Friday, July 21, 2023

காஞ்சி ஏகாம்பரநாதர் சந்நதியில் உள்ள நிலாதிங்கள்துண்டத்தான்சந்நதியையும் மாற்ற வேண்டும் என்றார்.

 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருக்குறுங்குடி பெருமாள் கோயிலில் இருந்த பாரம்பரிய சிவலிங்கத்தை TVS வேணு சீனுவாசனின் அழுத்தம் காரணமாக 2004இல் இரவோடு இரவாக எடுத்துவிட்டார்கள். இதற்கு தமிழக அறங்காவல் துறையும் துணை.

TV சுந்தரம் ஐயங்காரின் பிறந்த ஊர் இதனருகில் உள்ளதாம். அவர் வேறு பசையான உபயதாரர். விஷ்ணு கோயிலில் சிவவழிபாட்டை வைணவத்தின் கண்கள் உறுத்தி இருக்கலாம். விஷ்ணுவைத்தவிர்தது அவர்களுக்கு சிவனெல்லாம் ஒரு கடவுளே அல்ல. கேட்கவேண்டுமா?
காலம் காலமாக ஜீயர் காத்துவந்த ஹரி-ஹர வழிபாட்டு முறையை இவர்களின் அழுத்தம் உடைத்துவிட்டது. கோயில் சீரமைப்பு என்று சிவனை வெளியேற்றிவிட்டார்கள்! சிவனடியார்கள் வழக்கு தொடர்ந்து, நீதிமன்ற தீர்ப்புக்குப்பிறகு பழைய இடத்திலேயே சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டு கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்தது.
இந்து தர்மம், ஒரே சமயத்தில் நாத்திகர்களை மட்டுமல்ல, உள்குத்து போடும் நம்மவர்களையும் சமாளிக்க வேண்டும் போலே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...