Thursday, July 7, 2022

ஏளனம் செய்வோரிடமிருந்து விலகியே இரு.

 1.அனைத்து தவறுகளுக்கும் முக்கியக் காரணம் தற்பெருமைதான். அதனால் தற்பெருமை பேசுவதை உடனே நிறுத்துங்கள்.

2. பிறர் துன்பங்களைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள்.
உங்கள் துன்பங்களை உங்களிடமே வைத்திருங்கள்.
3. பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது.
ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது.
4. கொடுப்பது நல்ல விஷயம்தான். நீங்கள் தாராளமாகக் கொடுக்கலாம், யாருக்கும் கொடுக்கலாம்.
ஆனால் தற்பெருமைக்காகக் கொடுப்பதற்கும், மனத்தின் மகிழ்ச்சிக்காகக் கொடுப்பதற்கும் வேறுபாடு உண்டு.
5. உங்கள் மனம் புத்திக் கூர்மையும் தந்திரமும் கொண்டது.
உங்களுக்கு ஒன்றில் சலிப்பேற்பட்டதும் இன்னொன்றை அது நாடச் செய்யும்.
6. பிச்சை இடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாரும் இல்லை.
பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் பரிதாபத்துக்கு உரியவன் யாரும் இல்லை.
7. உங்களுடைய வெறுப்பினால் நீங்கள் என்னை கொன்று புதைக்கலாம்.
ஆனால், காற்றைப் போல நான் மீண்டும் எழுந்து வருவேன்.
8. உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லையெனில், அதனை மாற்றுங்கள்.
அப்படி மாற்ற இயலவில்லையெனில், உங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.
9. உடை உடுத்துவதில் கவனக்குறைவாக இருக்கலாம்.
ஆனால் நேர்மையைக் கடைப்பிடிப்பதில் கவனக் குறைவு கூடாது.
10. உன் முயற்சிகளை ஏளனம் செய்வோரிடமிருந்து விலகியே இரு.
சிறியோரே அவ்வாறு செய்வர்;
மாறாக, உண்மையான பெரியோரோ உன்னாலும் முடியும் என்று உன்னை உணர வைப்பர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...