இரவு என் அருகே என் மனைவி உறங்கிக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது முகநூலில் ஒரு பெண்ணிடமிருந்து நட்புக்கான அழைப்பு வந்தது நான் உடனேஅதை ஒப்புக்கொண்டு யார் நீ என செய்தி அனுப்பினேன்.
தான் யார் என்பதை அறிவித்த அவள் உங்களுக்கு திருமணம் ஆகிவிடடதாகக் கேள்விப்பட்டேன் But I still miss you"என்று பதிலளித்தாள்.
யோசித்துப் பார்த்தேன் நினைவுக்கு வந்தது அவள் அழகான அறிவான பெண் அவளுடன் நட்பாக பழகிய நிகழ்வுகள் என் நினைவுக்கு வந்தன.
ஒரு குறுகுறுப்புடன் உரையாடலைத் தொடருவதற்கு முன் என் மனைவி தூங்குகிறாளா என்று அவள் முகத்தை உற்றுப் பார்த்தேன்.
நாள் முழுதும் வீட்டு வேலை செய்த களைப்பில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
நான் அவளை உற்றுப் பார்த்தபோது,
தான் யோசிக்க ஆரம்பித்தேன்
தனக்கு முற்றிலும் புதிய வீட்டில் ஆழமாகவும் வசதியாகவும் தூங்கக்கூடிய அளவுக்கு அவள் எப்படி பாதுகாப்பாக உணர்கிறாள்?
அவள் தன் வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறாள், அங்கு அவள் 24 வருடங்கள் தன் குடும்பத்தினரடுன் இருந்திருக்கிறாள்.
அவள் கோபமடைந்தாலோ சோகமானாலோ அவளுடைய அம்மா அவளுக்காக இருந்தாள், தாயின் மடியில் விழுந்து அழுவாள்.
அவளுடைய சகோதரியோ சகோதரனோ நகைச்சுவைகளைக் கூறி அவளை வாய்விட்டு சிரிக்க வைப்பார்கள் அவளுடைய தந்தை வீட்டிற்கு வரும் போது அவள் விரும்பிய அனைத்தையும் கொண்டு வருவார்.
இத்தகைய சூழலில் வளர்ந்தவள் என் கரம் பற்றி என்னை நம்பி வந்திருக்கிறாள்.
இந்த எண்ணங்கள் என் சிந்தனைக்கு வந்த அடுத்த கணமே நான் தொலைபேசியை எடுத்து அந்த நட்பை "பிளாக்" செய்தேன்.
அவளின் முகத்தை நோக்கிய வண்ணம் அவள் அருகில் உறங்கினேன்.
நான் ஒரு ஆண்மகன். தனது மனைவியை ஏமாற்றாத, அவளுடைய நம்பிக்கையை உடைக்காத ஒரு கணவன்.
பெருமிதமாக உணருகிறேன். இதை எதுவும் அறியாத என் மனைவி தூக்கத்தில் என் மீது கையை போட்டாள்.
No comments:
Post a Comment