இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்று எனக்குத் தெரியாது..!
.
ஆனால் .. நம்பகமான நண்பர் மூலம் வந்த தகவல் என்பதால் ,
இதில் உண்மை இருக்கலாம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது..!
.
1997 கோவை கலவரம் .
.
பல இடங்களுக்கும் கலவரம் பரவியது;
இந்தக் கலவரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியப் பெரியவரும் கொல்லப்பட்டாராம்.
.
அடுத்த நாள் ... விடிந்தும் விடியாத அதிகாலை வேளை ...
அந்த பெரியவரின் வீட்டு வாசல் கதவு தட்டப்பட்டதாம்.
.
கலக்கத்துடனேயே கதவை திறந்து பார்த்திருக்கிறார்கள் , அந்த முஸ்லிம் குடும்பத்தினர்.
.
வாசலில் நின்றவர் ... மணிவண்ணன் .
.
அந்த இஸ்லாமிய பெரியவரின் குடும்பத்தினர் எதுவும் புரியாமல் திகைத்து நிற்க ...
அனுமதி பெற்று உள்ளே வந்த மணிவண்ணன் ,
தன்னுடைய அனுதாபத்தை அந்தக் குடும்பத்திற்கு சொல்லி விட்டு ,
தன் கையில் இருந்த ஒரு பையை ,
இறந்து போன இஸ்லாமியப் பெரியவரின் மகன் கையில் கொடுத்திருக்கிறார்.
.
உள்ளே இருந்தது .. ஒரு லட்சம் ரூபாய் !
ஒன்றும் புரியாமல் அந்த குடும்பத்தினர் குழம்பி இருக்கிறார்கள் .
.
இஸ்லாமிய பெரியவரின் மரணம் பற்றி , தான் மிகவும் மனம் வருந்துவதாகச் சொன்ன மணிவண்ணன் ,
இது ஈடு செய்ய முடியாத இழப்புதான் ...
எனினும் தன்னால் முடிந்த இந்த சிறு உதவியை அந்தக் குடும்பத்தினர் மறுப்பு எதுவும் சொல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
.
அது மட்டும் அல்ல ... தான் செய்த இந்த உதவியை , வெளியே யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் சொல்லி விட்டு , உடனடியாக புறப்பட்டுப் போய் விட்டாராம் .
.
# இன்று நான் சந்தித்த ஒரு இஸ்லாமிய நண்பர் , இந்த தகவலை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
.
“இது உண்மையாக இருக்குமா ?” என்று நான் கேட்டேன்.
“அந்தக் குடும்பத்தில் உள்ள ஒருவர் சொன்ன தகவல் இது .. கடந்த வாரம்தான் இது எனக்கே தெரியும்” என்றார் அந்த நண்பர்.
.
இதில் உண்மை இருக்கலாம் ... இல்லாமலும் இருக்கலாம்..!
.
ஆனால் ... மணிவண்ணன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் ..
பகுத்தறிவு பேசுபவர் என்பது உலகறிந்த உண்மை ..!
.
ஒன்று மட்டும் நிச்சயம் ..!
.
ஆத்திகம் பேசிக் கொண்டு அநியாயம் செய்யும் மனிதர்களை விட ...
நாத்திகம் பேசினாலும் நல்லதையே செய்யும் மனிதன் உயர்ந்தவன் ..!

No comments:
Post a Comment