Monday, May 8, 2023

ஒரு குழந்தை ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்றால் தாய் தந்தை இருவருமே நல்லவர்களாக கண்டிப்பாக இருக்க வேண்டும்.

 சிகாகோவில் ஒரு இளைஞன்

இரவு 2:30 மணிக்கு வேகமாக ஓடுகிறான். போலிஸ் அவனை துரத்துகிறது. வளைத்து பிடிக்கிறது.
அவன் திரும்புகிறான்..கையில் துப்பாக்கி
"துப்பாக்கியை கீழே போடு" என சொல்ல, சொல்ல கையை ஹேண்ட்ஸப் பாணியில் துப்பாகியுடன் உயர்த்துகிறான். அவன் தங்களை சுடதான் முயல்கிறான் என கருதிய போலிஸ் அவனை சுட்டு கொல்கிறது
அதன்பின் பார்த்தால் அவன் வயது 14. நள்ளிரவில் உயரமாக ஒருவன் ஓடுகையில் அவன் வயது என்ன என போலிசுக்கு எப்படி தெரியும்?
போலிஸ் அவனை சுட்டது சரியா என டிவிக்களில் பெரிய விவாதம் நடக்க....
யாருமே பேசாத, விவாதிக்காத விசயம்
"14 வயது பையனின் கையில் துப்பாக்கி எப்படி வந்தது? நள்ளிரவு 2:30க்கு தெருக்களில் அவனுக்கு என்ன வேலை?"
"எங்கே போனாய்? ஏன் லேட்டாக வருகிறாய்?" இப்படி எல்லாம் கேட்க வீட்டில் அவனது தந்தை இல்லை.
இவன் என இல்லை...அமெரிக்க சிறைகளில் உள்ள கைதிக்ளில் அறுதிப்பெரும்பான்மை பேருக்கு வீட்டில் தந்தை இல்லை.
தந்தை இல்லாத வீடுகளில் இருந்து வரும் இளைஞர்கள் பெருமளவு போதைமருந்து மற்றும் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.
அதற்காக இவர்களின் தாய் விதவை அல்லது டிவர்சி என பொருள் அல்ல.
கணவரை இழந்தவரின் மகன் என்றாலும் தாத்தா, பாட்டி, சித்தப்பா...இப்படி ஒரு சோசியல் நெட் ஒர்க் இருக்கும்
ஆனால் திருமணம் ஆகாமல் பிறந்தவ்ர்களுக்கு அப்படி ஒரு சோசியல் நெட் ஒர்க் இல்லை.
மைக் டைசன் கதையும் இப்படியானதுதான்
அவர் பிறந்தவுடன் தந்தையும், தாயும் பிரிந்துவிட்டார்கள்.
தட்டிகேட்க ஆள் இல்லாமல் தெருக்களில் கலாட்டா செய்து, சண்டை பிடித்தபடி திரிவார் மைக் டைசன். 13 வயதுக்குள் 38 முறை ஜெயிலுக்கு போய்விட்டார்
அப்படி சின்ன, சின்ன குற்றங்களை செய்து ஜெயிலுக்கு போன மைக் டைசன் ஒழுக்கம், கட்டுபாடு என்பதை கற்றுக்கொண்டதே சிறையில்தான். அங்கே தான் குத்துச்சண்டையை பயின்றார்
இது குறித்து ஆராய்ச்சி செய்த ஆர்வர்டு பல்கலைகழக பேராசிரியர் ஷெல்டன் கிளக் பின்வருமாறு எழுதுகிறார்..
"பையன் எதாவது தப்பு செய்தால் அம்மா சொல்லும் வார்த்தைகள்..."இரு சாயந்திரம் அப்பா வரட்டும்..சொல்கிறேன்"
ஆனால் அப்படி சாயந்திரம் வந்து தண்டிக்க எந்த தந்தையும் இல்லாத வீடுகளில் பையன்கள் மனம்போன போக்கில் வாழ்கிறார்கள்.
கேங்குகள், கிரிமினல்கள் அவர்களை தன் விருப்பபடி பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
பிள்ளைகள் வாழ்வில் கண்டிப்பான அப்பா இருப்பது மிக அவசியம்...
சும்மா அப்பா என பெயருக்கு இருந்தால் மட்டும் போதாது
சிரத்தை எடுத்து, கண்டிக்க வேண்டிய இடங்களில் கண்டித்து, செல்லம் கொடுக்கவேண்டிய இடங்களில் செல்லமும் கொடுத்து வளர்க்கவேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...