Monday, July 17, 2023

இந்த பதிவை நிதானமாக படித்து பிறகு பதில் சொல்லுங்கள்.

 நீங்கள் உடனே உங்கள் பீரோ/wardrobe ஐ திறந்து பாருங்கள். அதில் உங்கள் பேன்ட், சர்ட், டீ சர்ட், ஜிப்பா, வேஷ்டி, புதிய பனியன் ஜெட்டிகள் எத்தனை இருக்கிறது என்று என்னிப் பாருங்கள். ஒவ்வொன்றிலும் குறைந்தது அரை டஜன் இருக்கும். சிலரிடம் ஒரு டஜன் கூட இருக்கும். இது இல்லாமல் உங்கள் உறவினர்கள் வீட்டில் விஷேசங்களில் கொடுத்த 4-5 பேன்ட் சர்ட் பிட்டுகள், சரிகை வேஷ்டிகள் இருக்கும். ஆனால் நீங்கள் உபயோகிப்பதோ இரண்டு அல்லது மூன்று செட் உடைகள். கண்டிப்பாக மற்றவைகளை நீங்கள் உபயோகிக்க மாட்டீர்கள்/யாருக்கும் தரவும் மாட்டீர்கள். இப்போது உங்கள் அன்றாட உடை பர்முடாஸ், வேஷ்டி/லுங்கி/டீ ஷர்ட் அவ்வளவு தான்.

30-40 வருடங்களுக்கு முன் அப்பா சட்டையை பையன் போட்டுக் கொண்டு இருந்தான். இப்போது உங்கள் உடைகளை உங்கள் பையன் சீன்டக்கூட மாட்டான். புதிய உடைகளை உங்கள் உறவினர்/நண்பர்கள் வீட்டு விழாவில் பரிசாக கொடுக்கலாம் என்று வைத்திருப்பீர்கள் (பொம்மை கொலு ரவிக்கை துண்டு)
யோசித்துப் பாருங்கள். இந்த நிலை தொடரவேண்டுமா. பழையதை ஏழைகளுக்கு/அனாதை ஆசிரமத்தில் கொடுத்து விடலாமே. உங்கள் வீட்டில் அனாவசியமாக இருக்கும் பொருட்கள் குறையும். உங்களுக்கு புண்ணியம்/நிம்மதி.
பழையதை போட்டு எவர்சில்வர்/பிளாஸ்டிக் சாமான்கள் வாங்கலாம் என்று மட்டும் சொல்லாதீர்கள்.
பெண்களைப் பற்றி நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை (பின் விளைவுகளை கருத்தில் கொண்டு)
பழையன கழிதலும் புதியன புகுதலும் concept நமக்கு வேண்டாம். பழையன கழிந்தால் சரி. புதியன புகுதல் வேண்டாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...