Sunday, May 7, 2023

பேங்க்_பரிதாபங்கள்.......

 "காசு போடனும்..."

'வெளிய மெஷின்ல போய் போடுங்க...'
"காசு எடுக்கனும்ங்க..."
'வெளிய மெஷின்ல போய் எடுத்துக்கங்க...'
"பாஸ் புக் என்ட்ரி..."
'வெளிய மெஷின்ல போட்டுக்கங்க...'
"பணம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணனும்..."
'ஆன்லைன்ல பண்ணிக்குங்க... '
"பிஸினஸ் அக்கௌண்ட் ஸ்டேட்மென்ட்... "
'சிஸ்டம் அப்ரூவ் பண்லை... சிஸ்டம் விடமாட்டேங்குது.. வரப்ப அனுப்புவோம்....'
"எப்ஃடி... ரினியூ பண்ணனும்..."
'சிஸ்டம் தானா பண்ணிக்கும்...'
"செக் புக்..."
'ரெக்வெஸ்ட் குடுத்துட்டுப் போங்க...
ஹெட் ஆஃபிஸ்லருந்து நேரா வீட்டுக்கு அனுப்புவாங்க...'
"கார்டு ஆக்டிவேட் பண்ணனும்... பின் நம்பர்..."
'மொபைல் ஆப்ல பண்ணுங்க... இல்ல ஏடிஎம் ல பண்ணுங்க...'
"சில ட்ரான்ஸாக்ஷன்லாம் கார்டு அலௌவ் பண்ண மாட்டேங்குது... என்ன பிரச்சனைனு...."
'மொபைல் ஆப்ல போய் ஆக்டிவேட் பண்ணிக்குங்க...'
"பணம் டெபாஸிட் பண்ணா மெஷின் அக்ஸப்ட் பண்ண மாட்டேங்குது..."
'டேமேஜ்ட் கரன்ஸி போட்டீங்கன்னா மெஷின் எடுத்துக்காது.... நல்ல நோட்டா போடுங்க...'
"மெஷின் ஃபால்ட் போல... பாஸ்புக்கை கிழிச்சு விடுதுங்க...'
'அது எங்க மெய்ன்ட்டனன்ஸ்ல இல்லை...'
"டேமேஜ்ட் கரன்ஸியா ஏடிஎம்ல வருது..."
'அது எங்க கன்ட்ரோல் கிடையாது... வெளிய இருந்து ஏஜன்ஸி பண்றது...'
"டேமேஜ்ட் கரன்ஸி மாத்திக்குடுங்க..."
'ஹெட் ஆஃபிஸ்ல போய் மாத்திக்குங்க...'
"ஏடிஎம்ல ஐநூறா வருது... நூறு ஐம்பது இருபது ரூபா சேஞ்ச் வேணும்... பிஸினஸ் பர்ப்பஸ்..."
'எங்களுக்கே வரதில்லை...'
"பத்து அஞ்சு ரெண்டு ரூபா காயின்ஸ்.."
'எங்ககிட்டயே இல்லை...'
"பெரிய அமௌண்ட் வித்ட்ரா பண்ணா... நீங்க கொடுத்த பணக்கட்டுல பாதி டேமேஜ்டா இருக்கு... க்ளையண்ட்./கஸ்டமர் வாங்கமாட்டாங்க... மாத்திக்கொடுங்க..."
'வேற இல்ல... எங்களுக்கே அப்படிதான் வருது...'
காசையும் போட்டுப்பிட்டு... இப்படி விட்டேத்தியா எக்கேடு கெட்டோ போ எனக்கென்னன்ற ரேஞ்ச்ல வர பதில்லாம் கேட்டு பேபேனு பேக்கு மாதிரி முழிச்சுக்கிட்டு வாரது...
வேற யாரு... நாமதான்... 😳
எய்யா...ஏம்யா... எங்களையெல்லாம் பாத்தா பாவமா இல்லீங்களாயா...😭
அத்தனை பேருக்குமே இந்த சிஸ்டம் ஒத்து வருமா... அவங்களால பண்ண முடியுமானு யோசிக்கமாட்டீங்களாய்யா... 😥
எல்லாமே... மெஷினும் நாங்களுமே செஞ்சுக்க... நீங்க என்னதான்பா பண்ணுவீங்கன்ற கேள்விய கேட்க மட்டும் நமக்கு இன்னும் தைரியம் வரமாட்டேங்குது....
ஒரு பதினைஞ்சு வருஷம் முன்ன... கணினி வசதியோ... ஏடிஎம் வசதியோ அதிகம் இல்லாத காலத்துல... தண்டி தண்டியா லெட்ஜர் வச்சு என்ட்ரி போட்டு.. பேங்க் உள்ளயே எல்லா ட்ரான்ஸாக்ஷனும் பண்ணப்ப கூட... வங்கியெல்லாம் லைவ்லியா நட்பா நல்லா இருந்தது...
என்னவோ....சிஸ்டம் சிஸ்டம்னு நல்லா சிஸ்டம் இம்ப்ரூவ் பண்ணீங்க போங்க... 🙄

May be an image of 5 people, lighting, hospital and text that says "shutterstock.com 1146510494"
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...