அந்த முருகன் கோவிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மலைக்கு கீழே இந்த கல்லை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஒரு செங்கல்லை கையிலேயே சுமந்து நடந்து மலை ஏறி மேலே செல்ல வேண்டும். உங்களுடைய கையில் இந்த செங்கல் அப்படியே இருக்கட்டும். ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டால் கூட சரிதான். மலை மேல் இருக்கக்கூடிய முருகனை தரிசனம் செய்யுங்கள். வழக்கம் போலத்தான் கோவிலுக்கு சென்றால் தேங்காய் உடைத்து, சுவாமிக்கு குடும்பத்தில் உள்ளவர்களுடைய பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து, வேண்டுதலை முருகப் பெருமானின் பாதங்களில் நம்பிக்கையோடு வைத்து சுவாமி தரிசனத்தை முடித்து விடுங்கள். நீங்கள் கையில் வைத்திருக்கும் செங்கல்லை பையில் இருந்து எடுத்து முருகனுடைய சன்னிதானத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தரையில் வைக்கலாம். கோவிலில் நீங்கள் சிறிது நேரம் அமர்ந்திருப்பீர்கள் அல்லவா. பைக்குள் இருக்கும் செங்கலை எடுத்து உங்களுடைய பக்கத்தில் சிறிது நேரம் வைத்துக் கொள்ளுங்கள். 5 லிருந்து 10 நிமிடம் வரை வைத்தால் கூட போதும். பின்பு அந்த கல்லை எடுத்து பைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டு முருகனை 6 முறை வலம் வரவேண்டும். நமஸ்காரம் செய்து கொண்டு வீடு திரும்புங்கள். இந்த செங்கலை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து தினம்தோறும் வீடு வாங்க வேண்டும் என்ற பிரார்த்தனையை வைக்க வேண்டும். பூஜை அறையில் ஒரு ஓரமாக இருக்கட்டும். அவ்வளவு தான். வீடு வாங்க வேண்டும் என்ற வேண்டுதலை மட்டும் அந்த முருகப்பெருமானிடம் வைத்து வாருங்கள். வீடு வாங்குவதற்கு தேவையான முயற்சிகளை நீங்கள் தான் மேற்கொள்ள வேண்டும். பணம் காசு வருமானம் எதுவுமே உங்கள் கையில் இல்லை என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிலம் வாங்கவோ, வீடு வாங்கவோ, வீடு கட்டவோ தேவையான வாய்ப்புகள் வருமானம் தானாக உங்களைத் தேடி வரும். ஆனால் முழுக்க முழுக்க முயற்சி என்பது உங்கள் கையில் இருக்க வேண்டும். முயற்சியை ஊக்குவிக்க வேண்டிய வேலையை இந்த ஒரு செங்கல் பரிகாரம் செய்யும். வீடு கட்டும் போது இந்த ஒரு செங்கல்லை வைத்து நிச்சயமாக வீடு கட்டுவிங்க நம்பிக்கையோடு பரிகாரத்தை முயற்சி செய்தால்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment