Wednesday, July 6, 2022

ஒவ்வொரு நாள் தூங்கும் போதும் ..."எப்படி தான் தூக்கம் வருமோ" ன்னு நெனப்பேன் ...

 அப்போ என் அக்கா சொன்னது நினைவுக்கு வரும் ... அந்த டோன் .. கட்டளை.... அது ஒரு மாதிரி மனதில் ஹிப்நாசிஸ் செய்து இருக்கு ன்னு நினைக்கிறேன்...

ஒரு முறை அவ கிட்ட பொலம்பிய போது சொன்னாள்... " கண்ணை மூடி கொண்டு ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே; ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ன்னு சொல்லு " என்று !
அப்படியே தூங்கிடுவேன் ..
காலையில் எனக்கு இது ஒரு மிராகில் போன்று தோன்றும்...
தினமும் ஆச்சரியப்படும் ஒரு விஷயம் .. காலையில் விழிக்கும் போதே ..அடடா .... என்று இருக்கும்..
என்னிடம் ..."தூக்கமே வரல மேடம்" என்று சொல்லி ஆலோசனை கேட்பவர்களிடம் ...ஏதேதோ அறிவியல் பேசுவேன்....
இருந்தாலும்.... என் அக்காவின் இந்த மாஜிக் ஐ சொல்ல பயம் ...மேலும் அது எல்லாருக்கும் வேலை செய்யுமா என்றும் சொல்ல முடியாது...
என்னவோ confess செய்யனும் ன்னு தோணுச்சு...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...