அம்மா..பொறுமையாக எல்லாரிடம் சொல்லிக்கொண்டிருக்க...
ஆமா..சுமி எங்க..? அவளா..அவ..என இழுத்ததில்..சிலர் கண்டுக்கொள்ளாமல்..போக..
மாடி வீட்டு அங்கிள் மட்டும்..படுத்துக்கொண்டு அழுதபடி இருந்தவளை அழைத்து..நல்ல மார்க் தானே வாங்கிருக்க..இதுக்கா அழுகை என புதுத்தெம்பு ஊட்டிப்பார்த்தார்.
இதெல்லாம்..இப்போது நினைக்கையில் சிரிப்பு வருகிறது..
அப்போது இருந்த தெளிவை விட இன்றைய தலைமுறை பிள்ளைகள்..நன்கு தெளிவாகவே உள்ளனர்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சாலும் பேசிட்டுதானே இருக்கேன்..??
இதுக்கு ஏன் லாஜிக்..அல்கோரிதம்.. கூடவும் மல்லுக்கட்டணும் !!
இதெல்லாம் அப்ப தெரியலையே !
என்னைப்பொருத்தவரை...மதிப்பெண்கள் அவசியமே வெற்றி வாசலுக்கு..
அதையும் விட வாழ்க்கையை எதிர்கொள்ளும் பாடம்..சோதனைகளை..சவால்களாக மாற்றிக்கொள்ளும் மனோபாவம்..திடம் , சமயோதிதத்தன்மை இதனை வளர்த்துக்கொள்ள வேண்டும்!
No comments:
Post a Comment