சசிகலாவின் தம்பி திவாகரன் தலைமையிலான, அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சி, அ.தி.மு.க.,வில் இணையும் விழா, தஞ்சாவூரில் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அ.தி.மு.க.,வில், ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக, பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நிலவி வருகிறது. இதனால், அ.தி.மு.க., தொண்டர்கள், யார் பக்கம் கட்சி இருக்கிறது என்ற குழப்பதில் உள்ளனர்.
இந்நிலையில், சசிகலாவோ, 'அ.தி.மு.க., பொதுச் செயலர் முகாம் அலுவலகம்' என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு சொந்தம் கொண்டாடி வருகிறார். சசிகலா தரப்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'சசிகலா தலைமையில், தாய் கட்சியான அ.தி.மு.க.,வுடன் அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் விழா, நாளை காலை 11:00 மணிக்கு, தஞ்சாவூர் தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெறும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்பட்டார். அவர் சசிகலாவுடன் இணைவது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. அத்துடன், அ.தி.மு.க.,வில் இணையும் விழா என்று சசிகலா குறிப்பிட்டுள்ளதும், குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது.

No comments:
Post a Comment