Friday, July 21, 2023

வி என் சிதம்பரம் (கமலா தியேட்டர்) எழுத்தில்....

 விழாக்களில் கலந்து கொள்வதற்கு வந்தால், சிவாஜி அண்ணன் எங்கள் வீட்டில் இரண்டு நாட்களாவது தங்கி, அனைவரிடமும் ஜாலியாகப் பேசி அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார். எங்கள் செட்டிநாடு பாஷையிலேயே பேசுவார்! நாங்கள் அம்மாவை 'ஆத்தா' என்று தான் அழைப்போம். அவரும் எனது தாயாரை ஆத்தா என்றே அழைப்பார். ஒரு நாள், ஆத்தா... என்ன இப்படி ஒரு கறுத்தப் பிள்ளையா பெத்திருக்கீக... என்று என்னைக் கிண்டலடித்தார். அதற்கு என் ஆத்தா, "பொறக்கும் போது செவப்பாத் தான் இருந்தான், பணம் காசைத் தேடித் தேடி அலஞ்சு தான் இப்படிக் கறுத்துப் போனான்" என்று சொன்னதும் "பார்த்தீகளா சீனாதானா ஒரு அம்மா எப்பவுமே தன் பிள்ளயை விட்டுக் கொடுக்க மாட்டா" என்றார்.

திடீரென்று எங்கய்யா உன் அழகுப் பேத்தி? என்பார். என் பேத்தி கமலா நல்ல அழகு. அதைத் தான் இப்படிக் கேட்பார். பிறகு உனக்குப் போய் இப்படி ஒரு அழகுப் பேத்தியா என்று கேலியாகச் சொல்வார். அண்ணே, என் மனைவி அழகு, மகனும் மருமகளும் நல்ல அழகு... அதனால பேத்தி சூப்பர் அழகு என்பேன். இப்படியாக, அவர் எங்க வீட்டுக்கு வந்துட்டா கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது. எங்கள் குடும்பத்துல ஒருத்தராகவே பழகினார் அண்ணன் சிவாஜி.
May be an image of 7 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...