Monday, July 17, 2023

திங்கறதுக்கு தெரிஞ்ச வாய்க்கு பேசத் தெரியாது போல இருக்கு.

 எனக்கு கல்யாணம் முடிஞ்சு நாலஞ்சுநாள் கழிச்சு, மாமியார் வீட்டு விருந்துக்கு போயிருக்கோம். நானும் மாமனாரும் உக்காந்து பேசிட்டிருந்தோம்.

நான்-வெஜ் விருந்து, சமையக் கட்டுலிருந்து வாசம் தூக்குது. ஒரு மணிக்கு, "எந்திரிச்சு கைய கழுவுங்க மாப்ள" ன்னாங்க. நானும் மாமனாரும் உக்காந்தோம். "நா உங்களுக்கு பரிமாறிட்டு, எங்கம்மாகூட உக்காந்து சாப்டுக்கறேன்"னு, செல்லத்தாயி சொல்லிடுச்சு.
கோரப்பாய் ஸைசுக்கு ஒரு இலைய போட்டாங்க. வழக்கம் போல உப்பு, ஊறுகான்னு வெச்சாங்க. நான்-வெஜ் விருந்துன்னாலும் சம்பிரதாயத்துக்கு ஒரு காய்கறி வெக்கணும்னு, புடலங்கா கூட்டு வெச்சாங்க (புடலங்காவ கண்டாலே, எனக்கு எரிச்சலா வரும்😡).
எங்கிட்ட ஒரு பழக்கம் என்னன்னா... எனக்கு பிடிக்காத ஐட்டத்த இலைல வெச்சா, முதல்ல அதத்தான் காலி பண்ணுவேன். பிடிச்ச ஐட்டத்த, கடைசியா ரசிச்சு சாப்பிடுவேன்😋.
அப்புறம்... பெப்பர் மட்டனும், வஞ்சிரமீனும் ப்ளேட்ல கொண்டாந்து வெச்சாங்க. சாப்பாட்ட போட்டு குழம்ப ஊத்துனாங்க. செல்லத்தாய முறைச்சுகிட்டே... ஒருவாய் சாப்பாடும், ஒருவாய் புடலங்கா கூட்டுமா சாப்ட்டு, குழம்பு முடிஞ்சு ரசத்துக்கு ஷிப்ட் ஆனேன். ஒருவழியா புடலங்கா கூட்டும் காலியாகுற மாதிரி இருந்தது. திடீர்னு கிச்சன்லிருந்து எங்க மாமியார் எட்டிபாத்தாங்க.
என்ன நினச்சாங்களோ தெரில, வேகவேகமா வந்து... "ஆம்பளைக்கு எது புடிக்கும்னு குறிப்பறிஞ்சு பரிமாறணும்டீ" ன்னு சொல்லிட்டே... நாலுகரண்டி புடலங்கா கூட்டெடுத்து, இலைல கொட்டிட்டு, "இன்னும் வேணும்னா கேளுங்க மாப்ள. உள்ள நிறைய இருக்கு" 😢ன்றாங்க.
செல்லத்தாய முறைச்சா, "சாரிங்க, உங்களுக்கு புடலங்கா பிடிக்குனு எனக்கு தெரியாம போச்சு". அப்பெல்லாம் செல்லத்தாயி, ரொம்ப இன்னொசண்ட் & ஒபீடியண்ட் ஸ்டூடெண்ட்.
'இனி ரசத்துக்கும் புடலங்கா கூடத்தான் மல்லுக் கட்டணுமா ?🙄. எப்பதான் மட்டனும், மீனும் சாப்புடுறது' ன்னு, உள்ளுக்குள்ள அழுதுட்டே... திரும்பவும் எங்க மாமியார் எட்டிபாத்து, மெதுவா ஸ்டேப் பை ஸ்டெப்பா பக்கத்துல வந்தாங்க...
"ஐயையோ... இனி புடலங்கா வெச்சா, எந்திரிச்சு ஓடியே போயிடுவேன்" ன்னு, சொல்லி முடிக்கல... "ஆம்பளைக்கு எது புடிக்காதுனு குறிப்பறிஞ்சு, அத பந்திலிருந்து எடுத்துடணும்டீ" ன்னு, சொல்லிட்டே... மட்டனையும், மீனையும் தூக்கிட்டு போகும்போது... "அவருக்கு அசைவம் புடிக்கலன்றத நீதாண்டி தெரிஞ்சுக்கணும். ஒருவாய் கூட எடுத்துக்கல பாரு. சொல்ல கூச்சப்படுறாரு. நாமதாண்டி இதையெல்லாம் தெரிஞ்சு பரிமாறணும். மசமசன்னு நிக்காம, மாப்ளைக்கு அந்த புடலங்கா கூட்ட எடுத்து வெய்யிடீ"😭. பரிதாபமா மாமனார் பக்கம் திரும்பினா...
அவரு எழும்ப கடிச்சுக்கிட்டே, "நானும் எத்தனையோ பேர பாத்திருக்கேன் மாப்ள. 'எந்த சூழ்நிலைலயும், யாருக்காகவும் அசைவம் சாப்ட்ட மாட்டேன்னா, சாப்ட்ட மாட்டேன்' னு, உறுதியா நிக்குற உங்களவு பிடிவாதக்காரர, என்னோட லைப்லயே பாத்ததில்ல" 🤭ன்னு சொல்லிட்டு, செல்லத்தாய பாத்து... "அந்த குடல் ப்ரை ரெடியாயிருந்தா எடுத்துட்டு வாம்மா" ன்றாரு.
குடும்பமாய்யா இது ? !!! 😠😠😠
May be an image of biryani

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...