காமராஜர் ஆட்சிகாலத்தில் ( இப்ப உள்ள MP. MLA. IAS கள்போலவே) அரசு அதிகாரிகள் குழு ஒன்று அரசாங்க செலவில் வெளிநாடு சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டனர்.
காமராஜரிடம் கோரிக்கை வைத்தனர்.
எப்படி ....?
மதராஸை (தற்போதைய சென்னையை) நவீன மயமாக்க லண்டன்,பாரீஸ் போன்ற நாடுகளுக்குச்சென்று நகரஅமைப்பை கண்காணித்து வரைவுத்திட்டம் தயாரித்துத் தரவிரும்புவதாகவும் கூறினர்.அதற்கு,
காமராஜர் என்ன சொன்னார் தெரியுமா?
அதெல்லாம் தேவையில்லேண்ணே.... மதுரைக்கு போங்க, நகரோட மத்தியில மீனாக்ஷியம்மன் கோவில், அதைச்சுற்றி நாலடுக்கு வீதிகள், மேற்கே ரயில்வே ஜங்ஷன், கிழக்கே காய்கனி மளிகைகடைகள் நிறைந்த வணிக வீதி,வடக்கே வைகைநதி, இப்படி ஒரு நல்ல நகரம் எப்படி இருக்கணும்ங்கறதுக்கு மதுரை உதாரணம். எல்லாரும் ஒருமுறை மதுரைக்கு போய்ட்டுவாங்க...
(கீழே உள்ள புகைப்டத்துக்கும் மேலே உள்ள தகவலுக்கும் சம்பந்தம் இல்லை )

No comments:
Post a Comment