Wednesday, July 6, 2022

இளையராஜா, பி.டி.உஷா உட்பட 4 பேர் ராஜ்யசபா எம்.பி.,யாக நியமனம்.

 பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, தங்க மங்கை பி.டி.உஷா உட்பட, தென் மாநிலங்களைச் சேர்ந்த நான்கு பேர் ராஜ்யசபாவின் நியமன எம்.பி.,யாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜ்யசபாவின் நியமன எம்.பி.,க்களுக்கான ஏழு இடங்கள் காலியாக உள்ளன. இதில், நான்கு இடங்களுக்கான எம்.பி.,க்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.

தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா, 79, கேரளாவை சேர்ந்த முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷா, 58, ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராஜமவுலியின் தந்தையும், திரைக்கதை ஆசிரியருமான விஜயேந்திர பிரசாத், 80 ஆகியோருக்கு நியமன எம்.பி., பதவி வழங்கப்பட்டுள்ளது.


latest tamil news



கர்நாடகாவின் தர்மஸ்தலா கோவிலின் நிர்வாகியும், சமூக சேவகருமான வீரேந்திர ஹெக்டே, 73, என்பவருக்கும் நியமன எம்.பி., பதவி வழங்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செய்தி:
இசையமைப்பாளர் இளையராஜா, தன் இசைத்திறமையால் தலைமுறைகளை தாண்டி ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அவரது அருமையான இசை பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி வருகிறது. மிக சாதாரண பின்புலத்தில் இருந்து வந்து, இன்று மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ள அவரது வாழ்க்கை பயணம், பல்வேறு தரப்பினருக்கும் உத்வேகத்தை அளிக்ககூடியது. அவர் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். நடிகர் ரஜினியும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.



தென் மாநிலங்கள் மீது கவனம்



நேற்று அறிவிக்கப்பட்ட நான்கு நியமன எம்.பி., பதவிகளும், தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, பா.ஜ., மேலிடத்தின் முழு கவனமும் இந்த மாநிலங்களின் மீது திரும்பியுள்ளதை காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...