Wednesday, May 17, 2023

கல்யாணம் ஆன ஆண்களுக்கு கடைக்குப் போயி காய் வாங்கி வருவதென்பது ஒரு "ஆசிட் டெஸ்ட்"

 மொதல்ல "சும்மா தானே உக்காந்திருக்கீங்க போய் காய் வாங்கிட்டு வாங்கம்பாங்க,"

நம்முடைய யூ டியூப் அறிவைப் பயன்படுத்தி கீரை பாவக்காய் வாழைத்தண்டு ன்னு வாங்கிட்டுப் போனா,
"பாவக்காய் வாங்கிட்டு வந்தா இதை வெச்சு சாம்பார் எப்படி வைக்கிறது?" ம்பாங்க,
வெண்டைக்காய் ஃபிரஷ்ஷா இருக்குன்னு கடைக்காரர் சொன்னத நம்பி வாங்குனா
" வெண்டைக்காய், முத்தலா இருக்கு" ம்பாங்க.
"முருங்கைக் காய் கேட்டா நீங்கமுருங்கைக் குச்சியைப் புடுங்கிட்டு வந்திருக்கீங்க"ம்பாங்க
சரி அதாவது பரவாயில்லை "வருவலுக்கும் பொறியலுக்கும் காய் வாங்கிட்டு வாங்க" ம்பாங்க
நமக்குத் தெரிஞ்ச தெல்லாம் ரத்தப் பொறியல் மூளை வருவல் தான் தான் அதை வாங்க முடியுமா?
"என்னென்ன காய்னு சொன்னாத்தானேன்னு வாங்கறதுக்கு"ன்னு நாம எகிறினா, ரெம்ப குத்தலா
" தட்டுல வெச்சா நல்லா இருக்குன்னு கூட சொல்லாம , நீ சாப்பிட்டியான்னு கூட கேக்காமத் திங்கத் தெரியுது ஆனால் என்ன காய்னு மட்டும் தெரியலை ல்ல..?" அப்படீன்னு ஒரு கூக்ளி சுழலும்
🙄
இது எதுவுமே இல்லாம சரியாப் பாத்து காய் வாங்கிட்டு வந்தம்னா ஒவ்வொன்னுக்கும் விலை என்னான்னு கேப்பாங்க நாமும் ரெம்ப புத்திசாலித்தனமா பேப்பர்ல எழுதி வெச்சு சொன்னா,
" இங்க தெருவுல வந்துச்சு இவ்ளோ விலை இல்லையே உங்களை நல்லா ஏமாத்திட்டான்,பேரம் பேச வேண்டியதானே கேட்ட காசை அப்படியே தூக்கிக் குடுத்துறுவீங்களோ" ன்னு
ஒரு யார்க்கர் வரும்
சரி வம்பே வேணாம்னு காய் கடைல இருந்து போன் செஞ்சு இன்ன காய் இருக்கு இன்ன விலைல இருக்கு வாங்கவா வேணாமா ன்னு கேட்டா,
" ஒரு நாள் ஒரு பொழுது கடைக்கு அனுப்புனா எத்தனை கேள்வி கேப்பாங்க? "ன்னு இன் ஸ்விங் போடுவாங்க.
இந்த எல்லாத் தாக்குதலுக்கும் ஈடு கொடுத்து கவனமா வாங்கிட்டு வந்து குடுத்தா
"கருவேப்பிலை கொத்தமல்லி கொசுறு வாங்கவே இல்லையே!" ன்னு ஒரு
"ஒரு துல்லிய தாக்குதல் " வரும் பாருங்க.......
May be an image of 1 person and smiling
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...