Tuesday, July 12, 2022

பொருளாளர் பதவியை பெற தே.மு.தி.க.,வில் போட்டி?

 தே.மு.தி.க., பொருளாளர் பதவியை கைப்பற்ற, விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், காய் நகர்த்த துவங்கியுள்ளார். அவருக்குப் போட்டியாக, அந்தப் பதவியை பிடிக்க, துணை செயலர் பார்த்தசாரதியும் முயன்று வருகிறார்.

DMDK, Vijayakanth, Premalatha, Premalatha Vijayakanth


தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். நீரிழிவு நோய் பாதிப்பு காரணமாக, அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டு உள்ளன. இதனால், தீவிர அரசியலில் இருந்து விலகி, ஓய்வெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். அதேநேரத்தில், கட்சிப் பணிகளை, விஜயகாந்த் மனைவி பிரேமலதா கவனித்து வருகிறார். இதற்காக, விரைவில் செயல் தலைவராகவும், அவர் பொறுப்பேற்க உள்ளார்.


latest tamil news


தற்போது, பொருளாளராக உள்ள பிரேமலதா, செயல் தலைவராகி விட்டால், பொருளாளர் பதவி காலியாகும். எனவே, பொருளாளர் பதவியை கைப்பற்ற, அவரது சகோதரர் சுதீஷ், காய் நகர்த்தி வருகிறார். தற்போது, அவர் துணை செயலராக உள்ளார். அதேபோல, பொருளாளர் பதவியை கைப்பற்ற, விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் வாயிலாக, மற்றொரு துணை செயலர் பார்த்தசாரதியும் முயற்சித்து வருகிறார். தே.மு.தி.க.,விற்கு கணிசமான சொத்துக்களும், வங்கியில் டிபாசிட் பணமும் உள்ளது.

பொருளாளராக பதவி ஏற்றால், இதை கையாளும் அதிகாரம் கிடைக்கும். அதை வைத்து, தனிப்பட்ட முறையில் தொழில் தேவைக்கு வங்கி கடன் உள்ளிட்ட சலுகைகளை எளிதாக பெற முடியும். இதற்காகவே, இருவரும் அப்பதவியை கைப்பற்ற, தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், பொருளாளர் பதவியை விட்டுக் கொடுக்காமல், தன் கையிலேயே வைத்திருக்க பிரேமலதா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...