Thursday, May 18, 2023

தொலைந்த மொபைல்களை கண்டறிய புது சேவை அறிமுகம் - மத்திய அரசு அதிரடி!

 மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் சார்பில் சஞ்சர் சாதி (Sanchar Saathi) எனும் முனையம் துவங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களது மொபைல் போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். மத்திய தகவல் தொடர்பு, ரெயில்வே மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் இந்த முனையத்தை துவங்கி வைத்தார். இதில் பயனர்கள் பதிவு செய்யப்பட்ட இணைப்புகளை சரிபார்ப்பது, தேவையற்ற அல்லது சந்தேகத்திற்குரிய இணைப்புகளை சரிபார்ப்பது, தொலைந்து போன மொபைல் போன்களை பிலாக் செய்வது, IMEI நம்பர்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவது போன்ற சேவைகளை பெற முடியும். சஞ்சர் சாதி முனையத்தின் மிக முக்கிய அங்கம் தான் மத்திய உபகரணங்கள் அடையாள பதிவு (CEIR). இதில் காணாமல் போன மொபைல் போனின் IMEI நம்பர் மற்றும் காவல் துறை வழங்கிய அறிக்கைகளை தளத்தில் சமர்பிக்க வேண்டும். இந்த தளத்தில் பதிவிடப்படும் தகவல் உறுதிப்படுத்தப்பட்டு, டெலிகாம் சேவை நிறுவனங்கள் மற்றும் சட்டத்துறை நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும். இந்த தகவல்கள் முழுமையாக ஆய்வு செய்தபின், திருடப்பட்ட மொபைல் போன்கள் இந்திய நெட்வொர்க்குகளில் இயங்க முடியாத அளவுக்கு மாற்றப்பட்டு விடும். சட்டத் துறை நிறுவனங்கள் திருடப்பட்ட சாதனத்தை டிராக் செய்யும். திருடப்பட்ட சாதனம் மீட்கப்பட்டதும், பயனர்கள் சஞ்சர் சாதி முனையத்தில் வைத்து, அதனை அன்லக் செய்துவிடும். திருடப்பட்ட மொபைல் போன்கள் மட்டுமின்றி, தவறான அல்லது ஃபோர்ஜ் செய்யப்பட்ட IMEI கொண்ட சாதனங்கள் பயன்படுத்தப்படுவதை இந்த சிஸ்டம் தடுத்துவிடும். இத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் "Know Your Mobile" அம்சம் கொண்டு IMEI நம்பர் மூலம் மொபைல் சாதனங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியும். திருடுபோன மொபைல் போனை டிராக் அல்லது பிலாக் செய்வது எப்படி? - சஞ்சர் சாதி CEIR வலைதளம் செல்ல வேண்டும். - இனி Block Stolen/Lost Mobile ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். - உங்களின் பெயர், மொபைல் நம்பர், IMEI நம்பர் மற்றும் சாதனத்தின் விவரங்களை பதிவிட வேண்டும். மொபைல் வாங்கியதற்கான இன்வாய்ஸ்-ஐ அப்லோடு செய்ய வேண்டும். - நகரம், மாவட்டம், மாநிலம் மற்றும் சாதனம் தொலைந்து போன தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். - மொபைல் நம்பர் ஒடிபி மூலம் விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும். - இனி Submit பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...