10 வயசுல
அவன் தமிழ் புக்ல நான் கிறுக்கனத டீச்சர்கிட்ட சொல்லாம தானே செஞ்சிட்டேனு சொல்லி முட்டி போட்டப்ப அவன் மேல வந்துச்சு பாருங்க அதான் காதல்.
15 வயசுல
டியூஷன் படிக்கும்போது அவன் என்கிட்ட பேனா கேக்கறப்ப தெரியாம அவன் கை என் கை மேல் உரசும் போது அவன் மேல்
ஸ்பரிசத்தில் வருவது காதல்.
20 வயசுல
நான்கு வருடம் எதுவும் சொல்லாமல்
மிக கண்ணியமாக நடந்து கொண்டு
கடைசியாக அப்புறம் எப்ப பார்க்கலாம் என்று அனைத்தும் மறைத்து கேட்கும்போது அவன் மேல் வருவது காதல்.
25 வயசுல
வீட்டின் காரணத்தாலும் சில சூழ்நிலைகளாலும் காதலிக்க
மறுத்துதால் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல யாருகிட்டயும் போயி பொல்லாப்பு பேசாம இருக்கும் போது அவன் மேல் வருவது காதல்.
30 வயசுல
பெண் பார்க்கும்போது கட்டினா
இவளைதா கட்டுவேன்னு தன் அம்மாவிடம் கூறும்போது அவர் மேல் வருவது காதல்.
35 வயசுல
கல்யாணத்திற்கு பின் அந்த நாட்களில்
களைப்பாக இருப்பதை பார்த்து
அவரே காபி போட்டு கொண்டு வரும்
போது அவர் மேல வருவது காதல்.
45 வயசுல
அம்மா சொல்றதுதான் கேக்கனும்னு தன் பசங்க கிட்ட சொல்லும் போது தன்னுடைய முக்கியத்துவத்தை என்கிட்ட காட்டும்போது
அவர் மேல் வருவது காதல்.
55 வயசுல
ஏதாவது நோயின் அறிகுறி வரும்போது
எதுவும் ஆகாது நான் இருக்கிறேனு
கையை பிடித்து ஆறுதல் சொல்லும் போது அவர் மேலமேல் வருவது காதல்.
65 வயசுல
அவருக்கு லட்டுனா பிடிச்சிருந்தும்
எனக்கு சுகர்னு அவர் அத சாப்பிடாம நிராகரிக்கும்போது
அவர் மேல் வருவது காதல்.
75 வயசுல
நான் கடைசி மூச்சு விடும்போது
என் கையை பிடித்துக்கொண்டு
என்னையும் அழைச்சிட்டு போயிடுனு
கண்ணீர் விட்டப்ப இந்த உலகத்தையை
ஜெயிச்சிட்டோம் அப்படினு ஒரு
திமிர் வரும்போது அவர் மேல்
எனக்கு வருவது தான்
உண்மையான காதல்.
பொதுவாகவே
அவ்வளவு சீக்கிரம் பெண்களுக்கு
காதல் வராது..
அது காதலா என்பது கூட தெரியாது.
நடக்கும் நிகழ்வுகள்
பிடித்து போய் நடத்துகின்ற நபரை பிடித்துவிடும்.
அது பின்னாளில் காதலாகி விடும்.
ஒருவரின் மதிப்பும்
நம்பிக்கையும் அதிகமாகும்போது
தன்னால் காதல் வரும்.
அதே நம்பிக்கையும் மதிப்பும் குறையும்போது தானாகவே காதலும் போயிடும்.
No comments:
Post a Comment