Sunday, July 23, 2023

ஒருவரின் வாழ்வும் தாழ்வும் இயற்கை என்பது பொதுவானது.

 இல்லற வாசி ஒருவர் அருகிலுள்ள ஊருக்குப் புறப்பட்டார். அவரால் மறுநாள்தான் திரும்பி வரமுடியும். எனவே, அவரது மனைவி மதியமும் இரவும் சாப்பிடுவதற்காக அவருக்கு ஒரு உணவுப் பொட்டலங்களை ஒரு பையில் போட்டுக் கெர்டுத்தாள். காட்டுவழியே தான அவரது பயணம் அமைந்தது.

அவர் நடுக்காட்டை அடைந்தபோது மதியம் ஆகிவிட்டது. ஒரு மரத்தடியில் அமர்ந்து மதிய உணவை உண்டார். உணவுக்குப் பின் பையை எடுத்துத் தோளில் தொங்க விட்டவாறு தனது பயணத்தை தொடர்ந்தார். நினைத்ததைவிட மிக விரைவில் சேர வேண்டிய இடத்தைச் சென்றடைந்த அவர் தனது வேலைகளை விரைவில் முடித்துக் கொண்டார். தனது ஊரை நோக்கிப் புறப்பட்டார். விரைவிலேயே புறப்பட்ட காரணத்தால், வீட்டிற்குச் சென்ற பின் இரவு உணவைச் சாப்பிடலாம் எனத் தீர்மானித்தார்.
திரும்பும் வழியில் அவர் ஒரு துறைவி அமர்ந்திருப்பதை கண்டார். அந்த துறவி இவரிடம், ”இன்று நீ உன் வீடு திரும்பினால் உன் மனைவி இறந்து விடுவாள், இன்று திரும்பவில்லை என்றால் நீ இறந்து விடுவாய்” என்று கூறினார்.
இதைக்கோட்ட இல்லறவாசி திடுக்கிட்டார். துறவிகளின் வார்த்தைகள் பொய்க்காது என்பதை அறிந்த அவர், தம் மனைவியின் உயிரைக் காக்கும் பொருட்டு அன்று வீடு திரும்புவதில்லை என்று முடிவு செய்தார். காட்டில் விலங்குகள் எந்த நிமிடமும் தன் மீது பாய்ந்து தன்னைக் கொன்று தின்னலாம் என்ற எதிர்பார்ப்புடன் அவர் மிக மெதுவாக, கவனமாக எல்லா திசைகளிலும் கூர்ந்து நோக்கியவாறு நடக்க ஆரம்பித்தார்.
சிறிது தூரம் நடந்தபிறகு, ஒரு மரத்தடியில் சில துறவிகள் அமர்ந்திருக்க தலைமைத் துறவி அருளுரை நிகழ்த்துவதைக் கண்டனர். அந்தத் தலைமைத்துறவி யாரென்று பார்த்தபோது அங்கு சிவ ஒளி சித்தரை கண்டார்.
இல்லறவாசி ஆர்வத்துடன் அவரது அருளுரையைக் கேட்டார். உரை நிறைவுற்ற பின்னர், அவர் சிவ ஒளி சித்தரை வணங்கினார். பின்னர் தான் வழியில் ஒருவரைச் சந்தித்ததை விளக்கமாக கூறி, தன்னைக் காக்குமாறு வேண்டினார்.
புன்னகை புரிந்த சிவ ஒளி சித்தர். “எனக்குப் பசியாக இருக்கிறது. ஏதாவது சாப்பிட இருக்கிறதா?” என்று கேட்டார்.
இல்லறவாசி அளவற்ற மகிழ்ச்சியுடன் பையைத் திறக்க முற்பட்டார். ஆனால் சிவ ஒளி சித்தர், அந்தப்பையை அப்படியே தன்னிடம் தருமாறு கேட்டார். இல்லறவாசியும் பையை அப்படியே சிவ ஒளி சித்தரிடம் கொடுத்தார். சிவ ஒளி சித்தர் மெதுவாக பையைத் திறந்து, அதன் உள்ளே இருந்த சிறிய விஷப்பாம்பை வெளியில் எடுத்தார்.
அதைக்கண்ட இல்லறவாசி திடுக்கிட்டான். மதியம் தான் உணவருந்தப் பையைத் திறந்து மரத்தடியில் வைத்திருந்தபோது விஷப்பாம்பு பைக்குள் சென்றிருக்க வேண்டும் என்று இல்லறவாசி புரிந்து கொண்டார். அப்போதுதான் துறவி சொன்னதன் பொருள் அவனுக்குப் புரிந்தது.
(ஒருவர் மரணத்தை எப்போதும் தன்னுடனேயே எடுத்துச் செல்கிறார். சாதுக்கள் தொடர்பு அவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும்)
மரணத்தை வென்றவர் என்று இதுவரையில் யாரும் இல்லை நல்லவர்களோடு தொடர்பில் இருப்போம். மனித நாகரீகத்தோடு செயல்படுவோம். மரணங்கள் வந்தாலும் நாம் அதை எதிர்த்து நிற்கலாம்...
May be an image of temple and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...