Saturday, July 15, 2023

எவ்வளவு சொன்னாலும் இங்குள்ள வர்களுக்கு புரியாது.வெளிநாட்டில் வேலை பார்க்கும் தமிழர்களின் நிலைமை.

 ஒரு இஞ்சினீரிங் டிப்ளமாவோடு மத்திய கிழக்கு வளைகுடா நாட்டிற்கு வேலைக்கு வந்த ஒரு தமிழ் நாட்டு அன்பர் என்னிடம் கூறியது...

...
இந்தியோ அரபியோ தெரியாம ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டேன் சார் ..வெறுத்துப்போய் திரும்பி ஊருக்கே போய்டலாமான்னு சில நேரம் தோணுச்சு. இங்க இருக்குற இந்தியர்கள் பெரும்பாலும் இந்தி (தான்) பேசுறாய்ங்க. இந்தி பேசுற ஆளை அரபிக்காரய்ங்க கொஞ்சமாச்சும் மதிக்கிறாய்ங்க . இங்க வர்ரதுக்காக வாங்குன கடனும் அதுக்கான வட்டியும் கண்ணு முன்னாடி வந்துச்சு .
....
வைராக்யமா ஆறு மாசத்துல இந்தியும் அரபியும் பேச கத்துக்கிட்டேன். இப்போ பரவாயில்லை சார் .எட்டு வருஷமாச்சு. கடனை அடைச்சுட்டேன். சகோதரியை நல்ல இடத்தில கல்யாணம் பண்ணி கொடுத்துட்டேன் .ரெண்டு பசங்க சார்.. ஸ்கூலுக்கு போறாய்ங்க.. லீவு நேரத்துல இந்தி / ஃபிரெஞ்சு / ஜெர்மன் /மாண்டரின்னு ஏதாவது ஒரு மொழியையாவது கத்துக்கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன் சார் . நான் பட்ட கஷ்டத்தை அவிங்க படக்கூடாதுல்ல என்றார்.
.....
கூடுதலாக ஒரு மொழியை தெரிஞ்சுக்கோடா ..என்னிக்கு இருந்தாலும் அது நல்லது ன்னு சொன்னா ...ஆமா இந்தி படிக்கிறவனே நம்ம ஊர்ல வந்து பானி பூரி விக்கிறான்னு வாதம் புரிபவர்களிடம் ஒன்றும் சொல்வதற்கில்லை..
.....
இன்றளவும் சென்னை சவுகார் பேட்டை பகுதியில் நன்றாக தமிழ் பேசிடும் பல வட இந்தியர்கள் பலவிதமான தொழில்களை செய்கிறார்கள். தமிழர்கள் பலரும் அவர்களிடம் வேலை செய்வதை பார்த்து இருக்கிறேன்.
....
கூடுதலாக ஒரு மொழி தெரிந்துக்கொள்வது ஒருவருக்கு லாபமே. தாய் மொழி தமிழ் மொழி ..உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு..என்று கூவுபவர்கள் கூட தத்தம் வாரிசுகளுக்கு ஆங்கில வழி கல்வியை புகற்றுவது தமிழ் நாட்டில் எதார்த்தமான ஒன்று. ஆங்கிலமும் (குழந்தைகளின் மீது தமிழ் பேசிடும் பெற்றோரால்) திணிக்கப்படும் ஒரு மொழி தான்.
......
இந்தி பேசும் மற்ற மாநிலங்களில் தமிழ் கட்டாயமாக்க கற்க வேண்டும் என்று கூறுபவர்கள் கூட , தமிழ் நாட்டில் இங்கிலீஷ் படிக்கிறோம் ஆகையால் இங்கிலாந்தில் எல்லோரும் தமிழ் படிக்க வேண்டும் என்று சொல்ல மாட்டேங்கிறாய்ங்களே ..ஏன் ?
......
விருப்பமிருந்தா கத்துக்கோங்கன்னு சொன்னா கெட்டிக்கார சமுதாயம் உடனே அதை கத்துக்குற வேலையில இறங்கிடும். அவ்வளவு புத்திசாலித்தனமோ கெட்டிகாரத்தனமோ இல்லாத சமுதாயம் படிக்காம பின்தங்கிடும். ஆகையால் பல சமயங்களில் கல்வியை வலிந்து கட்டாயப்படுத்தி திணித்தே ஆக வேண்டும்.
.......
தமிழ் நாட்டில் இருக்கும் சி.பி.எஸ்.இ . பாட திட்டத்தை பின்பற்றும் (தனியார்) பள்ளிகளில் இந்தி இருக்கலாமாம் . ஆனால் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் அரசு பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்பட மாட்டாது என்பது என் பார்வையில் ஒரு வித ஏமாற்றுவேலையாகத் தான் தெரிகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...