இலங்கை அதிபர் கோத்தபய மாலத்தீவுக்கு தப்பி சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அங்கிருந்து இரண்டு ஹெலிகாப்டர்களில் அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர், கொழும்பு நகரில் உள்ள கட்டுநாயகா விமானப் படை தளத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து வெளிநாடு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகியது.
இந்நிலையில் கோத்தபய தனது குடும்பத்தார் மற்றும் பாதுகாவலர்களுடன், ராணுவ விமானத்தில் இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு தப்பி சென்றார். அதிகாலை 3 மணி அளவில் அவர் மாலத்தீவுக்கு சென்றடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment