Wednesday, July 13, 2022

பேரம் பேசுங்கள்.

  ஒருமுறை தோழியுடன் GRT நடைக்கடைக்கு சென்றிருந்தேன். அவள் ஒரு மோதிரம் எடுப்பதற்காக பார்த்துக்கொண்டிருந்தாள். நான் கடையில் உள்ள மற்ற வாடிக்கையாளர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன். அந்த கடையில் கோட் சூட் போட்டுக்கொண்டு தளத்திற்கு இரண்டு பேர் சுற்றிக்கொண்டிருப்பார்கள் இவர்களுக்கு என்ன வேலையாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

அப்போது என் அருகில் இருந்த பெண்மணி, ஏம்மா ரொம்ப அதிகமா விலை சொல்றீங்க? நான் யாரு தெரியுமா இந்த கடையோட வழக்கமான வாடிக்கையாளர்.. எனக்கும் இதே விலையா? என்று கேட்டார்கள். எல்லோருக்கும் ஒரே விலைதாங்க இன்னைக்கு தங்கத்தோட விலை ஏறிடுச்சுங்க. இன்னும் ஏறப்போறதா வேற பேசிக்கிறாங்க என்று சொன்னது அந்த பொண்ணு. பாவம் என்ன செய்யும் அதோட வேலை அப்படி. அதெல்லாம் இல்லமா… முடியாது என்கிறார் இந்த பெண்மணி.
உடனே அந்த கோட் சூட் போட்டவர் வந்தார். என்னம்மா? என்ன பிரச்சினை? என்கிறார். அந்த பெண்மணி மறுபடியும் ஆரம்பித்தார். நான் யார் தெரியுமா? என்று. உடனே அவர் அந்த வரைவு ரசீதை வாங்கி நீங்க வடிக்கையாளரா இருக்குறதால உங்களுக்கு இந்த விலைகுறைப்பு என்று சொல்லி ஏதோ குறைத்து போட்டு குடுத்தார். அதெல்லாம் இல்லங்க இன்னும் குறைங்க.. நான் எந்த நகையா இருந்தாலும் உங்க கடைலதான் வாங்குறேன். எனக்கு இப்படி பண்றீங்க என்றார். உடனே அவர் சரி அந்த பக்கம் மற்றொரு கோட் போட்டவரை கை காட்டி அவரைப் பார்க்க சொன்னார்.
அவரைப் பார்த்துவிட்டு வந்து பணம் செலுத்தி வாங்கிக்கொண்டார். நான் என் தோழியை வாங்கியது போதும் வா என்று இழுத்துக்கொண்டு, அந்த பெண்மணி பின்னாடியே வெளியே வந்தேன். அவரிடம் கேட்டேன் ஏங்க நிஜமாவே தங்க விலைல கம்மி பண்ணி தருவங்களா? அதற்கு எந்த மாதிரி வாடிக்கையாளரா இருக்கணும்னு கேட்டேன். அதெல்லாம் எனக்கு தெரியாதும்மா. இன்னைக்குத்தான் இந்த கடைக்கு மொத தடவையா வரேன். பக்கத்து வீட்டு பெண்மணி சொன்னார் "இப்படி பேசினால் 200 லிருந்து 800 வரை குறைத்து தருவார்கள் என்று" என்று சொன்னார்.
அதனால் தயக்கம் இல்லாமல், தைரியமாக பேரம் பேசுங்கள். நடைபாதை வியாபாரிடம் பேரம் பேசுவதை விட்டுவிட்டு, இந்த மாதிரி இடங்களில் பேச வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...