Sunday, July 23, 2023

மகளிர்_உரிமைத்தொகை_பரிதாபங்கள்.

 இன்று மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் வழங்கும் போது நாம் கண்ட காட்சிகள் சில...

♦️ மூன்று மாடிகள் கொண்ட சொந்த வீடு, அதில் இரண்டு, மூன்று ஏசி ரூம்கள், கணவருக்கு வெளிநாட்டில் வேலை. எனக்கு ஏன் விண்ணப்பம் தரவில்லை, எனக்கும் விண்ணப்பம் வேண்டும் என ஓடிச்சென்று வாங்கிச் செல்கிறார் அந்த பெண். வீடு மாமானார் கட்டியது, எங்கள் சொந்த வீடு இல்லை. கணவர் கூலி வேலைதான் செய்கிறார் என்று கூறிவிடலாம். ஆனால் மின்சார இணைப்பு காட்டிக் கொடுத்து விடுமே. மாதம் 300 யூனிட்க்கு மேல் பயன்படுத்துகிறவர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்காதே..!
♦️ கணவர், வயதுக்கு வந்த வேலைக்குச் செல்லும் திருமணமாகாத இரண்டு மகன்கள். பெரியவரை விட்டுவிடலாம். இரண்டு மகன்கள் தினக்கூலி, தினமும் 500 ரூபாய்தான் சம்பளம் என்று எழுதிக் கொடுத்தாலும் மாதம் 13,000 × 2 = 26,000, குடும்பத்தின் மொத்த வருட வருமானம் மூன்று லட்சத்தை தாண்டுமே...! இதுவும் #ரிஜெக்ட் ஆகும்.
அரசு வழங்குவது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்தானே தவிர பொங்கல் பண்டிகை தொகுப்பு இல்லை.
ஒரு விண்ணப்பம் எழுதிக்கொடுப்பதில் என்னவாகிவிடபோகிறது. கிடைத்தால் கிடைக்கட்டும் என்ற ரீதியில் தகுதியில்லாத எல்லோரும் விண்ணபித்தால். இத்திட்டத்திற்காக அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் பணியாட்களுக்கு பணிச்சுமை கூடும்.
அதிக விண்ணப்பங்கள் குவியும் போது பணியாட்கள் சலிப்படைந்து ஏனோதானோ என்ற ரீதியில் பயனாளர்களை தேர்வுச் செய்யலாம், இல்லை அலட்சியமாக விண்ணப்பங்கள் சிலவற்றைத் தூக்கி குப்பையில் எறியலாம். இதனால் உண்மையிலயே தகுதியானவர்கள் கூட பாதிக்கப்படலாம்.
திட்டத்தின் விதிமுறைகளைத் தெரிந்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டும் விண்ணப்பபிபது எல்லோருக்கும் நல்லது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...