தற்போது உலகில் பலர் மாரடைப்பால் திடீரென்று இறப்பதற்கு முக்கிய காரணமே கொழுப்புத் தேக்கம் தான். உலகில் ஐந்தில் ஒருவர் சில வகையான இதய நோயால் மரணத்தை சந்திக்கின்றனர். Powered By PauseUnmute Loaded: 0.35% Fullscreen கொலஸ்டிரால் எனப்படும், கொழுப்புப் பொருட்கள் சிறிது சிறிதாக ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதனால் ஏற்படும் அடைப்பு ஆகும். எங்கெல்லாம் இப்படிக் கொழுப்புப் பொருட்கள் படிந்து குவிகின்றனவோ, அங்கெல்லாம்,ரத்தக் குழாயைச் சுருங்கச் செய்கின்றன. அதன் விளைவாக, இதயத்துக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இதய ரத்தக்குழாய்களில் மட்டும் அல்ல, உடலுக்குள் செல்லும் எல்லா ரத்தக்குழாய்களிலும் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. உதாரணமாக, மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது பக்கவாதம் உண்டாகிறது. சிறுநீரக ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படும்போது, சிறுநீரக செயலிழப்பு நேரிடுகிறது. கால்களுக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது கால் அழுகும் நிலை ஏற்பட்டு காலையே இழக்க நேரிடுகிறது. ஆனால், மற்ற உறுப்புகளை விட இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது பாதிப்புகளும், உயிர் ஆபத்தும் அதிகம் நேரிடுகிறது. இதனால் தான் இதய ரத்தக்குழாய் அடைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மனித உடல் முழுவதும் ரத்தம் கொண்டு செல்லும் பணியை இதயம் செய்கிறது. அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டால் அது உடல் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். இது போன்ற ரத்தக்குழாய் அடைப்பு பாதிப்புகள் வராமல் தடுப்பது மிகவும் அவசியம் ஆகும். அதனால் தான் "வரும் முன் காப்போம்" என்ற நிலைப்பாட்டில் இதய பராமரிப்பு மிக முக்கிய இடம் வகிக்கின்றது. சரிவிகித உணவு உண்பது, மது-புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்ப்பது, மனதில் கண்டதையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல் மன அமைதியை பராமரிப் பது அவசியம். மேலும், முறையான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவரின் ஆலோசனைகள் போன்றவற்றின் மூலம் ஆரோக்கியமான இருதய நலத்தையும், உடல் நலத்தையும் பெறலாம். இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. வெங்கடேஷ், எம்.டி., டி.என்.பி, (கார்டியோ) லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்..
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Sunday, July 23, 2023
அசைவம் சாப்பிடலாமா இறை நம்பிக்கை உள்ளவர்கள் ??? அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????
இந்த கேள்வியை
ஒருவரின் வாழ்வும் தாழ்வும் இயற்கை என்பது பொதுவானது.
இல்லற வாசி ஒருவர் அருகிலுள்ள ஊருக்குப் புறப்பட்டார். அவரால் மறுநாள்தான் திரும்பி வரமுடியும். எனவே, அவரது மனைவி மதியமும் இரவும் சாப்பிடுவதற்காக அவருக்கு ஒரு உணவுப் பொட்டலங்களை ஒரு பையில் போட்டுக் கெர்டுத்தாள். காட்டுவழியே தான அவரது பயணம் அமைந்தது.
மழைக்கு ஒதுங்கக்கூடாது.
திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது
சில இந்து விரோதிகள் மீடியாக்களில் அவர்களை தரக்குறைவாக விமர்சித்து வன்மத்தை விதைத்து வருகிறார்கள்.
வடசென்னை வண்ணாரப்பேட்டையில் ஓர் ஏழை புரோகிதருக்கு மகளாகப் பிறந்த பவானிதேவி ஒலிம்பிக்கில் கத்திச்சண்டைக்கு இந்தியா சார்பாக தேர்வாகியுள்ளார்...
மகளிர்_உரிமைத்தொகை_பரிதாபங்கள்.
இன்று மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் வழங்கும் போது நாம் கண்ட காட்சிகள் சில...


தன்னைச்சுடும் – ஒரு குட்டிக் கதை.
ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..
அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது .
வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை
நடந்து சென்றே... ரெகுலராக ஒரு மளிகைக் கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் !!
முருங்கை காயை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார் !!
கந்தசாமி கொண்டு வரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம் !!
இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார் !!
பல வருடமாக கந்தசாமி முருங்கைக்காய் கொண்டு வருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை !!
கந்தசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார் !!
காரணம் கந்தசாமி யின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!
ஒரு நாள் கந்தசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....
சிறிது நேரத்தில்....
பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க...அவருக்காக மளிகைக்காரர் ... எடைபோட... அதில் ஒன்பது கிலோ
மட்டுமே இருந்தது !!
அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! கந்தசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே !!
இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள் தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே !!
அடுத்த முறை கந்தசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார் !!
நான்கு நாட்கள் கழித்து கந்தசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார் !!
நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார் !!
‘கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க ஒரு கட்டு பத்து கிலோ என்றார் கந்தசாமி ...
அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒவ்வொரு கட்டிலும் ஒன்பது கிலோ தான் இருந்தது .
வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என கந்தசாமியின் கன்னத்தில் அறைந்தார் !!
‘இத்தனை வருஷமா இப்படித் தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய்...’ என துப்ப, நிலைகுலைந்து போனார் கந்தசாமி .
அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க...
ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டு வருவேன்.
‘இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, .
மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.....
தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார் !!
இத்தனை வருடங்களாக கந்தசாமி யை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...
அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டு தான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது !!
இது தான் உலகநியதி !!
நாம் எதைத் தருகிறோமோ
அதுதான் நமக்குத் திரும்ப வரும் ....
நல்லதை தந்தால் நல்லது வரும்,...
தீமையை தந்தால் தீமை வரும் !!
வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம் ,
ஆனா....
நிச்சயம் வரும் !!
ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம் !!
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுதல் வேண்டும் !!
கோவிலில் சாமி முன் இந்த முறை படி பிராத்தனை செய்யுங்கள் நினைத்தது நடக்கும்...
நமக்கு எப்பொழுது எந்த பிரச்சனை எந்த ரூபத்தில் வந்தாலும் நாம் அந்த பிரச்சனைகளை முடிக்கவும் அதிலிருந்து முழுமையாக விடுபட்டு வெளியே வருவதற்கும் நாம் செய்யும் முதல் வெளியே தெய்வத்திடம் சரணடைந்து பிரார்த்தனை செய்து நம் குறைகளை கூறி, வேண்டிய வரங்களை பெற்றுக் கொள்வோம் அது மட்டும் இல்லாமல் நமது வாழ்க்கையில் செய்யும் சில சிறிய தவறுகளுக்கும் தெய்வத்திடம் சென்று அதற்கான பரிகாரங்களையும் செய்து புண்ணியத்தை தேடி கொள்வோம். ஆனால் கோவிலில் சாமியிடம் வேண்டுவதாக இருந்தாலும் பரிகாரம் செய்வதாக இருந்தாலும் அதற்கு ஒரு முறை இருக்கிறது அந்த முறைப்படி நீங்கள் இறைவனிடம் வேண்டினால் கண்டிப்பாக அது நிறைவேற்றப்படும். அந்த முறைப்படி பரிகாரம் செய்தாலும் தெய்வம் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளும். அதனால் இன்று கோவிலில் தெய்வத்தின் முன் எப்படி பிரார்த்தனை செய்வது, வேண்டுவது பற்றி தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த செய்தி தொகுப்பில் நாம் காண இருக்கிறோம்...
*உதவியதும் நான் அல்ல...*
பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,""அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!'' என்றார்.



*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...

-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...