Wednesday, July 19, 2023

அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது .

 உலகின் மிகப்பெரிய அணு ஆராய்ச்சி நிறுவனமான CERN நிறுவனத்தின் முன்பு 6 அடி உயரமுள்ள நடராஜர் சிலை வைக்கப்பட்ட தினம் இன்று (2004)

CERN - ஸ்விட்சர்லாந்த் நாட்டில் அமைந்துள்ளது உலகின் மிகப்பெரிய இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம். 27கிமீ பரப்பளவில் 100 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது . அணுத்துகள்களை ஒன்றையொன்று மோதவிட்டு ஆராய்ச்சி நடத்தப்படுகிறது .கடவுள் துகள்களை (GODS PARTICLES) பற்றின ஆராய்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டும் இன்றி பல்வேறுவிதமான இயற்பியல் சம்பந்தப்பட்ட ஆய்வுகளும் இங்கே நடைபெறுகின்றன
கிறித்தவர்கள் அதிகம் வாழும் ஒரு நாட்டில் ஏன் இந்து மத கடவுளின் சிலை வைக்கப்பட்டுள்ளது என்று தெரியுமா? அதற்கான காரணத்தையும் அவர்களே கூறி உள்ளார்கள்.
"காலத்தால் பதில் சொல்ல முடியாத பல கேள்விகளுக்கான பதில் இந்த சிலையில் அமைந்துள்ளது என்று " குறிப்பிட்டுள்ளார்கள்
அதாவது அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறார் நடராஜர் .
அவருடைய வலது கையிலிருந்து இடதுகால் வரை உள்ள அமைப்பு Milky way என்று அழைக்கப்பட கூடிய பால்வழி மண்டலத்தை குறிக்கிறது . நடராஜரின் இதயம் அமைந்துள்ள இடத்தில் சூரிய குடும்பமான சோலார் சிஸ்டம் அமைந்துள்ளது .அவரின் இடுப்பை சுற்றி நிற்காமல் ஓடிகொண்டிருக்கும் பாம்பு நேரத்தை குறிக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அவரை சுற்றியுள்ள நெருப்பு வட்டம் பிரபஞ்சத்தை குறிக்கிறது
அருவமாகவும், உருவமாகவும் ஆகாயமாகவும் காட்சி தர கூடிய ஒரே கடவுள் நடராஜர் தான். சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
அணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் ஒன்றாக கருதபடுகிறது.
அதனாலேயே "அவனின்றி ஓர் அணுவும் அசையாது" என்று திருமூலர் கூறியுள்ளார்.
1972-ஆம் ஆண்டு, ப்ரிட்ஜாப் காப்ரா என்கிற பிரபல அமெரிக்க அணு விஞ்ஞானி 'The Dance of Shiva: The Hindu view of matter in the light of Modern Physics' (சிவனின் நடனம் : நவீன பௌதிகத்தின் பார்வையில் வஸ்துக்களை பற்றிய ஹிந்துக்களின் நோக்கு) என்கிற தலைப்பில் Main currents in Modern Thought என்ற விஞ்ஞான சம்பந்தப்பட்ட பத்திரிகையில், சிவனின் நடனத்துக்கும், உப அணுக்களின் நடனத்துக்கும் உள்ள இணக்கத்தைப் பற்றி முதலில் விவரமாக எழுதினார்.
1975-ஆம் ஆண்டு இந்தக் கட்டுரையை விரிவுபடுத்தி ’The Tao of Physics' என்ற தலைப்பில் ஒரு புத்தகமாகவும் அவர் எழுதி அது உலகிலேயே அதிகம் விற்ற புத்தங்களில் ஒன்றாக பிரபலமாகியது.
அதில்,. ”எப்படி இந்தியச் சித்தர்கள் படைப்பைப் பிரிக்க முடியாத, எப்போதுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நடப்பாகப் பார்த்தார்களோ, அப்படியே தான் நவீன பௌதிக விஞ்ஞானமும் பிரபஞ்சத்தைக் காண்கிறது”
”பிறப்பும், இறப்பும் நிற்பதே இல்லை.
அதுபோல், பிரபஞ்சம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின் பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது.
கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம் (cosmic dance). அதுவே தான் நடராஜரின் நடனம்” என்கிறார் காப்ரா.
சிதம்பர நடராஜர் கோவிலுக்கு மேலே பறக்கும் செயற்கை கோள்கள் செயலிலந்துவிடுமாம் காரணம் புவியீர்ப்பு மையத்தின் செண்டர் பாயிண்டில் சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளதாம். அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் உள்ள ஐந்து சிவஸ்தலங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளதாம் எந்தவிதமான அறிவியல் ஆய்வுகளுமற்ற காலகட்டத்தில் எப்படி இது சாத்தியமானது என்பது இன்று வரை புரியாத புதிராக உள்ளது
ஒட்மொத்த அண்டத்தின் குறியீடாக நடராஜர் அமைந்துள்ளார் என்பதை குறிப்பிடவே சுவிட்சர்லாந்தின் ஐரோப்பிய ஆராய்ச்சி கூடத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
”பரமகுருவாய், அணுவில் அசைவாய்” என்று அருணகிரிநாதர் பாடிய திருப்புகழை நினைத்துப் பாருங்கள்.
தென்னாடுடைய சிவனே போற்றி..!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...