Sunday, July 23, 2023

கோபாலபுர வீடு.

 நாமக்கல் கவிஞர் வெ ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவல் மலைக் கள்ளன். விடுதலைப் போராட்ட வீரரான அவர் காந்திய வழியில் நடைபெற்ற போராட்டாத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது எழுதிய நாவல் இது.

ஏற்கனவே மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி, மணமகள், பராசக்தி, பணம், திரும்பிப்பார் போன்ற வெற்றிகரமாக திரையில் ஓடிய படங்களுக்கு கலைஞர் உரையாடல் எழுதிய போது, கோவை பட்ஷிராஜா படக் கம்பெனி மலைக் கள்ளன் நாவலை படமாக்க முயன்றது. மனோகரா படத்துக்கு வேலை செய்துகொண்டிருந்த போது ஸ்ரீராமலு அந்த படத்திற்கு கலைஞர் கருணாநிதி உரைநடை எழுதினால் நன்றாக இருக்கும் என எண்ணினார். அதில் எம்ஜிஆர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என முடிவெடுத்து கலைஞரை சந்தித்தார்.
கலைஞரோ நான் எழுதுகிறேன் ஆனால் நாமக்கல் கவிஞர் காங்கிரஸ்காரர் அவரிடம் எப்படி அனுமதி கேட்பது நானோ திராவிட இயக்கத்தை சேர்ந்தவன் என தயங்கினார்.
எம்ஜிஆரும் ஸ்ரீராமலுவும் நாமக்கல் கவிஞரை அணுக,நாவலை படமாக்க சந்தோஷப்பட்டார். அவரோ வளருகின்ற கதை ஆசிரியராக இருப்பது கதைக்கு வலு சேர்க்கும். கலைஞரைப் போல நல்ல தமிழ் எழுத்தாளர்கள் எழுதினால் படத்துக்கு சிறப்பாக அமையும் என முழுமனதோடு ஒப்புக்கோண்டார்.
எந்த விதமான அரசியல் அனல் பறக்கும் உரையாடல் இல்லாமல் திரைக்கதையும் எழுதி முடித்து படம் வெளியாகியது.
படம் மிகப்பெரிய வசூல். 90 லட்ச ரூபாய் வசூல் என்பது அந்த 1954 இல் என்பது பெரிய யானையைப் போன்ற பெரும்பணம்.
படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், சிங்களம் என பன்மொழிகளில் வெளியிட்டனர்.
இந்திய அரசு முதன்முதலாக பரிசு கொடுத்தபோது அதற்கான வெள்ளிப்பதக்கத்தை பெற்றது.
எம்ஜிஆர் என மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக உருவானார்.
இந்த வெற்றிக்கு பின்பு 1955 ஆம் அண்டு சென்னையில் திரைப்பட விநியோகிஸ்தர் சரபேச அய்யர் என்பவரிடம் இருந்து கலைஞர் கோபாலபுரத்தில் ஒரு வீடு வாங்குகிறார்.
1969 இல் ஆட்சிக்கு வந்த கலைஞர் அப்போதே விடுதலைப் போராட்டத் தியாகிகள் ஓய்வூதியம் வழங்கி நாமக்கல் கவிஞருக்கு மதிப்பளித்தார். தவிர 1989 ஆம் ஆண்டு கோட்டை வளாகத்திற்கு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை மாளிகை என பெயர் வைத்தார்.
மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், பெரியவர் பக்தவட்சலம் போன்ற காங்கிரஸ் அரசு மறந்து போன விடுதலை வீரரை கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு மறக்கவில்லை.
தனது 86 வது பிறந்த நாளில் தனக்கும் தனது இணையர் காலத்துக்கு பிறகு அந்த வீடு அன்னை அஞ்சுகம் ட்ரஸ்ட் மருத்துவமனைக்கு எழுதிவைத்துள்ளார்.
May be an illustration of text that says 'வசனம் மு.கருணந்தி -0:36'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...