Tuesday, July 18, 2023

பொன்முடியின் வீட்டில் ரூ.81.7 லட்சம் பணம் பறிமுதல்.. ரூ.41.9 கோடி வைப்பு நிதி முடக்கம்: அமலாக்கத்துறை தகவல் .

 தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடுகள், அலுவலகங்கள் என அவர் தொடர்புடைய 7 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பொன்முடியின் வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. சோதனையின் முடிவில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. இன்றும் பொன்முடி விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் (PMLA) அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி. தொடர்புடைய 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது ரூ.81.7 லட்சம் பணம், ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. வங்கி கணக்கில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருந்த ரூ.41.9 கோடி முடக்கப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை கூறி உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...