கசகசா விதைகள் இந்த நூற்றாண்டில் மட்டும் பிரசித்தி பெற்றதல்ல. ஆனால் இடைக்காலங்களில் இது மனதை அமைதிப்படுத்தும் தூக்கத்தை வரவழைக்கும் மயக்க மருந்தாக கருதப்பட்டதாக வரலாறு வெளிப்படுத்துகிறதுவெண்கலக் காலத்திலேயே மக்கள் கசகசாவைப் பற்றி விழிப்புணர்வுடன் இருந்தார்கள். அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த அவர்கள் கசகசாவை பால் மற்றும் தேனுடன் கலந்து கொடுத்தார்கள்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஹிந்தியில் கஸ் கஸ் என்றும், கன்னடத்தில் கசிகீஸ் என்றும், பெங்காலியில் போஸ்டோ என்றும் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது. கசகசா விதைகள் பல்வகை உணவுகளில் சேர்க்கப்படும் புகழ்பெற்ற மூலப்பொருளாகும்.
வர்த்தகப் பயன்பாட்டில் மேற்கத்திய உலகிலும் அத்துடன் ஆசிய நாடுகளிலும் பல்வேறு உணவு வகைகளில் இதைச் சேர்த்திருப்பதை நீங்கள் காணலாம். கசகசாவிற்கு அதற்கென்று சொந்தமாகத் தனிப்பட்ட சுவை கிடையாது.
இதன் புல்லும் வேரும் கூட அதன் புல்வேர்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மருத்துவப் பயன்கள், சோப்புகள், நறுமண திரவியங்கள், மேலும் உணவுகள் மற்றும் பானங்களிலும் கூட பயன்படுத்தப் படுகிறது.
இந்த அளவற்ற பயன்களைக் கொண்ட மூலப்பொருள் உணவுகளுக்கு நல்ல நறுமணத்தைச் சேர்க்கிறது. கசகசா விதைகளின் சில நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம்! செரிமானத்திற்கு நல்லது:
கசகசா விதைகளில் கரையாத நார்ச்சத்துக்கள் மிக அதிகமாக இருப்பதால் இது முறையான செரிமானத்திற்கு உதவுவதோடு மலச்சிக்கலை முற்றிலுமாக ஒழிக்கிறது. இது உடலின் இயக்க அமைப்பை மேம்படுத்தி அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், வாயு உற்பத்தி போன்ற நோய்களிலிருந்து நிவாரணமளிக்கிறது.
கருவளத்தை மேம்படுத்துகிறது:
கசகசாவின் மருத்துவ குணம் பெண்களின் கருவளத்திற்கு நன்மை பயக்கிறது. கசகசா விதைகளின் எண்ணையயைப் பயன்படுத்தி கருக்குழாய் கழுவப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு பெண்களில் கருவுறும் விகிதம் அதிகரிக்கிறது.
இது கருக்குழாயிலுள்ள கருச் சிதைவுகள் அல்லது சளி போன்ற திரவ கசடுகளை நீக்குகிறது. இது சுமார் 40 சதவிகித பெண்களுக்கு நேர்மறையான விளைவுகளைக் காட்டியுள்ளது. மேலும், கசகசா விதைகள் உங்கள் பாலியல் விருப்பங்களை அதிகரித்து ஆண்மையையும் பாலுணர்ச்சியையும் அதிகரித்து பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஆற்றலை அதிகரிக்கிறது:
கடினமான வேலைகளை செய்வதற்கு ஆற்றல் அளவை அதிகரிக்க நமது உடலுக்கு போதுமான அளவு கார்போஹைட்ரேட்டுகள் தேவைப்படுகிறது. கசகசா விதைகள் கலப்பு கார்போஹைட்ரேட்டுகளின் வளமான ஆதாரமாக இருக்கிறது. இது உடலில் கரையும் போது ஆற்றலை உற்பத்தி செய்கிறது. மேலும் சோர்வுக்கு வழிவகுக்கும் கால்சியம் குறைபாடு ஏற்படும் போது இது போதுமான கால்சியத்தை உடல் கிரகித்துக் கொள்ள உதவுகிறது.
வாய்ப்புண்ணை குணப்படுத்துகிறது:
நீங்கள் வாய்ப்புண்ணால் அவதிப்படுகிறீர்களா? கசகசா விதைகளின் குளிர்ச்சியான மூலக்கூறுகள் உங்களுக்கு நன்மை தரக்கூடியது. இந்தப் பிரச்சனைக்கு கசகசாவை பொடித்த சர்க்கரை மற்றும் கொப்பரைத் தேங்காய்த் துருவலுடன் சேர்த்து சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர உங்களுக்கு வாய்ப்புண்ணிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது:
கசகசா விதைகளில் கால்சியம், இரும்புச் சத்து மற்றும் தாமிரம் ஆகியன அடங்கியுள்ளன. இது உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு அத்தியவசியமானதாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் நரம்பியல் கடத்திகளின் செயல்பாட்டை ஒழுங்குப்படுத்த உதவுகிறது மேலும் மூளையின் ஒழுங்கான இயக்கத்திற்கு உதவுகிறது. மேலும் இது அறிவுத்திறன் மங்கும் குறைபாட்டை குறைக்க உதவுவதாகச் சொல்லப்படுகிறது.
எலும்புகளை பலப்படுத்துகிறது:
நமது எலும்புகளின் வலிமைக்கு போதுமான கால்சியம் மற்றும் தாமிரச் சத்து தேவைப்படுகிறது. 40 வயதுக்குப் பிறகு எலும்புகள் தேயத் தொடங்குகின்றன. அப்போது மக்கள் கால்சியம் மாத்திரைகளை தேர்ந்தெடுக்கின்றனர். கசகசா விதைகள் எலும்புகளையும் அத்துடன் தொடர்புடைய திசுக்களையும் பலப்படுத்தக்கூடிய இயற்கையான மூலக்கூறு ஆகும்.
இதில் செறிந்துள்ள பாஸ்பரஸ் எலும்பு திசுக்களை உறுதிப்படுத்துகிறது. இதைத் தவிர கசகசா விதைகளில் அடங்கியுள்ள மாங்கனீசு எலும்புகளை தீவிரமான காயங்களிலிருந்து காக்கிறது.
இரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்துகிறது:
நீங்கள் இரத்த அழுத்த நோயாளியாக இருந்தால் கசகசா அதிகம் அடங்கிய உணவுகளை உட்கொள்ளுதல் உங்களுக்கு நன்மை தரும். கசகசா விதைகளில் அடங்கியுள்ள ஓலிக் அமிலம் ரத்த அழுத்தத்தை சரிசெய்கிறது!



No comments:
Post a Comment