நாடகாசிரியர் கோமல் சுவாமிநாதனின் மகள் தாரணி. தன் தந்தை எழுதிய நாடகங்களில் தன்னிடம் இல்லாத மூன்று நாடகங்களின் பிரதிகளை சேகரிக்கும் முயற்சியில் அந்த நாடகங்களில் நடித்த சிவகுமார் அவர்களைத் தொடர்புகொண்டிருக்கிறார்.
அவருடைய பழைய பெட்டிகளில் தேடி இரண்டு நாடகங்களின் பிரதிகளைக் கண்டுபிடித்து ஒப்படைத்திருக்கிறார் சிவகுமார்.
இந்த விஷயம் குறித்து அவர் என்னிடம் பேசியபோது பிரமித்துப் போனேன்.
சிவகுமார் 1961 முதல் தினமும் ஒரு நாள் விடாமல் டைரி எழுதும் பழக்கம் உள்ளவர். அதில் அன்று தனக்கு நடந்தது மட்டும் அல்லாமல் அந்த நாளில் இந்தியாவில், உலகில் நடந்த முக்கிய நிகழ்வுகள், அது குறித்து தன் பார்வை என்று எழுதிவைத்துள்ளார்.
அந்தப் பொக்கிஷங்களை வைத்து அடுத்த திட்டத்துக்குத் தயாராகி வருகிறார் என்கிற அளவுக்கு மட்டுமே ரகசியம் சொல்ல எனக்கு அனுமதி.

No comments:
Post a Comment