Monday, July 18, 2022

பார்லி., மாண்பை காப்பது அவசியம்!

 பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர், நேற்று துவங்கி உள்ளது. கடந்த வாரம், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் உறுப்பினர்கள் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புதிய கையேடு வெளியிடப்பட்டு உள்ளது. அதில், நாடகம், வாய் ஜாலம், ஊழல், ஒட்டுக் கேட்பு, திறமையற்றவர், அராஜகவாதி, சர்வாதிகாரம், அழிவு சக்தி, காலிஸ்தான் மனநிலை, சகுனி என்ற பொருள்படும் ஆங்கில மற்றும் ஹிந்தி வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலுக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய கையேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள வார்த்தைகளை, எம்.பி.,க்கள் தங்கள் பேச்சின் போது பயன்படுத்தினால், அது சபை குறிப்பிலிருந்து நீக்கப்படும். பார்லிமென்ட் நடவடிக்கைகளில் முதன்மை யானது விவாதம். அரசின் கொள்கைகள், அறிமுகமாக உள்ள சட்டங்கள் போன்றவற்றை பாராட்டி ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் பேசுவர். அதே நேரத்தில், அரசின் கொள்கைகள் தங்களுக்கு பிடிக்கவில்லை எனில், அதற்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பேசுவர். இந்தப் பேச்சுக்களின் போது, ஆளுங்கட்சி யினரும், எதிர்க்கட்சியினரும், தங்களின் கருத்துக் களுக்கு ஆதாரமாக புள்ளி விபரங்களையும், காரணங்களையும் முன்வைப்பது வழக்கம். முக்கியத்துவம் வாய்ந்த சில பிரச்னைகள் மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் இடையேயான வாக்குவாதங்கள் தீவிரம் அடையும் போது, சிலர் அபத்தமான வார்த்தைகளை உபயோகிப்பது வழக்கம். அப்படி இல்லாமல் நாகரிகமாகவும், பண்பாட்டோடும் பேச வேண்டும் என்பதற்காகவே, வார்த்தை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. சில நேரங்களில் சபையில் நடக்கும் விவாதங்கள், ஆவேசமான கோஷங்களாக மாறுவ தோடு, ஒரு தரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் குற்றச்சாட்டுகளை சுமத்தும் போது, ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற முடியாத சூழ்நிலை உருவாகி விடுகிறது. மாறாக கூச்சல், குழப்பம் அதிகரித்து, சபையை ஒத்தி வைக்கும் நிலைமையும் ஏற்படு கிறது. அத்துடன் உறுப்பினர்களை அமைதிப்படுத்த, லோக்சபா சபாநாயகரும், ராஜ்யசபா தலைவரும் படாதபாடு பட வேண்டியுள்ளது. பார்லிமென்ட் அமைப்பு மதிப்புமிக்கது; நாட்டின் கவுரவத்தை பிரதிபலிக்கக் கூடியது. அதனால், அங்கு நடைபெறும் அரசியல் ரீதியான பேச்சுக்களும், விவாதங்களும் தரமானதாக இருக்க வேண்டும். இங்கு குத்தலான பேச்சுக்களும், உண்மைக்கு மாறான தகவல்களும் இடம் பெற்றால், அது சபையின் மாண்பை குறைத்து விடுகிறது; எம்.பி.,க்களுக்கு இடையே மோதலை உண்டாக்கி விடுகிறது என்பதை, கண் கூடாகப் பார்க்கிறோம். அதை தவிர்க்கவே, இந்த வார்த்தை கட்டுப்பாடு. இதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொண்டால் சரி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...