Monday, July 17, 2023

விபூதியை வாங்கும் போது ஒரு கையை நீட்டி வாங்கக் கூடாது ஏன் தெரியுமா?

 *விபூதியை எப்படி பெற வேண்டும்*

👉 இறைவழிபாட்டில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது திருநீறு. எந்த கோயிலுக்கு சென்றாலும் திருநீறு நெற்றியில் இடுவதற்கு கொடுக்கப்படுகிறது.
👉 நம் நெற்றியில் வைக்கப்படும் திருநீறு, சூரிய கதிர்களின் சக்தி அலைகளை ஈர்த்து நம் நெற்றி வழியாக கடத்தும் தன்மையுடையது.
👉 திருநீறு மருத்துவ குணமுடையது. ஆதலால் திருநீறை நீரில் குழைத்து நெற்றியில் பூசினால் கபாலத்தில் உள்ள நீர் வற்றி பல வியாதிகள் தீரும் என்று கருதப்படுகிறது.
👉 திருநீறுக்கு இரட்சை, சாரம், விபூதி, பஸ்மம், பசிதம் என்று பல பெயர்கள் உள்ளது.
👉 பசுவானது மகாலட்சுமியின் அம்சமாக விளங்குகிறது. பசுவின் சாணத்தை அக்னியில் இட்டு பஸ்பமாக்கி திருநீறு தயாரிக்கப்படுகிறது.
👉 இவ்வாறு பெறப்படும் திருநீறு உடலை சுத்தப்படுத்தி, அதற்குள் உள்ள ஆத்மாவை பரிசுத்தமாக்கும் திறன் பெற்றது.
*திருநீறை பெறும் போது நாம் கவனிக்க வேண்டியவை...*
👉 கோயிலில் விபூதிப் பிரசாதம் வாங்கும் போது ஒற்றை கையை மட்டும் நீட்டி வாங்கக்கூடாது.
👉 வலக்கையின் கீழே இடக்கையைச் சேர்த்து வைத்து தான் விபூதியை வாங்க வேண்டும்.
👉 விபூதியை வாங்கும் போது "திருச்சிற்றம்பலம்" என்றும், விபூதியை நெற்றியில் இடும் போது "பஞ்சாட்சர" மந்திரத்தையும் ஜபிக்க வேண்டும்.
👉 விபூதியை இடக்கையில் கொட்டி, அதிலிருந்து எடுத்து நெற்றியில் இடக்கூடாது.
👉 வலக்கையில் உள்ள விபூதியை அப்படியே நெற்றியில் இட வேண்டும்.
👉 அவ்விதம் செய்ய இயலாவிட்டால், ஒரு சிறுதாளில் விபூதியை இட்டு, அதிலிருந்து எடுத்து நெற்றியில் வைக்கலாம்.
👉 வயதில் நம்மைவிட இளையவர் கைகளிலிருந்து விபூதியை எடுத்து வைக்கக்கூடாது.
👉 விபூதியை நம் கையில் இடச் செய்து, அதிலிருந்து தான் எடுத்து நம் நெற்றியில் இட வேண்டும்.
👉 குங்குமத்தை இளையவர் கைகளிலிருந்து எடுத்து நெற்றியில் வைக்கலாம்.
👉 நடந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ விபூதியை வைக்கக்கூடாது. ஆச்சாரியார், சிவனடியார் இவர்களிடம் விபூதியை பெறும்போது அவர்களை வணங்கி விட்டு பெற வேண்டும்.
👉 வடக்கு அல்லது கிழக்கு முகமாக நின்று தான் திருநீறு இட வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...