மம்மி! இன்னிக்கு லன்ச் பாக்ஸுக்கு ஃப்ரைட் ரைஸும் குகும்பர்
ரைத்தாவும் பண்ணி வைக்கறயா? ஓஹோ! தொரைக்கு ஃப்ரைட் ரைஸே தான் வேணுமோ. வேற எதுவும் எறங்காதோ. போடா.அங்க கிண்ணத்துல பழயது பெசைஞ்சு வச்சிருக்கேன்
நார்த்தங்காய தொட்டுண்டு கொட்டிக்கோ.அதயே லன்ச் பாக்ஸ்
லயும் போட்டுண்டு போ எரிந்து விழுந்தாள் அம்மா சங்கரி. அனிருத்துக்கு குபுக்குனு கண்ணுல தண்ணி வந்தூடுத்து. காலேஜ் போற பையன் அழலாமோ. அடக்கிண்டான். ரூமுக்கு போனான். அங்க அப்பா ரகுபதி இழுத்து அணைச்சுண்டார். விசும்பினான். கூல் அனிருத் கூல். காலேஜ் கேன்டீன்ல ஃப்ரைட் ரைஸ் கெடைக்குமோன்னோ. பைஸா வச்சுண்டிரு
க்கியா. தரட்டுமா. எனக்கு ஃப்ரைட் ரைஸ் வேணூங்கறதில்ல டேட். எப்பவும் கோச்சுக்காத மம்மி இன்னிக்கு கோச்சுண்டூ
ட்டாளேன்னு தான் அழுகையா வரதுப்பா. டேக் இட் ஈஸி கண்ணா. எல்லாம் சரியாப்போய்டும். குளிச்சு ட்ரெஸ் பண்ணிண்டு காலேஜுக்கு கெளம்பு. போற வழீல டிஃபன் சாப்டுக்கோ. குளிச்சான். ட்ரெஸ் பண்ணிண்டான்.அம்மா பெசைஞ்சு வச்சிருந்த பழயதை சாப்ட்டான். பார்த்துண்டிருந்த அம்மா சங்கரிக்கு விம்மல்.
டாட்டர் சவிதா குளிச்சூட்டு வந்தா. முகம் பூரா வேதனை. நீ ஏண்டிம்மா மொகத்த தூக்கி எரவாணத்துல வச்சுண்டிருக்கே. நண்ணா தொடச்சுண்டு நாப்கின போட்டுண்டயா. இல்ல, அதுவும் நா வந்து செஞ்சு தொலைக்கணுமா. ஸ்கூலுக்கு போகறச்சே எக்ஸ்ட்ராவா ஒண்ணு எடுத்துண்டுபோ. காம்பிஃப்ளான் போட்டு தொலச்சுண்டயா இல்லயா. சவிதா ரொம்ப பொறுமை. அம்மா பேசினதை சகிச்சுண்டா. அம்மா கேட்டதை எல்லாம் தானே பண்ணிண்டிருந்தா. ரூமுக்கு போய் ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டுண்டா. பின்னால அப்பா. தலைய வருடி உச்சி மோந்தார். ரொம்ப வலிக்கறதாடா. மாத்ரை போட்
டுண்டயோ. மாத்ரை போட்டுண்டா வாய்ல புண்ணு வந்தூடறது. அதனால கார்த்தாலயே மெந்தியத்தை ஊற வச்சு மென்னு தின்னூட்டேம்ப்பா. எவ்ளோ சமத்து! இப்போ வலி சித்த பரவால்லப்பா. சரிடா கண்ணம்மா. ஒனக்கு லன்ச் பாக்ஸுல நாலு ப்ரெட் ஸ்லைஸ் வச்சிருக்கேன். ரெண்டுல ஜாம் தடவியிருக்கேன். ரெண்டுல பட்டர் தடவியிருக்கேன். நாலு போறுமோன்னோ. இன்னும் ரெண்டு வைக்கட்டுமா. நாலே அதிகம்ப்பா. தயிரை விட்டுண்டு ஜில்லுனு பழயது சாப்டூட்டு ஸ்கூல் போறேம்ப்பா. ஓக்கேடா கண்ணம்மா. ரொம்ப முடிலேன்னா டீச்சர்ட்ட சொல்லி எனக்கு ஃபோன் பண்ணச் சொல்லு. நான் வந்து அழைச்சுண்டு வந்துடறேன். ஏம்ப்பா! நீ இன்னிக்கி ஆஃபீஸ் போப்போறதில்லயா. இல்லம்மா. லீவு போட்டிருக்கேன். சவிதா ஸ்கூலுக்கு கிளம்ப ரெடியாயிட்டா. அம்மாக்கு பை சொல்லீட்டு வாசல்ல வந்து நின்ன ஸ்கூல்ல பஸ்ல ஏறிண்டு போயிட்டா.
ரகுபதி-சங்கரி தம்பதியருக்கு அனிருத்தும் சவிதாவும் குழந்தைகள். அனிருத்துக்கு இருபது வயசாறது. பி எஸ்சி. கம்ப்யூடர் ஸயின்ச் செகண்ட் இயர் பண்ணிண்டிருக்கான். ஆறு வருஷம் கழிச்சு சவிதா பொறந்தா. எல்லாம் ப்ளான் பண்ணது. இப்போ நைன்த் படிக்கறா. ஏழெட்டு மாசத்துக்கு முன்னால
தான் பெரியவளானா. இந்தக்காலத்து பொண் கொழந்தேளுக்
கெல்லாம் ப்யூபர்டி ஆன ஒடனே வயத்து வலி வந்தூடறதே.
கல்யாணம் ஆகறச்சே சங்கரியும் வேலக்கி போயிண்டிருந்தா. அனிருத்தை பிள்ளயாண்டதும் ரகுபதி இனிமே நீ வேலக்கி போக வேணாம். என்னோட இன்கம்மே மோர் தன் இனஃப் னான். எப்ப சொல்லுவான்னு காத்திண்டிருந்த மாதிரி ஒடனே ரிஸைன் பண்ணீட்டா. இப்போ ரகுபதி ஐம்பதை நெருங்கிண்டி
ருந்தான். சங்கரிக்கு நாப்பத்தஞ்சு. மிடில் அப்பர் க்ளாஸ். ஸஃபீசியன்ட் இன்கம் அண்ட் ஸேவிங்ஸ். சுக ஜீவனம்.
வெங்கல கடையில யானை புகுந்த மாதிரி கிச்சன்லேரந்து சத்தம். வேலக்காரி மட்டம் போட்டூட்டா. சங்கரியே பத்து பாத்ரம் தேய்க்க வேண்டியதாயிடுத்து. கோபம், வேதனை, தள்ளாமை, ஆற்றாமை. பாத்ரங்கள் மேல காட்டிண்டிருந்தா. ஒரே பொலம்பல். தாய் பகை, குட்டி ஒறவு. எனக்குன்னு யாரு இருக்கா. எல்லாத்தையும் நானே செஞ்சுக்கணும். சாதி மணக்கும், சதகுப்பை நாறும். நான் வெறும் குப்பை சதை தானே. இவளோட பொலம்பலுக்கு அர்த்தம் இதை படிக்கற வாளுக்கு புரியறதோ இல்லையோ. ரகுபதிக்கு நண்ணாவே புரிஞ்சுது. சிரிப்பா வந்தது.பசங்க கிட்ட அனுசரணையா இருக்கறதாவும் தன்னை கவனிக்கலேன்னும் கற்பனை.
ரகுபதி பின்பக்கமா போயி சங்கரி தோளை தொட்டான். உக்கூம்… ஒதறி தள்ளினா. திமிர முடியாதபடி கெட்டியா கட்டிண்டான். ஸிங்க் பைப்பை திறந்து அவளோட கைகளை நண்ணா அலம்பி மேல் துண்டால தொடச்சு விட்டான். அப்டியே அணைச்சுண்டு ஹாலுக்கு அழைச்சுண்டு வந்து சோபாவில் உட்காரவைத்து பக்கத்தில் உட்கார்ந்தான். அவன் மடியில் முகத்தை கவிழ்த்துக்கொண்டு விசும்பி விசும்பி அழுதாள். கூல் சங்கா! கூல்மா! சொல்லிக்கொண்டே தலையை கோதி, கன்னத்தை வருடி ஒடம்பு பூரா லேசா பிடிச்சு விட்ட மாதிரி தடவி விட்டான். அவ்ளோவும் சங்கரிக்கு வேண்டி இருந்தது. அவளை அப்படியே படுக்க வைத்து விட்டு எழுந்து போனான். ஸ்டவ்வை மூட்டி பாலை சுட வச்சு திக்கா போர்ன்வீடா கரைச்சு
எடுத்து வந்து குடிக்க வச்சான். நீங்க ஏதாவது சாப்டேளா? ஒனக்கு போர்ன்வீடா கலக்கறச்சயே எனக்கும் கலந்து குடிச்சூட்டேன். சங்கரிக்கு ஒடம்புல கொஞ்சம் தெம்பு வந்தது. மனசுக்கு வரணுமே!!
ரகுபதி சோபாவுல உக்காந்துண்டு சங்கரிய மடியில சாய்ச்சு
ண்டு ஏண்டி சங்கி இப்டி அசடாயிட்டே. நீ படிச்சவதானே. நாலும் தெரிஞ்சவ தானே. நீயே எத்தனையோ பேருக்கு அட்வைஸ் பண்ணியிருக்கே. ஆமான்னா. அட்வைஸ் பண்ணிருக்கேன். ஆனா தனக்குன்னு வரப்போ மகாபாரதமா தெரியறது. இப்போ நம்மாத்துல ஒரு ஆரம்பமும் ஒரு முடிவும் நடந்துண்டு இருக்கு. நம்ப சவிதா பதினாலு வயசுல பெரியவ ஆயிருக்கா. இந்த காலத்துல பன்னண்டு வயசுல கூட பொண் கொழந்தேள் ப்யூபர்டி அடைஞ்சூடறது. அதுகளுக்கு எங்கேன்னு காத்துண்டிருந்து பீரியட்ஸ் டைம்ல வயத்து வலி வந்து படுத்தறது. இந்த பொண் கொழந்தேளுக்கு இது ஒரு டர்னிங் பாய்ன்ட். புதுசு புதுசா ஹார்மோன் சுரக்கறது. ஜெனிடல் ஆர்கன்ஸெல்லாம் வளர்ந்து வேலை செய்ய ஆரம்பிக்கறது. ஒன்னாட்டம் நாப்பத்தஞ்சு வயசுக்கப்புறம் பொம்மனாட்டிகளுக்கு அடுத்த டர்னிங் பாய்ன்ட். மெனோபாஸ்.மாசாந்தரம் ரெகுலரா வர்ர பீரியட்ஸ் இர்ரெகுலர் ஆகும். ரெண்டு மூணு மாசத்துக்கு வராமயே இருந்து, நின்னூடுத்து போல இருக்குன்னு நெனைக்கறச்சே திடீர்னு வந்து பதனஞ்சு இரவது நாளுக்கு ஒரு வட்டம் எக்கச்சக்கமா கொட்டும். அஅது ஹார்மோன்ஸ் சேன்ஜ் ஆயிண்டிருக்கற நேரம். ஜெனிடல் ஆர்கன்ஸும் டிஃபங்க்ட் ஆயிண்டிருக்கும். இந்த சமயத்துல இன்னதுன்னு சொல்ல முடியாத ஒடம்பு வேதனை. ஒடம்பு வேதனைய விட மன வேதனை அதிகம். insecured ஆயிட்டோம்ங்கற மனப்ராந்தி. இவ்ளோ நாளா ஹஸ்பண்டுக்கு ஸர்வீசபிளா இருந்தோம். அதனாலதான் நம்ப மேல ஆசையும் பாசமுமா இருந்தார். இனிமே அவருக்கு நம்பளால சுகம் கொடுக்க முடியாது. அதனால அவருக்கு நம்ம கிட்ட இருக்கற ஆசையும் மோகமும் இருக்காதூங்கற அதீத கற்பனை. இந்த அதீத கற்பனை ரொம்ப இடியாடிக். எந்த ஒரு ஹஸ்பண்டும் மெனோபாஸ் ஆன தன் ஒய்ஃபை அம்போன்னு விட்டூடறதில்ல. பாக்கி நாள் பூரா சந்தோஷமா வாழ்ந்துண்டு தான் இருக்கா. ஆரம்பத்துல இருந்த மனப்பான்மை போகப்போக சரியாயிடும்.ரகுபதி சங்கரிக்கு ஒரு குட்டி லெக்சரே அடிச்சான். அவன் பேசினதுல இருந்த லாஜிக் அவளுக்கு நண்ணாவே புரிஞ்சுது. எம் மனசுக்குள்ளயும் ஒடம்புக்குள்ளயும் நொழைஞ்சு பார்த்த மாதிரி எவ்ளோ துல்லியமா சொல்றான்னு ஆச்சர்யமா இருந்தது. மனசுல தெம்பு வந்தூடுத்து. எதையும் தாங்கிக்கற மனத்தெம்பு இருந்தா ஒடம்பு வேதனை வெறும் ஜுஜுபி.
சரி சங்கரி! நீ ரொம்ப டயர்டா இருக்கே. சித்த நேரம் படுத்துண்டு ரெஸ்ட் எடு. நான் வஸந்தபவன்ல லன்ச்சுக்கு ஆர்டர் பண்றேன். சாப்டுக்கவம். நத்திங் டூயிங். நான் கார்த்தால அல்பத்தனமா என்செல்லங்க மேல எரிஞ்சு விழுந்தூட்டேன். நான் போயி குளிச்சூட்டு வந்தூடறேன். அனிருத் கேட்ட ஃப்ரைட் ரைஸும் பூந்தி ரைத்தாவும் பண்ணப்போறேன். காலேஜ்லேர்ந்து கொழந்த வந்ததும் நானே ஊட்டி விடப்போறேன். நம்ப சவிதாக்குட்டிக்கு பனங்கல்கண்டு போட்டு உளுத்தங்களி கெளறி தரணும்.
No comments:
Post a Comment