Friday, July 21, 2023

யோசிக்க வைத்த பதிவு..

 கடந்த 2 வருடங்களில் சொந்த தொழில் செய்து பணம் ஈட்டுவது முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது!

முன்பெல்லாம் 20,000 ரூபாய் முதலீடு செய்தால் கூட ஓரளவு தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி முன்னேற முடியும்!
பல ஏழ்மை நிலையில் இருந்து முன்னேறிய தொழில் அதிபர்கள் உருவான காலகட்டம் அது!
கடன் கொடுத்தால் கூட திரும்பி வரும் என்று நம்பிக்கை இருந்த காலம் அது!
ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் இந்த நிலை மாறிவிட்டது!
ஒன்று பெரிய அளவில் முதலீடு போட்டு குறைந்த விலையில் விற்க வேண்டும்!
இல்லையெனில் நன்கு கடைகளை அலங்காரம் செய்து லாபத்தை பார்க்க வேண்டும்!
அதைவிட கொடுமை உழைப்பில் பெரும்பகுதியை வாடகை தின்று விடுகிறது!
கடன் கொடுத்தாலும் திரும்ப வரும் என்று உத்தரவாதம் இல்லை!
லட்ச ரூபாய் முதலீட்டில் செய்து லாபம் பார்த்த தொழிலுக்கு இன்று பத்து லட்சமாவது முதலீடு செய்தால் தான் நஷ்டமின்றி பிழைப்பு ஓடும் என்ற நிலை வந்து விட்டது!
அதைவிட கொடுமை புதிய முயற்சிகளில் யாரும் இறங்குவதே இல்லை!
ஒரு ஊரில் ஒருவர் ஒரு தொழிலை ஆரம்பித்தால் அந்த முதலீட்டிற்கு நுகர்வு அதாவது விற்பனை கணிசமான அளவு வருகிறது என்று தெரிந்து விட்டால் போதும் வசவசவென அதே பகுதியில் அதே தொழிலை பலரும் ஆரம்பித்து போட்டி போட்டு லாபக்குறைவில் விற்று குறிப்பிட்ட காலத்தில் கூண்டோடு காணாமல் போய்விடுகின்றனர்! முதன்முதலில் அந்த தொழிலை செய்தவரும் சேர்த்து காணாமல் போகிறார்!
அதைவிட பிரமாதம் உழைக்கும் தொழிலாளர்களின் மனப்போக்கு!
2 வருடங்களுக்கு முன்பு வேலைக்கு வரும் தொழிலாளர்களிடம் இருந்த உழைக்கும் தன்மை இப்போது இல்லை! அவர்கள் தொழிலைக் கற்றுக் கொண்டு எப்படியும் முதலாளி ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் உழைப்பார்கள்!
இப்போது அப்படி இல்லை, இந்த கூலிக்கு இவ்வளவு உழைத்தால் போதும் என்று முதலாளிக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்ற கண்ணோட்டத்தில் செய்கின்றனர்!
விளைவு தொழில் சுத்தமும் இல்லை, இவர்களும் முதலாளிகள் ஆவதில்லை, முதலாளியும் உருப்படுவதில்லை!
வேலை செய்வதிலும் ஈடுபாடு இல்லாமல், ரிஸ்க் எடுத்து முதலீடு போட்டு தொழில் செய்யலாம் என்ற எண்ணமும் இல்லாமல் குழப்பங்கள் நிறைந்த இளைஞர்கள் கூட்டம் பெருகியுள்ளது!
சரியான வழிகாட்டுதல் இல்லை, சுயதொழில் தன்முனைப்பு இல்லை, கிடைக்கும் வேலையில் ஒட்டிக்கொண்டு அதையே திட்டிக்கொண்டே செய்கின்ற சமுதாயம் உருவாகிவிட்டது!
கடந்த 2 வருடங்களில் பிரம்மாண்டமான பல ஹோட்டல்கள், விடுதிகள், ஷாப்பிங் மால்கள், நகைக்கடைகள் என்று நேர்மையற்ற பணத்தில் எழும்பி நிற்கும் சாம்ராஜ்யங்கள் திகைக்க வைக்கின்றன!
மிகப்பெரிய தொழில் முதலீடு, திறமை, ஒழுக்கம் இந்த மூன்றும் இல்லாமல் ஒரு தொழிலதிபர் உருவாவது இனி சாத்தியம் இல்லை!
நேர்மையற்ற பணம் விதவிதமான வழிகளில் வேரூன்றி வியாபார சந்தைகளை வளைத்து விட்டது!
அரசியல், அதிகார தொடர்பு, பணம் இல்லாமல் எளிய குடும்பத்தில் இருந்து ஒரு புதிய தொழில் முனைவோர் தொழிலதிபர் ஆக இனி வாய்ப்பில்லை என்ற அவநம்பிக்கை தான் மிஞ்சுகிறது!
இனி வரும் காலங்களில் பலமுள்ளது வாழும், பலமற்றது வீழும், அது எந்த தொழில் ஆனாலும் சரி!!!
எல்லாம் சில காலமே
நிற்கும் , காலம் மாறுதலுக்குரியது
என்பதை சமுக , பொருளாதாரம் , பொதுவாழ்க்கை மற்றும்
வாழ்வியலில் நடக்கும்
நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் , இன்றைய , நாளைய சமுதாயம் உணரகூடியதாக அமையும்
ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தினரின் குரலாக
மேலே உள்ள எழுத்துகள்
பேசும் !!!
ஒலியாக இல்லை மெளனமாகவே
மெளனமே சம்மதம்
மதங்கள் கடந்த சம்மதம்
மெளனமே சம்மதம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...