பெரிய பெரிய டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் எல்லாம் இளையராஜா என்னும் இசையமைப்பாளரைப் பார்க்க வரிசையில் நிற்பார்களாம்.
போட்டாப்போட்டி போட்டுக் கொண்டு இவரின் கால்ஷீட் கிடைக்க ஏங்குவார்களாம் இயக்குனர்கள்.
இந்த நிகழ்வுகள் எல்லாம் நமக்கு உணர்த்துவது என்ன.
எல்லாமே இளையராஜா என்னும் ஓர் இசைமேதையின் திறமைபற்றி சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன, என்பது ஒரு புறமிருக்க, இளையராஜா திரைத்துறைக்கு வரும்வரை, என்னவெல்லாம் அத்துறையில் நடந்திருக்கும் என நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா, ஒரு சினிமா ரசிகராக.
இளையராஜா வந்த பிறகு
1). நிறைய படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன.
2). ‘லோ பட்ஜெட்’ படங்கள் பல வெளியாயின.
3). தயாரிப்பாளர்கள் பலர் உருவாயினர்.
4). புதுப்புது டைரக்டர்கள் உருவானார்கள்.
5). புதுப்புது நடிகர்கள் அறிமுகமானார்கள்.
6). ஸ்டுடியோ கலாச்சாரம் மறைய ஆரம்பித்தது.
7). ‘அவுட் டோர்’ ஷூட்டிங்குகள், கிராமத்து வயல்வெளிகளில் நடப்பது அதிகரித்தது.
8. பாடலாசிரியர்களின் எண்ணிக்கை கூடியது.
இளையராஜா அவர்கள் வரும் முன் இவையாவும் ஏன் நடக்கவில்லை, என்பதை நாம் யோசித்திருப்போமா.
எப்படி கர்நாகட சங்கீத ராகங்கள் எல்லாம் சங்கீத ஞானம் பெற்ற ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே பாடப்பட்டும் ரசிக்கப்பட்டும் வந்தனவோ,
அதுபோலவே, பிரபலமடைந்து புகழ்பெற்று நல்ல வசதிபடைத்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், வினியோகஸ்தர்கள், ஏன், சில சமயங்களில் ஹீரோக்களும்கூட, தங்களின் செல்வாக்கைப் (influence) பயன்படுத்தி தங்கள் வசதிக்கு ஏற்றாற்போல் இசையமைப்பாளர்களை தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்தித் திரையிசையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருப்பார்களோ, என நினைக்கத் தோன்றுகிறதல்லவா.
அவரவரும் அவரவர் துறையில் தங்களுக்கு போட்டியாக எவரும் வந்துவிடக் கூடாதென்று, திரையிசையை ஒரு பகடைக் காயாக பயன்படுத்தியிருக்கலாம்தானே.
மீண்டும் அதே உவமைதான்,
எப்படி இளையராஜா அவர்கள் வந்த பிறகு கர்நாடக ராகங்கள் எல்லாம் எளிமையான மெட்டுக்களின் உருவம் பெற்று, பாரபட்சமின்றி சாதாரண நமக்கும் புரிந்து ரசிக்கும்படியாக திரையிசை அமையப் பெற்றதோ,
அதுபோலவே பாரபட்சமின்றி அனைவருக்கும் அவரவர் திறமைக் கேற்ப திரைத்துறையில் வாய்ப்புகள் கிட்டும்படியாக ஒரு ‘சிஸ்டத்தை’க் கொண்டுவந்தவர், இளையராஜா அவர்களே.
இதன் காரணமாகவே மேற்கண்ட பல மாற்றங்கள் திரைத்துறையில் ஏற்பட்டன.
அவ்வாறு ஏற்படக் காரணமாக இருந்த இளையராஜா அவர்களை ஒதுக்குவதற்கான சதி செயல்கள் நடைபெறத் துவங்கியதுதான் தமிழ்திரைத்துறை வரலாற்றில் வருத்தமான ஒரு செய்தியாகும்.
ஆம், அந்த சதியானது நாளடைவில் கூட்டு சதியாக மாற்றம் பெற்றது. தயாரிப்பு, டைரக்ஷன் என இத்துறைகள் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் ஒரு புறமும், பாடலாசிரியர்கள் வரிசையில் ஒரே ஒருவர் மட்டுமே மறுபுறமுமாக, சதி வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.
அந்தப் பாடலாசிரியர் மட்டுமே கிட்டத்தட்ட 37 இசையமைப்பாளர்களை தமிழ்த்திரையுலகிற்கு, இளையராஜா அவர்களுக்கு மாற்றாகக் கொண்டுவர முயன்று தோல்வியைத் தழுவியுள்ளார். இது அவராகவே வெளிப்படையாகச் சொன்னது.
ஆக மொத்தத்தில், சினிமாத் துறையிலும்கூட பலம் மிக்கவர்களே அத்துறை தங்களுக்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்று எதையும் செய்யத் துணிந்தவர்கள் நிறைந்த ஒரு துறைதான், என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
எல்லோருக்கும் சம வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற ஒழுக்க நெறியைப் பின்பற்றும் இளையராஜா போன்ற நல்லுள்ளங்கள் அத்துறையில் ஏமாற்றத்தையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவர்களை வளரவிட மாட்டார்கள், அந்த சதியாளர்கள்.
இறுதியில் நஷ்டம், இசை ரசிகர்கள் நமக்கே.

No comments:
Post a Comment