Saturday, July 9, 2022

அடுத்த கர்நாடக முதல்வர் யார்?

 தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

எப்படியும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.அப்படி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், யார் முதல்வர் என்பது தான் அக்கட்சியில் இப்போது பிரச்னையாக உள்ளது.

latest tamil news
கர்நாடக காங்கிரசில் இரண்டு கோஷ்டிகள் உள்ளன. ஒன்று முன்னாள் முதல்வர் சித்தராமையா கோஷ்டி. இன்னொன்று மாநில காங்., தலைவர் சிவகுமார் தலைமையில் இயங்கி வருகிறது.சித்தராமையா தான் மீண்டும் முதல்வராக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்.

இதற்காக, 'சித்தராம மகோத்சவ்' என ஒரு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர் அவரது ஆதரவாளர்கள். இதில், காங்., முன்னாள் தலைவர் ராகுல் கலந்து கொள்கிறாராம்.இது, சிவகுமார் கோஷ்டியை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
'கட்சி தான் முக்கியம். எனக்கும், சித்தராமையாவிற்கும் எந்த பிரச்னையும் இல்லை' என சிவகுமார் சொன்னாலும், அவருடைய ஆதரவாளர்கள் அதை ஏற்கவில்லை. 'பணம் இல்லாமல் கஷ்டப்படும் காங்கிரசுக்கு தொடர்ந்து நிதி கொடுத்து வருகிறார் சிவகுமார்.

எனவே, அவரை முதல்வராக்க வேண்டும்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.இந்நிலையில், 'ஒரு பக்கம் பா.ஜ., இன்னொரு பக்கம் கோஷ்டி மோதல்கள். கட்சி என்னாகுமோ' என கவலையில் உள்ளனர் டில்லி காங்., தலைவர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...