இந்திய பொருளாதாரம் மிகவும் சிக்கலான இடத்தில் நிற்கிறது.
இந்திய அரசு தன் மறைமுக எதிரியுடன் நடத்தப் போகும் நிழல் யத்தத்தின் முஸ்தீபுகள் தொடங்கிவிட்டன.
மோடி / பாஜக அரசு மிகப் பெரிய சவாலை சந்திக்க தயாராகிறது.
அதுதான் டாலார் சர்வாதிகாரத்திலிருந்து வெளிவர துவங்கும் நடவடிக்கைகள்.
டாலர் மூலமாக உலக பொருளாதாரத்தையே மறைமுகமாக இயக்கி எவன் வீழ்ந்தாலும் எவன் வாழ்ந்தாலும் தான் லாபம் மட்டுமேயடையும் விதத்தில் உலக சந்தையை வைத்திருக்கும் அமெரிக்கா அதிலிருந்து வெளியேறி எவரும் வாழ அனுமதிக்காது.
வாழவே அனுமதிக்காத அமெரிக்கா வளர அனுமதிக்குமா??
சாம தான பேத தண்டத்தை உபயோகிக்கும். கடந்த 100 வருட. உலக சரித்திரம் அதைதான் சொல்கிறது.
டாலரை ஒதுக்கி ஈரோவில் வணிகம் செய்ய முயன்ற சதாம் திடிரென்று கைவிடப்பட்டு ஒழிக்கப் பட்டார்.
அடுத்து அரபிக் டாலர் என்று உருவாக்க முயன்ற லிபியாவின் கடாபி சட்டென்று இங்கிலாந்து போன்ற நாடுகளால் கைவிடப்பட்டு தீர்த்து கட்டப்பட்டார். இங்கிலாந்து அமெரிக்காவை மீறி ஒன்றும் செய்யாது.
இப்போது சீனர்களிடம் ரொம்ப உரசிய இலங்கை ராஜபக்ஷேக்களை கைவிட்டு தெருவில் நிறுத்தியிருக்கிறது.
கடைசிவரை காலை நக்கும் பாக்கிஸ்தானை சீனா பக்கம் சென்ற ஒரே காரணத்தால் மெல்ல சாகடித்துக் கொண்டிருக்கிறது.
இலங்கையும் பாக்கிஸ்தானும் சீன யுவானில் வணிகம் செய்ய முயன்றிருக்கலாம். வேடிக்கை பார்க்குமா அமெரிக்கா??
இப்போது இந்தியா ரஷ்யா மற்றும் ஈரானுடன் ரூபாய் முறையிலேயே வர்த்தகம் செய்ய தயாராகி விட்டது. இந்திய தொழில் நுட்ப பண பரிமாற்ற முறை அமெரிக்காவின் விசா/ மாஸ்டர் முறைகளை தாண்டி பல் வெளிநாடுகளில் பயன்பாட்டுக்கு வருகிறது.
முதலில் சிங்கப்பூர். பின் யுஏஈ, பிறகு இப்போது பிரான்ஸ்...விசாவும் மாஸ்டரும் வாயில் விரல் வைத்துக் கொண்டு இருக்குமா??
சிங்கத்தின் குகையிலேயே போய் பல்லை பிடித்து பார்ப்பது என்பது இதுதான்.
முந்தய டாலருக்கு எதிரான போரில் சில நாடுகள் வீழ்ந்ததற்கு காரணம் அவைகள் டாலருக்கு எதிராக இன்னொரு நாட்டு கரன்சியிடம் போக முயன்றன.
ஆனால் இந்தியா துணிவுடன் தன் கரன்சியை தான் முன் வைக்கிறது.
இதை எப்படி சமாளிப்பது என்று அமெரிக்கா குழம்புகிறது. சுயசார்புள்ளவனை வீழ்த்துவது கடினம்.
சீனாவும் யுவானை முன்னிறுத்தி இதே முயற்சி செய்தாலும் அதை கொள்வார் இல்லாமல் போனது. ஆனால் இந்தியாவுக்கு ரஷ்யாவும் ஈரானும் எமிரேட்டும் சாதகமாக உள்ளன. இதுதான் மோதியின் வெளியுறவு கொள்கையின் வெற்றி.
டாலரின் ஏகாதிபத்தியத்திலிருந்து வெளியே வர பல சிறிய பெரிய நாடுகள் விரும்பினால் இதுவரை அவர்களுக்கு மாற்று இல்லாமல் இருந்தது. அப்படி வெளியே வருவது சாத்தியமேயில்லை என்கிற நிலை.
அந்த பிம்பத்தை இந்தியா உடைக்க தொடங்குகிறது.
இது கத்தி மேல் நடக்கும் வேலை.
அமெரிக்கா கடுமையாக எதிர்வினையாற்றி இந்தியாவை முடக்க நினைக்கலாம்.
அல்லது இந்தியாவை மட்டும் ஒரு விதி விலக்காக விட்டு விடலாம்.
எப்படியிருந்தாலும்..
1947 - இந்திய நிலப்பகுதிகளுக்கு சுதந்திரம் கிடைத்தது.
2014. - கருத்தியல் சுதந்திரம் பெற தொடங்கினோம்.
2022 - உண்மையான பொருளாதார சுதந்திரத்திற்கு அடிக்கல் நாட்டுகிறோம்.
இன்று நம் சிங்க சிலையை பிரதமர் திறந்து வைத்தது ஒரு குறியீடாக நான் கருதுகிறன்.
ஜெய் ஹிந்த்.

No comments:
Post a Comment